அவருடைய வார்த்தையை நிரூபித்தல் Jeffersonville, Indiana, USA 64-0816 1நாம் நின்றவண்ணமாக தலைவணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, உமது ஜனங்கள் உமது நாமத்தினால் கூடியிருக்கும் உமது வீட்டில், இன்று காலை உமது சமூகத்தில் வரும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, எல்லாமே உம்முடையது. இந்த ஆராதனையில் தேவனற்றவர்கள் கிறிஸ்துவற்றவர்கள் இரட்சிக்கப்படவும், வியாதியஸ்தர் சுகம்பெறவும் பரிசுத்தவான்கள் ஆசீர்வதிக்கப்படவும் வேண்டும் என்று எங்கள் இருதயங்களில் எழுந்தருளியுள்ள எதிர்நோக்குதலுடன் எங்களை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். கர்த்தாவே, இதை அருள்வீராக. அதன் பிறகு, முடிவில், நாங்கள் எங்கள் தலைகளை தாழ்மையுடன் வணங்கி, இந்த நாளில் எங்களுக்கு நீர் செய்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுப்போம். இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்). 2இன்றிரவு மறுபடியுமாக இங்கு வந்துள்ள சிலாக்கியத்திற்காகவும், இக்காலை ஆராதனையில் பங்குகொண்டு செய்தியைக் கேட்க நீண்ட தூரம் பிரயாணம் செய்து இங்கு வந்துள்ள மக்களாகிய உங்களுக்காகவும் நான் உண்மையில் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என்னைக் காணவோ கேட்கவோ நீங்கள் வரவில்லை என்றும், கர்த்தராகிய இயேசுவை சந்திக்கவே வந்திருக்கிறீர்கள் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தேவன் உங்கள் இருதயத்தின் வாஞ்சையைத் தந்தருளுவார் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நான் திரும்ப வந்துவிட்டேன், என் குடும்பத்தினரை டூசானுக்குக் கொண்டு சென்று திரும்ப வந்துவிட்டேன். நான் அதிக களைப்பாயிருக்கிறேன். சென்ற ஜனவரி மாதம் தொடங்கி, கோடை காலம் முழுவதும் நான் பிரயாணம் செய்து கொண்டேயிருந்துவிட்டு, இப்பொழுது என் நண்பர்கள் சிலருடன் வேட்டை பயணம் மேற்கொண்டு சற்று ஓய்வெடுக்க இவ்வாரம் கென்டக்கிக்கு செல்ல நான் இங்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அடிக்கடி பிரயாணம் செய்தது எனக்கு நடுக்கத்தை விளைவித்துள்ளது. எனவே நான்... பில்லியும் நானும் இருவரும் செல்கின்றோம். எனவே இந்த வாரம் நாங்கள் ஓய்வெடுக்க தேவன் உதவிசெய்ய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். 3கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு இங்கு திரும்பி வர விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு ஒரு விசேஷித்த ஆராதனையாக இருக்கும். அந்த ஆராதனையில் வழக்கமாக செய்வதைக் காட்டிலும் சிறிது வித்தியாசமாகச் செய்யலாம் என்று எண்ணுகிறேன். இதை நான் கூறக் காரணம் என்னவெனில், இதில் சிரத்தை இல்லாதவர்கள் ஆராதனைக்கு வரவேண்டாம் என்பதற்காகவே. ஆனால் ஜனங்கள் வருவார்களானால், கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் எப்பொழுதும் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதுண்டு. அடுத்த ஞாயிறன்று, உங்கள் எல்லாருடைய இருதயங்களிலும் என்ன உள்ளது என்பதை அறியவிரும்புகிறேன். இன்று நீங்கள் இவ்விடம்விட்டுச் செல்லும்போது, உங்கள் இருதயத்தில் உள்ளதை ஒரு தாளில் எழுதி மேசையின் மேல் வைத்துவிடுங்கள். சகோ. நெவில் அவைகளை பில்லிபாலிடம் தந்துவிடுவார். பில்லி அவைகளை என்னிடம் சேர்த்ததுவிடுவான். இவ்வாறு கூறுங்கள்... அது வேதத்தை பொறுத்த கேள்வியாயிருக்குமானால், அதை அவ்விதமாகவே நான் எழுதக் கூறுவது வழக்கம். நான் இதிலிருந்து சிறிது தொடர்ந்து சென்று; உங்கள் இருதயத்தில் ஏதாவது தீராத ஒரு பிரச்சினை இருக்குமானால், ஒருக்கால் அது குடும்பப் பிரச்சினையாயிருக்கலாம். அதை எழுதி சமர்ப்பியுங்கள். உங்கள் பெயரை நீங்கள் எழுத வேண்டியதில்லை. உதாரணமாக, “என் கணவர் இன்னின்னதை செய்கிறார், அது எனக்கு இன்னல் விளைவிக்கிறது. என் மனைவி இன்னின்னதை செய்கிறாள்”, “ஒரு குறிப்பிட்ட காரியம் என் வாழ்க்கையில் நடந்தது என்பது போன்ற உங்கள் இருதயத்திலுள்ள பிரச்சினைகளை மாத்திரம் எழுதுங்கள். உங்களைத் தொல்லைப்படுத்துபவை. அது நலமாயிருக்கும் என்று எண்ணுகிறேன். நீங்களும் அவ்விதம் எண்ணுகிறீர்கள் அல்லவா? ஒருக்கால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் உரைக்கும் பதில் வேறு யாருக்காகிலும் கூட பொருத்தமாயிருக்கலாம். பாருங்கள், அவர்களுக்கும் அதே தொல்லை இருக்கக்கூடும். உங்கள் இருதயத்தில் உள்ளதை சுருக்கமாக எழுதுங்கள். உதாரணமாக, ”என் பிள்ளை தவறான வழியில் செல்வது போல் தோன்றுகிறது. நான் என்னசெய்ய வேண்டும்?“, ”என் கணவர் என்னுடன் சபைக்கு வர மறுக்கிறார். அவர் என்னிடம் கோபம் கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்?. ஒரு மனைவி அந்நிலையில் இருந்தால் அதை எழுதுங்கள். அல்லது, வேதம் இந்த இடத்தில் இப்படி உரைக்கிறது. மற்றொரு இடத்தில் இப்படி உரைக்கிறது. எனக்குப் புரியவில்லை. இதன் அர்த்தம் என்னவென்று அறிய விரும்புகிறேன்.“ ”நான் ஒரு கிறிஸ்தவன். நான் பணிபுரியும் அலுவலகத்தின் முதலாளி இன்னின்னவைகளைக் கூறுகிறார். அவர் என்னை அவருடன் விருந்துக்கு செல்ல அழைக்கிறார். இந்த விருந்தில் அவர்கள் மது அருந்துகின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்?“ பாருங்கள். உங்களுக்குத் தெரியும், மனித உள்ளத்தில் எழும் இத்தகைய கேள்விகள். நீங்கள் அவ்விதம் செய்ய விரும்புகிறோம்... 4அதன்பிறகு நான் அரிசோனாவுக்குச் செல்ல வேண்டும். என்னால் முடிந்தவரை, உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவி செய்ய எனக்கு ஒரு தருணம் கிடைக்கும் என்று எண்ணினேன். நீங்கள் போவதற்கு முன்பு, நிறைய கேள்விகளை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அதை எழுதி இங்கு வைத்துவிட்டுச் செல்லுங்கள். சகோ. நெவில் அல்லது யாராகிலும் ஒருவர் அவைகளை என்னிடம் தந்துவிடுவார். இந்த வாரம், நான் மலையில் இருக்கும் போது, இவைகளை ஆராய்ந்து, இவைகளுக்காக ஜெபித்து, உங்களுக்கு உதவி செய்ய, என்னால் முடிந்தவரை அவை ஒவ்வொன்றுக்கும் வேதப் பிரகாரமான விடையைப் பெற்றுக் கொள்ள எனக்குத் தருணம் உண்டாயிருக்கும். நாம் இங்கு கூடி வந்துள்ள நோக்கமே, ஒருவருக்கொருவர் உதவி செய்யவே. பாருங்கள்? நீங்கள் எனக்காக ஜெபம் செய்து எனக்குதவி செய்கிறீர்கள். நானும் உங்களுக்குதவி செய்ய முடியுமென்று நம்புகிறேன். மறந்துவிடாதீர்கள், அது அடுத்த ஞாயிறு காலை. 5இப்பொழுது, இன்றைக்கு, நாம்... வழக்கம் போல், வெளியிலிருந்து வந்துள்ளவர்கள் நம்முடன் உள்ளனர். நூறு மைல்கள் அப்பாலிருந்து வந்துள்ளவர் எத்தனை பேர். உங்கள் கைகளை உயர்த்துங்கள்? சபையோரில் தொண்ணூற்றொன்பது சதவிகிதம். சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிறன்று நான், “இவ்வளவு தூரத்திலிருந்து வந்துள்ளோர் எத்தனை பேர் என்று கேட்டதற்கு, ஜெபர்ஸன்வில்லிலிருந்து வந்ததாக யாருடைய கையுயர்த்தவில்லை. ஊ! அடுத்த நாள் அதற்கான விளக்கம் எனக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் என்னிடம், ”சகோ. பிரான்ஹாமே, வெளியிலிருந்து வருபவர்களை நாங்கள் உள்ளே அனுப்பி, சபையில் எங்கள் இடங்களை எடுத்துக் கொள்ளச் செய்கிறோம்“ என்றனர். நூற்றுக்கணக்கானோர் ஜெபர்ஸன்வில்லிலிருந்து வருகின்றனர். ஆனால், ”அவர்களால் உள்ளே வர முடிவதில்லை. ஏனெனில் நாங்கள் வெளியேயிருந்து வருபவர்களைக் கண்டோம்“ பாருங்கள். அது ஜெபர்ஸன்வில் மக்களும் சுற்றுவட்டாரத்திலிருந்து வருபவர்களும் புரியும் சிறந்த செயல். ஜெபர்ஸன்வில், நியூ ஆல்பனி, மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து வரும் மக்களுக்கு இதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்துள்ளவர் எத்தனை பேர், உங்கள் கைகளை உயர்த்துங்கள்? ஓ, என்னே! அது அருமையானது. அது... 6சென்ற ஞாயிறன்று, போன வாரம், நான், “மணவாளனும் மணவாட்டிக்குரிய வருங்கால இருப்பிடம்” என்னும் பொருளின் பேரில் பேசினேன். அப்பொழுது ஆயிரத்து ஐந்நூறு சதுரமைல் பரப்பிலிருந்து வந்திருந்தோர் கூடியிருந்தனர் என்று எண்ணுகிறேன். அதுவே நான் குறிப்பிட்ட நகரத்தின் பரப்பு, ஆயிரத்து ஐந்நூறு சதுரமைல். இவ்வாழ்க்கை முடிவுற்ற பின்பு, நான் அந்த நகரத்துக்குச் செல்வேன் என்பதைக் குறித்து அப்பொழுது முதல் களிகூர்ந்து கொண்டிருக்கிறேன். நான் அந்த நகரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால், வேறெந்த கவலையும் எனக்கில்லை. இன்றைக்கு சூரியன் பிரகாசிக்காமல் இருந்தாலும், நாளை என்று ஒன்று வராமல் போனாலும், அதனால் என்ன வித்தியாசம்? நமக்கு ஒரு வாசஸ்தலம், ஒரு இளைப்பாறும் ஸ்தலம் உண்டு. களைப்பாயிருந்தாலும் களைப்பில்லாமல் போனாலும், நமக்கு அந்த இளைப்பாறும் ஸ்தலம் உண்டு. நீங்கள், “அது கிழவனின் கனவு” எனலாம். அல்ல, அல்லவே அல்ல. அது வேதத்திலுள்ள சத்தியம். 7ஒரு இரவு நான் இங்கு பேசி முடித்து விட்டு, வெளியே சென்ற போது, இளைஞன் ஒருவன் இந்த மேடையின் பின்புறத்திலிருந்து என் காரை நோக்கி விரைந்து வந்தான். இந்த இளைஞன், “உங்களிடம் ஒரு வார்த்தை பேச விரும்புகிறேன்” என்றான். பில்லியும் சில சகோதரர்களும் என்னை வழியனுப்ப என்னுடன் கார் உள்ள இடம் வரைக்கும் நடந்து வந்துகொண்டிருந்தனர். அவன், “நான் ஒரு வார்த்தை கூறலாமா?” என்று கேட்டான். நான், “கூறுங்கள், ஐயா”, என்றேன். அவன், “இன்றிரவு நீங்கள் பெண்கள் உடை உடுக்கும் விதத்தைக் குறித்து குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். உங்கள் வயதுள்ள ஒரு மனிதன் அவ்வாறு எண்ணக் கூடும், ஆனால் உங்களுக்கு எனக்குள்ள வயது இருக்குமானால், உங்கள் கருத்து வேறாக இருக்கும்” என்றான். நான், “உங்களுக்கு என்ன வயதாகிறது?” என்று கேட்டேன். அவன், “இருபத்தேழு” என்று விடையளித்தான். நான், “உன்னை விட நான் பத்து பதினைந்து வயது இளையவனாக இருக்கும் போதே, இதே விதமாகத்தான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன்” என்றேன். பாருங்கள்? நான், “இளைஞனே, உன் இருதயத்தில் என்ன உள்ளதோ அதைப் பொறுத்தது. உன் கண்கள் உன் இருதயத்தின் மூலம் காண்கின்றன” என்றேன். அவன் தலைகுனிந்து அங்கிருந்து நடந்து சென்றுவிட்டான். அதற்கு வேறு விடை இல்லை என்று எண்ணுகிறேன். பாருங்கள், இங்கு என்ன உள்ளது என்பதைப் பொறுத்தது. அதுதான் இதன் வழியாக வெளி வருகின்றது. பாருங்கள், இயேசு, “இங்குள்ளதை விட வித்தியாசமான ஒன்றை நீ கூறுவாயானால், நீ ஒரு மாய்மாலக்காரன்” என்றார். 8இன்று காலை சபையோரின் மத்தியில் எங்கோ என் மிகவும் விலையேறப்பெற்ற நண்பர் சங்கை எட்டி பிஸ்கலும் அவருடைய மனைவியும் பிள்ளைகளும் உள்ளதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இன்று காலை கூட்டத்திற்கு வந்துள்ளனர் என்று நினைக்கிறேன். எட்டி, நீங்கள் இங்கு இருக்கிறீர்களா? நான் நினைத்தேன், நீங்கள்... நல்லது, ஒருக்கால் வரவில்லை போலும். சகோதரனே, ஓ, ஆமாம். அங்கே... எட்டி, அதுவல்ல “ஆமென்” இடம் நீங்கள் வரவிரும்பினால், போதகர்களாகிய எங்களுடன் மேடையில் அமர்ந்துகொள்ள உங்களை வரவேற்கிறோம். அதன் பிறகு நாங்கள்... 9கர்த்தர் எனக்கு கரடியையும் கலைமானையும் குறித்த தரிசனத்தைக் காண்பித்த போது சகோ. எட்டி என்னுடன் இருந்தார். அது... அதை நான் உங்களுக்குக் கூறினது எத்தனை பேருக்கு ஞாபகமுள்ளது? சரி, அவர் அங்கிருந்தார். சகோ. எட்டி பிஸ்கல் தான் கட்டம் போட்ட ஷர்ட் அணிந்திருந்த வாலிபன். அவர் அங்கு நின்று கொண்டிருந்தார்... நான் கேட்டேன். அவர்களில் யாராகிலும் கட்டம் போட்ட ஷாட் அணிந்துள்ளனரா என்று கேட்டேன் இல்லை, யாருமே அணிந்திருக்கவில்லை. நான் நல்லது, அது ஒருக்கால்... அது கட்டம் போட்ட ஷர்ட்டாக இருக்க வேண்டும். அங்கு வெள்ளி முனை கொண்ட ஒரு பெரிய சாம்பல் நிறக்கரடியும் கொம்புகள் இப்படி நாற்பத்திரண்டு அங்குலம் நீளமுள்ள ஒருவிதமான மிருகமும் இருக்கும். அது காண்பதற்கு மானைப் போல் இருந்தது“ என்றேன். இது நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இதை இங்கு உரைத்தேன் என்று உங்களுக்குத் தெரியும், ஓ, அதற்கும் முன்பாக, இந்த ஆண்டின் துவக்கத்தில். அதன்பிறகு வேட்டைக்குச் செல்வதற்காக இந்த மனிதனிடமிருந்து அழைப்பைப் பெற்றேன். நான் அந்த மலைப்பிரதேசத்திற்கு முன்பு சென்றிருக்கவில்லை. நாங்கள் சென்ற அந்த இடத்திற்கு. இதை நான் கூறினேன். நாங்கள் சென்ற சிறு பாதை அலாஸ்கா நெடுஞ்சாலையில் உள்ளது. அங்கு மரங்களும் மலைகளும் மிருகங்களும் தவிர வேறொன்றுமில்லை. அன்றிரவு நான் இணைக்கப்பட்ட வண்டியில் (trailer) சகோ. பிஸ்கலிடமும் சகோ. சவுத்விக்கிடமும் இதைப் பற்றி கூறினேன். அவர், “நல்லது, நான்... நாம் ஆடுகள் உள்ள மலைப்பிரதேசத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம். அது அங்கிருக்காது” என்றார். நான், அது இருக்கும். என்னுடன் இருந்த வாலிபர் ஒருவர் கட்டம் போட்ட ஷாட் அணிந்திருந்தார் என்றேன். அப்பொழுது யாருமே கட்டம் போட்ட ஷர்ட் அணிந்திருக்கவில்லை. சகோ. பிஸ்கல் அணிந்திருக்கவில்லை, மற்றவர்கள் யாருமே அணிந்திருக்கவில்லை. 10இரண்டாவது இரவு, மலையில், மரங்கள் வளரும் வரிசைக்கு மேலே, ஒரு ஆட்டுக்கடா எங்கள் கண்களில் பட்டது. அது மிகவும் உயரமான இடத்தில், அங்கு மரங்கள் வளருவதில்லை. அந்த இடத்தில் கலைமான்களும் ஆடுகளும் தவிர வேறொன்றும் இருக்காது. அவைகளில் சிலவற்றை நாங்கள் வழியில் கண்டோம். அன்று பிற்பகல் பாதையில் வந்து கொண்டிருந்த போது, சகோ. பிஸ்கல் தடுக்கி தண்ணீரில் விழுந்து உடைகளை நனைத்துக் கொண்டார். அடுத்த நாள் நாங்கள் நேரத்தோடு எழுந்து, ஆட்டுக்கடாக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று நினைத்து அவைகளைத் தேடிச் சென்றோம். அவருடைய... நாங்கள் அங்கு எழுந்து... நாங்கள் பகல் உணவு அருந்தினோம். எங்களுக்கு ஆட்டுக்கடாக்கள் கிடைக்கவில்லை. சகோ. பிஸ்கல் அப்பொழுது ஒரு கலைமானைச் சுட்டார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். பிறகு நாங்கள் மேலேறிச் சென்றோம். சகோ. சவுத்விக் என்னிடம், “நான் நினைக்கிறேன், நாம்... சகோ. பிரான்ஹாமே, நீங்கள் இன்னும் நடக்க விரும்பினால், நாம் இந்த மலையின் மேலேறி அந்த பள்ளத்தாக்கில் இறங்குவோம். ஆட்டுக்கடாக்கள் அங்கு சென்றிருக்க வழியுண்டு” என்றார். அது நீண்ட தூர நடை. ஆனால் சீக்கிரம் இருட்டடைவதில்லை, பத்து அல்லது பதினொரு மணியளவில் தான் இருட்டடைவது வழக்கம். 11அது கற்பாறை நிறைந்த மலைகளில் நீண்ட நடை. எனக்கு நடக்கப் பிரியம். நாங்கள் அங்கு ஒருவரொருவர் தோளின் மேல் கை போட்டு நின்று கொண்டிருந்தோம். எங்கள் இருவரின் தாடிகளும் நரைத்திருந்தன. நான், “சகோ. பட், என்றாகிலும் ஒருநாள், ஆயிரவருட அரசாட்சியில் அங்குள்ள மலைகள் அனைத்தின் மேலும் நடப்பேன் என்று நம்புகிறேன் என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, அப்பொழுது நான் உங்களுடன் இருப்பேன் என்று நம்புகிறேன்” என்றார். நாங்கள் நின்று கொண்டு கர்த்தரில் களிகூர்ந்து கொண்டிருந்தோம். எனக்கு மலைகள் என்றால் மிகவும் பிரியம். அதன்பிறகு நாங்கள் கீழே இறங்கினோம். அப்பொழுது தான் சகோ. பிஸ்கல் அங்கு கலைமானைச் சுட்டார். அவர் இந்தியர்களுக்கு மிஷனரியாதலால், இதைக் கொண்டு அவருடைய இந்தியர்களைப் போஷிக்க விரும்பினார். எனவே நாங்கள் கீழே சென்று, பகல் உணவு அருந்தி, கலைமானை வெட்டிச் சுத்தம் செய்து, திரும்பி வந்தோம். 12பட்டும் நானும் மலையைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். நாங்கள் சுற்றுமுற்றும் பார்த்தபோது, என் தூரப்பார்வை கண்ணாடியின் மூலம், தூரத்தில், நான் உங்களுக்கு இங்குகூறியது போன்று, தரிசனத்தில் கண்ட அந்த மிருகத்தை தூரக் காட்சியில் கண்டேன். அங்குள்ள சகோ. பிஸ்கல் எங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். நான், “அதோ அந்த மிருகம்” என்றேன். அவர் தூரப்பார்வை கண்ணாடியை கண்களின் மேல் வைத்து, அது பெரிய, முதிய, பிரம்மாண்டமான ஆண் கலைமான்“ என்றார். நான், “இப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதில்லை, இவைகளுக்கு பலகை போன்ற பரந்த கொம்புகள் (panel horns) இருக்கும் என்றல்லவா எண்ணினேன்” என்றேன். ஆனால் இந்த மிருகத்திற்கு ஆணி போன்ற நீண்ட கொம்புகள் இருந்தன. நான் தரிசனத்தில் கண்ட விதமாகவே அது காண்பதற்கு வினோதமான ஒன்றாக இருந்தது. இதற்கு முன்பு நான் கலைமானைச் சுட்டதில்லை. அவர், “நல்லது. கர்த்தர் உங்களுக்கு இதை கொடுத்திருப்பாரானால் அது...” என்றார். 13நான், “ஆம், அது அதுவாகத் தான் நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் கட்டம் போட்ட ஷர்ட் யாரும் அணிந்திருக்கவில்லையே என்பதைக் குறித்து தான் நான் வியக்கிறேன் என்றேன். நான் சுற்றிலும் பார்த்த போது, சகோ. எட்டி அவருடைய மனைவி அதை அவருடைய பையில் போட்டிருக்க வேண்டும், அவள் அவருடன் வந்திருந்தாள். முந்தின நாள் அவர் தண்ணீரில் விழுந்து நனைந்த போது, அவர் ஷர்ட்டை மாற்றிக் கொண்டார். அது கட்டம் போட்ட ஷாட்டாக இருந்தது. நான், ”இதுதான்“ என்றேன். நான் சற்று தூரம் சென்று அந்த கலைமானைச் சுட்ட போது, பட் என்னிடம், சகோ. பிரான்ஹாமே, இந்த கொம்புகள் நாற்பத்திரண்டு அங்குலம் இருக்கும் என்றா சொல்லுகிறீர்கள்?“ என்றார். “அவை அந்த அளவாகத் தான் இருக்கும்” என்றேன். அவர், “அவை தொண்ணூற்றெண்டு அங்குலம் இருக்கும் என்பது போல் எனக்குத் தோன்றுகிறது” என்றார். நான், “இல்லை, அவை நாற்பத்திரண்டு அங்குலம் மட்டுமே இருக்கும்” என்றேன். பட் என்னிடம், “நீங்கள் என்னிடம் கூறின பிரகாரம், நாம் கட்டம் போட்ட ஷர்ட் அணிந்துள்ள இந்த இளைஞர் எட்டியை அடையும் முன்பு (அவர்கள் மலைக்கு கீழே எங்களைச் சந்திக்கக் காத்திருந்தனர். இரண்டு மைல் தூரம் ) நீங்கள் சாம்பல் நிறக் கரடியை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்றார். நான், “அது கர்த்தர் உரைக்கிறதாவது” என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, அந்த கரடி எங்கிருந்து வரும்? என்னால் ஐம்பது மைல் வரை சுற்றிலும் காண முடியும். அது தென்படவில்லையே” என்றார். நான், “அவர் இன்னமும் யோகோவாயீரேயாக இருக்கிறார். கர்த்தர் தமக்கென்று உண்டாக்கிக் கொள்ள முடியும், பாருங்கள், “அவரால் அணில்களை சிருஷ்டிக்க முடியும். அவர் ஆபிரகாமுக்காக ஒரு ஆட்டுக்கடாவை சிருஷ்டிக்க வல்லவராயுள்ள போது. அவர் ஒரு கரடியைக் குறித்து உரைத்திருப்பாரானால், அந்த கரடி தோன்ற வழியுண்டு” என்றேன். 14நாங்கள் வேட்டைப் பொருளாகப் பெற்ற அந்த கனமுள்ள கலைமானை மலைக்குக் கீழே கொண்டு வர முயற்சி செய்தோம். சிறிது நேரம் நான் துப்பாக்கியை கையில் பிடித்துக் கொண்டேன், சிறிது நேரம் அவர் பிடித்துக் கொண்டார். இப்படியாக மாறி மாறி பிடித்துக் கொண்டோம். நாங்கள் ஒரு பெரிய பனிக்கட்டி ஆற்றை (glacier) அடைந்தோம். நாங்கள் அங்கு சென்றோம். அப்பொழுது சற்று உஷ்ணமாயிருந்தது. எனவே உஷ்ணத்தைப் போக்கிக் கொள்ள நாங்கள் பனிக்கட்டி ஆற்றுக்குச் சென்று சிறிது நேரம் உட்கார்ந்தோம். அப்பொழுது பட், “சகோ. பிரான்ஹாமே, நாம் அந்த இரு வாலிபர்கள் எட்டியும் பிளேய்னும் உள்ள இடத்திலிருந்து ஏறக்குறைய ஒரு மைல் தொலைவில் உள்ளோம். அந்த கரடி தென்பட்டால் நலமாயிருக்கும்” என்றார். நான், “பட், நீங்கள் அதை சந்தேகிப்பதாக எண்ணுகிறேன்” என்றேன். அவர், “சகோ. பிரான்ஹாமே, என் சகோதரன் அநேக ஆண்டுகளாக வலிப்பு நோயால் பீடிக்கப்பட்டிருந்தான். முதன் முறையாக நாம் வேறொரு இடத்துக்கு வேட்டைக்காக சென்றிருந்த போது, காண்பதற்கு அவன் எப்படியிருப்பான் என்று நீங்கள் என்னிடம் கூறினீர்கள்” என்றார். கர்த்தர் அந்த தரிசனத்தை எனக்கு அருளின போது, எட்டி என் பக்கத்தில் குதிரை மேல் சவாரி செய்து வந்தார். அந்த பையனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று அவர்களிடம் கூறினேன். அப்பொழுது வலிப்பு நின்றது. எனவே பட், ஆகவே இதை என்னால் சந்தேகிக்க முடியாது“ என்றார். 15நான், “பட், அந்த கரடி எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியாது” என்றேன். அந்த தரிசனத்தை நான் கண்ட போது எனக்கு ஏறக்குறைய ஐம்பது வயது. இப்பொழுது எனக்கு ஐம்பத்தைந்து வயது ஆகின்றது. எனவே அது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அப்பொழுது எனக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயதிருக்கும். நான் அவரிடம், “தரிசனம் ஒரு முறையாவது தவறினதை நான் கண்டதில்லை. அந்த வாலிபர் உள்ள இடத்தை நாம் அடையும் முன்பு, தேவன் எனக்கு அந்த சாம்பல் நிறக் கரடியைத் தருவார்” என்றேன். நாங்கள் மரம் வளருகின்ற பகுதியை ஏறக்குறைய அடைந்தோம். அங்கு சிறிய ஊசியிலை மரம் வளர்ந்திருந்தது. நாங்கள் மலையில் சிறிது கீழே இறங்கின போது அடர்த்தியான மரங்களுக்குள் சென்றோம். பட் அங்கு உட்கார்ந்தார். அவர் தான் வேட்டை பொருளை சுமந்து கொண்டு வந்தார். நான் துப்பாக்கியைப் பிடித்திருந்தேன். அவர், அந்த கரடி தென்பட்டால் நலமாயிருக்கும், இல்லையா என்றார். நான், “அது தென்படும். கவலைப்படாதீர்” என்றேன். அவர், “நான் ஒவ்வொரு மலையையும் பார்த்துவிட்டேன்” என்றார். நான், “நான்... ஆனால் நான் வாக்குத்தத்தத்தைக் காண்கிறேன்” என்றேன். பாருங்கள்? பாருங்கள், அவர் வாக்குத்தத்தம் செய்தார். நான், “அவர் உரைத்த எதுவும்... என்று சொல்லிவிட்டு, ”பட், அங்கு உட்கார்ந்திருப்பது என்ன என்று கேட்டேன். அவர் பார்த்து விட்டு, “அது பெரிய வெள்ளி முனை கொண்ட சாம்பல் நிறக் கரடி. அது தான்” என்றார். நாங்கள் அந்த கரடியைச் சுட்டுவிட்டு திரும்பி வந்த போது... நான் உங்களிடம் உரைத்த அந்த தரிசனத்தில், அந்த துப்பாக்கியைக் குறித்து பயந்தது எனக்கு ஞாபகம் வந்தது. அது சிறிய 270 துப்பாக்கி, சிறிய தோட்டாக்கள், பாருங்கள். அது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரிசனம் உரைத்த விதமாகவே, ஏறக்குறைய ஐந்நூறு கெஜ தூரத்தில் அந்த கரடியை சுட்டு வீழ்த்தினேன். பட் என்னிடம், “நீங்கள் அந்த கரடியின் முதுகில் சுடுங்கள். இதற்கு முன்பு நீங்கள் சாம்பல் நிறக் கரடியை சுட்டு கொன்றிருக்கிறீர்களா”, என்று கேட்டார். நான், “இல்லை” என்றேன். 16அவர், “அவைகளுக்கு மரணம் என்றால் என்னவென்று தெரியாது” என்றார். அதைக் குறித்து நான் பிறகு அறிந்து கொண்டேன். அவர், “அவை அதிர்ச்சியை தாளமாட்டா. எனவே நீங்கள் அதை சுட்டுக் கொன்று போட வேண்டும்” என்றார். நான், “அந்த தரிசனத்தின்படி அதை நான் இருதயத்தில் சுட்டேன்” என்றேன். அவர், “தரிசனம் அவ்வாறு உரைத்திருந்தால், அதை நான் ஆதரிக்கிறேன்” என்றார். நான், “இதோ நாம் செல்வோம்” என்று சொல்லிவிட்டு, நாங்கள் சிறிது அருகில் சென்றோம். நான் துப்பாக்கியை உயர்த்தின போது, கரடி என்னைக் கண்டது. என்னைத் தாக்க அது தான்அதற்கு தேவையாயிருந்தது. நான் கரடியைச் சுட்டேன். அது காயப்பட்டது போல் கூட எனக்குத் தோன்றவில்லை. அது என்னை நோக்கி வந்தது. துப்பாக்கியில் நான் வேறொரு தோட்டாவை நிறைப்பதற்கு முன்பு. அது பட்டுக்கு ஐம்பது கெஜ தூரத்தில் செத்துவிழுந்தது. பட்டின் முகம் வெளுத்தது. அவர், “சகோ. பிரான்ஹாமே, அது என் மடிக்கு வந்து தாக்குவதை நான் விரும்பியிருக்க மாட்டேன்” என்றார். “நானும் கூட” என்றேன். பட், “நீங்கள் அதை சுட்டுக் கொன்றதாக அந்த தரிசனம் உரைத்ததற்காக எனக்கு மிக்க மகிழ்ச்சி”. இப்பொழுது அந்த கலைமானின் கொம்புகள் நாற்பத்திரண்டு அங்குலம் இருக்குமானால் அவர் சொன்ன விதமாக அதைக் கூறுகிறேன், “நான் அலறுவேன்” என்றார். நான், “இப்பொழுதே அலறுங்கள். ஏனெனில் அதன் நீளம் அதுவாகத் தான் இருக்கும்” என்றேன். 17நாங்கள் சகோ. எட்டியை அடைந்த போது அவரிடம் சொன்னேன்... நாங்கள் குதிரைகளைக் கட்டிப் போட்டோம். அவைகளுக்கு கரடி என்றால் பயம். ஓ, என்னே! அவை கரடியின் மணத்தை முகர்ந்துவிட்டன. அதிக நேரமாகிவிட்டதால் கரடியின் தோலை எங்களால் உரிக்க முடியவில்லை. அதற்காக அடுத்த நாள் நாங்கள் வர வேண்டியதாயிற்று. கட்டப்பட்ட குதிரைகளின் கயிறு பத்து முறை அறுந்துவிட்டது, குதிரைகள் எல்லாவிடங்களிலும் ஓடின. நாங்கள் அங்கு அடைந்த போது, பட் சொன்னார்... அவர் சென்று தன் பையிலுள்ள அளவு நாடாவை (tape measure) எடுத்து, “பிளேயின்” என்று கூப்பிட்டார். நான் சகோ. எட்டியிடம், “அந்த சிறு கையை கவனியுங்கள்” என்றேன். அது பில்லி பாலின் சிறு கை, கொம்பின் அருகில் அளவு நாடாவை பிடித்திருப்பது போல் எனக்குத் தோன்றினது. நான், அந்த சிறு கையை கவனியுங்கள் என்று கூறிவிட்டு சகோ. எட்டியை விளையாட்டாகக் குத்தினேன். நாங்கள் பின்னால் காலடி வைத்தோம். அவன் அளவு நாடாவை இப்படி பிடித்த போது, அது சரியாக நாற்பத்திரண்டு அங்குலமாக இருந்தது. பாருங்கள், சரியாக. இயேசு ஒருபோதும் தவறுவதில்லை. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து வரும்வரைக்கும், அது தவறவே முடியாது. 18நமது மத்தியில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் சகோதரன் மற்றும் சகோதரி ஜாக்ஸன் உள்ளதை இப்பொழுது தான் கண்டேன். அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர் என்று எண்ணுகிறேன். சகோ. “ஜாக்ஸன், உங்களை இன்று காலை அறிமுகப்படுத்தினார்களா”?நீங்களும் சகோதரி ஜாக்ஸனும் எழுந்து நில்லுங்கள். இவர்கள் உங்களை காண வேண்டுமென்று விரும்புகிறேன். என் சகோதரன் எட்டி, இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த என் பழைய வேட்டை கூட்டாளி. சகோதரன் ஜாக்ஸன், சகோதரி ஜாக்ஸனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எங்களுடன் நீங்கள் இருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. கட்டிடத்தில் உள்ள போதகர்கள் அனைவரும் ஊழியத்தில் உள்ளவர்கள் உங்கள் கைகளையுயர்த்துங்கள். அது மிகவும் அருமையானது. அழகானது, நல்லது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் எல்லாரும் இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இன்னும் சில நிமிடங்களில் நான் ஜெப வரிசையை அமைக்கப் போகிறேன், எனவே நான்... நீங்கள் எல்லாரும் எழுந்து இங்கு எனக்குப் பிரசங்கித்தால் நலமாயிருக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. 19உங்கள் பற்றையும், அழகான கர்த்தராகிய இயேசுவைக் குறித்து நான் பேசுவதைக் கேட்க நாட்டின் எல்லா பகுதிகளிலுமிருந்து நீங்கள் வந்திருப்பதையும், அவர் என் ஜெபத்தைக் கேட்கிறார் என்னும் உங்கள் நம்பிக்கையையும் நான் நினைத்துப் பார்க்கும்போது! நாற்பத்து ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இச்சபையின் ஒரு அங்கத்தினரை நான் தனிப்பட்ட விதத்தில் பேட்டி கண்டு அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன்... இந்து அவள் மனம் உடைந்து போன ஒரு தாய். அந்த ஸ்திரீயிடம், நான் ஒன்றைக் கூறத் தொடங்கின போது (அவள் யாரென்று எனக்குத் தெரியவில்லை), அந்த படத்தில் நீங்கள் காணும் அதே ஒளி அங்கு வந்தது. அப்பொழுது அவளுடைய தொல்லை தீர்ந்துவிட்டது. அவள் சந்தோஷத்துடன் திரும்பிச் சென்றாள், நாம் வாழ்ந்து வரும் இந்த மாறிக் கொண்டிருக்கும். நேர்மையற்ற காலத்தில் நாம் எதன் மேலும் நம்பிக்கை வைக்க முடியாதிருக்கும் நிலையில், மாறாத, அசையாத ஒரு ராஜ்யம் நமக்குள்ளதற்காக நாம் மிகவும் களி கூருகிறோம். அசையாத ராஜ்யம்! அது ஜிப்ரால்டர் கன்மலையல்ல, ஆனால் நமது விசுவாசம் பயபக்தியுடன் இளைப்பாறக் கூடிய காலங்கள் தோறும் உள்ள அசையாத இரட்சிப்பின் கன்மலையாகிய இயேசு கிறிஸ்து. 20இங்குள்ள என் மனைவிக்கு, முக்கோண வடிவிலுள்ள தந்த பெட்டியில் ஒரு சிறு வேதாகமத்தை வைத்து அதை வெகுமதியாக அளித்த அந்த சகோதரிக்கு நன்றி கூற விரும்புகிறேன். அந்த சிறு பெட்டியைக் குறித்து அவள் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டாள். அவள் அதன் மேல் அன்பு வைத்திருந்தாள். அதில் சில பண்டைய காலத்து என் படங்கள் உள்ளன. அவள் தேவனிடம் வேண்டிக் கொண்டாள். ஒருக்கால் அந்த பெட்டியின் மேல் அவள் சிறிது அதிகமாகவே அன்பு வைத்திருக்கக் கூடும். முக்கோண வடிவிலுள்ள ஒரு சாதாரண பெட்டி, அதற்குள் ஒரு வேதாகமத்தை வைத்து அதை என் மனைவிக்குக் கொடுத்தாள். நன்றி, சகோதரியே. இந்த நீங்கள் பில்லி பாலிடம் அளிக்கும் உங்கள் சிறு வெகுமதிகள் ஒவ்வொன்றும் என்னிடம் சேர்ந்துவிடுகின்றன. நான் எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவன் உங்களுடன் இருப்பாராக. 21மறந்து விட வேண்டாம். அடுத்த ஞாயிறு காலை இன்று ஆராதனை முடிந்தவுடன், உங்கள் கேள்வியை எழுதுங்கள். உங்களால் முடியவில்லை என்றால், அதை அடுத்த ஞாயிறு காலை கொண்டு வாருங்கள். நான் சிறிது நேரத்தோடு வருவேன். அவர்கள் அதை அறைக்கு கொண்டு வரட்டும். அப்பொழுது அவைகளுக்கு வேத அடிப்படையில் பதிலளிக்க எனக்குநேரம் உண்டாயிருக்கும். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலையில் நாம் கேள்விகளுக்கு பதிலளிப்போம். இங்கு அநேக உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன. என் குறிப்புகளை இங்கு வைக்க, அவைகளை சிறிது பின்னால் தள்ளுகிறேன், மற்றும் என்... என் வேதாகமத்தையும் கூட அதாவது என் வேதாகமத்தையும் குறிப்பு புத்தகத்தையும் வைக்க சிறிது இடத்தைப் பெற. ஆனால் நான்... அவை ஒவ்வொன்றுக்காகவும் நான் ஜெபிப்பேன். 22வேத வசனங்களை குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன், எனக்கு குறுகிய நேரம் உள்ளது. சென்றமுறை நான் இங்கிருந்த போது நான் செய்தது போல் உங்களை நான்கு மணி நேரம் பிடித்து வைத்துக் கொண்டது போல் இம்முறை செய்யமாட்டேன். நான் உறுதி எடுத்துக் கொண்டேன் அதாவது அத்தகைய நீளமான பிரசங்கத்தை ஒலிநாடாவில் பதிவு செய்ய வேண்டுமானால், அதை நான் மாத்திரம் இங்கு செய்வேன் என்று. அப்பொழுது உங்களை நீண்ட நேரம் பிடித்து வைக்க வேண்டிய அவசியம் எனக்கு இராது. 23இன்று காலை லீ வேயில் இங்குள்ளாரா டாக்டர் லீ வேயில் இங்குள்ளாரா என்று கேட்க விரும்புகிறேன்.... சகோ. லீ வேயில், இங்கிருக்கிறீர்களா? இருந்தால் உங்கள் கையையர்த்துங்கள். அவர் பின்னால் இருக்கிறாரா? சரி, நன்றி, சகோ. ராய், சகோ. வேயில், அந்த குறிப்புகளை கவனமாக சரி பாருங்கள். நீங்கள் பின்னால் கூட்டத்தில் எங்கோ உள்ளதால், அல்லது ஒருக்கால் ஹாலில் இருக்கலாம், என்னால் உங்களைக் காண முடியவில்லை. நாம் கவனமாயிருக்க வேண்டும், அதிகம் பேர் நின்று கொண்டிருக்கக் கூடாது. தீயணைக்கும் அதிகாரி நம்மை அனுமதிக்கமாட்டார், பாருங்கள், நாம் அதற்கு கட்டுப்பட்டிருக்கிறோம். நீங்கள் எனக்காக இலக்கணவடிவில் எழுதிக் கொண்டிருக்கும் ஏழு சபை காலங்களின் புத்தகத்தில், முதலாம் எபேசு காலத்தில் சேர்க்கப்பட வேண்டிய சர்ப்பத்தின் வித்தைக் குறித்த என் வெளிப்பாட்டை நீங்கள் சரி பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். மிகவும் அழகாக இலக்கணவடிவில் செய்யப்பட்டுள்ளது! அதை நீங்கள் சரி பார்க்க விரும்புகிறேன். சர்ப்பத்தின் வித்துக்கு எதிராக யாராகிலும் கூற நினைத்தால் இப்பொழுது கூறுங்கள் (அது சரியா தவறா என்றும்). கர்த்தர் அதை நேற்று எனக்கு அருளினார், பாருங்கள். ஓ, அது அப்பாற்பட்டது! நான் எப்படி செய்தியைத் தயாரிக்கிறேன் என்றால், நான் தயாரித்துக் கொண்டே செல்லும் போது, ஏதாவதொன்று என் மனதில் படும். அப்பொழுது... அது தேவனால் அருளப்பட்டதென்று நான் அறிந்தால், அதை வேதத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, அங்கு கண்டுபிடிப்பேன். அதன் பிறகு, நான்... அது ஒருபோதும் தவறினதில்லை. ஜனங்கள் என்ன நினைத்த போதிலும், அது ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய சரியாயுள்ளது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்ட பின்பு, அது இன்னும் அதிகமாயுள்ளது. பாருங்கள், அந்த நேரத்தில் அது அதைச் செய்தது. எனவே நாம் இப்பொழுது வேதத்தைப் படிக்கும் போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது வசனத்தைப் பொறுத்த மட்டில்... 24இங்கு பொறியாளர் யாராவது இருப்பார்களானால், ஒலி இங்கு பிரதிபலித்து வருகிறது. பின்னால் உள்ளவர்கள் சரியாக கேட்க முடிகிறதா? கேட்க முடிந்தால் உங்கள் கரங்களையுயர்த்துங்கள். நல்லது! இப்பொழுது நாம் வேதாகமத்தை இரண்டு இடங்களிலுள்ள வேத வசனங்களுக்கு திருப்புவோம். நான் செய்தியை அளித்துவிட்டு, கர்த்தருக்கு சித்தமானால் நேரத்தோடு இங்கிருந்து செல்ல முயற்சி செய்வோம். இப்பொழுது நாம் மாற்கு 5-ம் அதிகாரத்துக்கும், 1இராஜாக்கள் 10-ம் அதிகாரத்துக்கும் திருப்புவோம். நமது வாசல்களில் உள்ள அந்நியருக்கு இதை கூறுகிறேன். எங்கள் ஞாயிறு பள்ளியை நாங்கள் ஒரு பெரிய வகுப்பில் நடத்துகிறோம். அது தான் இங்குள்ள வகுப்பு. அறைகள் அனைத்தும் ஜனங்களால் நிறைந்துள்ளன. எங்களுக்கு தனித்தனி வகுப்புகளாக நடத்த இயலாது. நாங்கள் வசனத்தை சிறிது படித்துவிட்டு, ஒன்றாக ஐக்கியங் கொள்கிறோம். எங்களுக்கு... நாங்கள் ஒரு ஸ்தாபனம் அல்ல. எங்களுக்கு ஸ்தாபனம் எதுவுமில்லை. நாங்கள் கர்த்தரில் சுயாதீனமுள்ளவர்கள். நாங்கள் மூடபக்தி வைராக்கியம் கொண்ட ஒரு கூட்டமல்ல. நாங்கள் வேதத்தை போதிக்கிறோம், அதை மாத்திரமே செய்கிறோம். கர்த்தர் எங்களுக்கு மிகவும் நல்லவராயிருந்து, அதை ஆதரித்து அது உண்மையென்று காண்பிக்கிறார். அது எங்களுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. 25நீங்கள் எந்த நேரத்திலும் இங்கு எங்கள் மத்தியில் வர உங்களை வரவேற்கிறோம். நான் எல்லா நேரத்திலும் இங்கு இருப்பதில்லை. ஆனால் எங்களுக்கு சில சிறந்த போதகர்கள் இங்குள்ளனர். சகோ. நெவில், எங்கள் போதகர்களில் ஒருவர்; சகோ. காப்ஸ், மற்றொரு போதகர்; சகோ. காலின்ஸ், வில்பர் காலின்ஸ், மற்றொரு போதகர் மட்டுமின்றி, வெவ்வேறு பாகங்களில் உள்ள எங்கள் உடன் சபைகளுக்கு போதகர்கள் உள்ளனர். நீங்கள் டெக்ஸாஸில் வசிக்க நேர்ந்தால், மார்டின் சகோதரர் அங்குள்ளனர். மற்றும் சகோதரன்... உங்களுடன் இங்கு வரும் அந்த சகோதரனின் பெயர் என்ன? இன்று காலை நான் சகோ. பிளேரைக் காணவில்லை. ஓ, சகோ. பிளேர், உங்களை நான் பார்க்கவில்லை. பின்னால் சகோ. ரட்டில் இருக்கிறார். அவர் 62-ம் எண் நெடுஞ்சாலையிலுள்ள எங்கள் உடன் சபைக்குப் போதகர். சகோ. ப்ளேர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோ. ஜுனியர் ஜாக்ஸன், எங்கள் மற்றொரு உடன் சபைக்கு போதகராயிருக்கிறார். எங்களுக்கு நாடு முழுவதும், எல்லாவிடங்களிலும் சபைகள் உள்ளன. 26சகோ. ஜாக் பாமர் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது; அவர்களுடைய மகன் வாங்கிய புது காரில் அவர்கள் சிறிது வேகமாக வந்து கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். அதாவது வேகக் கட்டுப்பாட்டை சிறிது மீறி, அவர்களுக்கு விபத்து ஏற்பட்டது. அவருக்கு தாடை எலும்பில் காயம் ஏற்பட்டு அவரால் வரமுடியாமல் வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். அவர் இப்பொழுது நன்றாயிருக்கிறார். இங்குள்ள சகோ. பென், கென்டக்கியிலுள்ள எங்கள் மற்றுமொரு சகோதரன் அவர்களுக்கு பணம் தேவைப்படுமா, தேவைப்பட்டால் சபை உதவி செய்யும் என்று அறிவிக்க அவருடன் இன்று காலை தொலைபேசியில் பேசினபோது அவருக்கு தேவையான பணம் உள்ளது என்று சொல்லிவிட்டார். சகோ. பாமர் சாலை திருப்பத்தில் மிகவும் வேகமாக வந்த காரணத்தால், அங்கு கல்லின் மேல் மோதி, அதனால் அவர் தாடை எலும்பு சிதைவுபட்டது. அந்த இடத்தின் அருகில் இருந்த தொலைபேசியிலிருந்து அவர்கள் என்னை ஜெபம் செய்யக் கேட்டுக் கொண்டார்கள். சகோ. பில்லி காலின்ஸுக்கும் கூட அவருடைய கட்டை விரலில் சிதைவு உண்டாகி, எலும்புமுறிவு ஏற்பட்டதென்று நாம் அறிவோம். அவர்கள் அதை பொருத்த வேண்டியதாயிருந்தது. அவரையும் நாம் ஜெபத்தில் நினைவுகூர விரும்புகிறோம். 27நாம் நிற்கும் காரணம், நமது நாட்டின் கொடி நம்மைக் கடந்து வரும்போது, நமது தேசப்பற்றை தெரிவிக்கும் வகையில் நாம் எழுந்து நிற்கிறோம், அல்லது வணங்கி மரியாதை செலுத்துகிறோம். நமது நாட்டுக்கும் அதன் கொடிக்கும் மேல் நாம் வைத்துள்ள மரியாதையைக் காண்பிக்க அவ்விதம் செய்கிறோம். அதை நாம் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியிருக்க, கர்த்தருடைய வார்த்தையைப் படிக்கும்போது நாம் என்ன செய்யவேண்டும். நாம் பரி. மாற்கு 5-ம் அதிகாரம் 21-ம் வசனம் முதல் 43-ம் வசனம் வரை படிக்கும்போது எழுந்து நிற்போம். இயேசு படவில் ஏறி, மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்த போது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடி வந்தார்கள். அப்பொழுது ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து, என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக் கொண்டான். அவர் அவனோடே கூடப் போனார் , திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்று, அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிற பொழுது, இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டு நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, ஜனக் கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக் கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கையில், ஜெய ஆலயத் தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து, உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத் தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி, பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல், ஜெப ஆலயத் தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, உளளே பிரவேசித்து: நீங்கள் சந்தடி பண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப் பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறு பெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டு பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும் படி சொன்னார். மாற்: 5: 21 - 43 28Iஇராஜாக்கள் 10-ம் அதிகாரத்திலிருந்து இந்த மூன்று வசனங்களைப் படிப்போம்: கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியான போது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள், அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக் கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. 1இரா: 10: 1-3 29ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே, வேதாகமத்தில் இந்த வரலாறுகளை நாங்கள் படிக்கும்போது, எங்கள் இருதயங்கள் களிப்பால் துள்ளுகின்றன. ஏனெனில் நீர் தேவன் என்றும், நீர் மாறாதவர் என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். உமது முறைகளை நீர் ஒருபோதும் மாற்றுவதில்லை, உமது வழிகளை நீர் ஒருபோதும் மாற்றுவதில்லை, நீர் என்றென்றைக்கும் தேவனாக இருந்து வருகிறீர். தேவனே, இன்று காலை நீர் எங்களுக்கு, நாங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நீர் கருதும் இந்த வேத வாக்கியங்களின் அர்த்தத்தை உரைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். எங்கள் இருதயங்கள் பகுத்தறியப்பட்டு, மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று எங்கள் மத்தியில் வந்து, எங்கள் இருதயங்களையும் எங்கள் சிந்தனைகளையும் பகுத்தறிவாராக. ஒன்றுமே விடப்படாமல்... எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் பொங்கி இவ்விடம் விட்டு நாங்கள் செல்லும்போது, அன்றிரவு எம்மாவூருக்குப் போனவர்கள் சொன்னது போல் நாங்களும், “வழியிலே அவர் நம்முடனே பேசின போது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா என்று சொல்வோமாக. நீர் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். நாங்கள் இன்று காலை ஒன்றுகூடியுள்ள பசியுற்ற பிள்ளைகள். ”மனுஷன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்“ என்று எழுதியிருக்கிறதே. இங்கு ஒன்றுகூடியுள்ள எங்களை, கர்த்தாவே, நூற்றுக்கணக்கான, ஆம், ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்து வந்துள்ள இந்த மக்களை ஆசீர்வதிப்பீராக. இவர்கள் வீடு திரும்பும்போது, இவர்களுடைய இருதயங்கள் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நிறைந்த நன்மையான காரியங்களில் திருப்தியடைந்திருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 30வாசித்த இந்த வேதபாகம் அனைத்திலிருந்து மூன்று சொற்கள் கொண்ட ஒரு வினோதமான பொருளின் மேல் பேச விரும்புகிறேன். நீங்கள், “வேதாகமத்தில் இரண்டு அதிகாரங்களின் பாகத்தை நீங்கள் படித்துவிட்டு”, அதன்பேரில் தெரிந்து கொள்ளும் மூன்று சொற்கள் கொண்ட பொருள் மிகச் சிறியது எனலாம். ஆனால், “அவருடைய வார்த்தையை நிரூபித்தல்”, என்னும் மூன்று சொற்கள் அடங்கிய பொருளுக்கு பின்னணியாக அமைய வேண்டுமென்றே இந்த வேதபாகங்களைப் படித்தேன். உங்களுக்குத் தெரியுமா, வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. அது 1தெசலோனிக்கேயர் 5:21. அதில், “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. (ஆங்கிலத்தில் “Prove all things” - அதாவது, “எல்லாவற்றையும் நிரூபியுங்கள்” என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). ஏதாவது ஒன்று நிரூபிக்கப்படும் போது, அது “சரி” அல்லது “தவறு” என்று நிரூபிக்கப்படும். ஏதாவது ஒன்று சந்தேகமாக இருக்குமானால், எது சரியென்று நீங்கள் கண்டுபிடித்து அதை நிரூபிக்க வேண்டும். எது சரியென்று நீங்கள் கண்டு பிடித்த பிறகு, “அதை இறுகப்பிடித்துக் கொள்ளுங்கள்” (ஆங்கில வோதாகமத்தில் “Hold fast” - அதாவது “இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்” - தமிழாக்கியோன்) என்று அந்த வசனம் உரைக்கிறது. வேறுவிதமாகக் கூறினால், அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள், “அதை தளரவிடாதீர்கள். அதாவது அது கைதவறி விழுந்துவிடாதபடிக்கு அதை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்”. அது சரியென்று நிரூபிக்கப்பட்ட பின்பு நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்று சரியில்லை என்று நிரூபிக்கப்படுமானால், அதை வேகமாக விட்டுவிட்டு, அதிலிருந்து விலகுங்கள். தவறான ஒன்றை இறுகப் பற்றிக் கொள்ளாதீர்கள். 31சில சமயங்களில் உறுதியான கிறிஸ்தவர்கள், அருமையானவர்கள். தவறான காரியத்தை சரியென்று எண்ணி அதை பிடித்துக் கொள்ள முடியும். ஆனால் இவை சரியா தவறா என்று நிரூபிக்கப்படுதல் அவசியம். இயேசு வரும்போது பரலோகம் செல்வோம் என்று நாம் எதிர்நோக்கியிருப்பதால், அப்படி செய்வது நம்மனைவரின் கடமையாயுள்ளது. ஒரு கேள்வி போதகரிடத்தில் கொண்டு வரப்படும் போது அதை அவர் தீர்த்துவைத்து, ஜனங்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு முன்னால் அதை நிரூபிப்பது போதகரின் கடமையாகும். ஏனெனில் யாருமே தவறாக இருக்க, தவறான காரியத்தைப் பற்றிக்கொள்ள விரும்புவதில்லை. எனவே நாம் எல்லாவற்றையும் நிரூபிக்க வேண்டும் என்னும் வசனம் நமக்குள்ளது (எல்லா வேதவாக்கியங்களும் நிறைவேற வேண்டும்“ என்று இயேசு கூறியுள்ளார்). அதை நிரூபித்த பின்பு, ” இறுகப் பிடித்துக் கொள்“, ”கெட்டியாகப் பிடித்துக் கொள் , மரணப்பிடி பிடித்துக் கொள். அதை தளரவிடாதே. நலமானதை இறுகப் பிடித்துக்கொள்“. 32நான் பள்ளிக்கூடத்தில் கற்ற ஒன்று என் நினைவுக்கு வருகிறது. உங்களில் அநேகர் அதே பாடத்தை கற்றிருப்பீர்கள். நீங்கள் ஒரு கணக்கை போட்டு அதற்கான விடையை பெற்று கொண்டால், அந்த விடையை அந்த கணக்கின் மூலம் நிரூபிக்க முடியும். எத்தனை பேர் அவ்விதம் செய்திருக்கிறீர்கள் அப்பொழுது உங்கள் விடை சரியா இல்லையாவென்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் கணக்கின் விடை அந்த கணக்கின் மூலமாகவே நிரூபிக்கப்படுகிறது. எனவே உங்களுக்கு சரியான விடை கிடைத்துவிட்டது என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் சிலேட்டில் அல்லது உங்கள் தாளில் உள்ள ஒவ்வொரு விடையும் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அதாவது கணக்கு... விடை கணக்கினால் நிரூபிக்கப்பட்டுவிட்டால், உங்களுக்கு சரியான விடை கிடைத்துவிட்டது. யாருமே அது தவறென்று கூற முடியாது. நீங்கள் அதன்... உங்கள் கணக்கை நீங்கள் கச்சிதமாகவும் சரியாகவும், அதை போட வேண்டிய வழியில் போட்டு, உங்கள் விடை நிரூபிக்கப்பட்டிருந்தால், நீங்கள் சமர்ப்பிக்கும் தாளில் உள்ள கணக்குகளுக்கு நிச்சயமாக 'A' பிரிவு கிடைக்கும் என்னும் உறுதியுடன் உட்கார்ந்து இளைப்பாறலாம். ஏனெனில் உங்கள் விடை கணக்கின் மூலமாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. 33“அதை நிரூபி, அப்பொழுது நான் நம்புவேன்” என்னும் பழமொழி ஒன்றுண்டு. நமது தேசத்தில் உள்ள நாடுகளில் ஒன்றில், “நான் மிஸ்ஸௌரியிலிருந்து வருபவன் எனக்குக் காண்பி” என்னும் வாக்கியத்தைக் கூறுகின்றனர். வேறு விதமாகக் கூறினால், “நான் மிஸ்ஸௌரியிலிருந்து வருபவன், அதை எனக்கு நிரூபித்துக் காண்பி”. ஆனால் இது எப்பொழுதும் கிரியை செய்வதில்லை. ஏனெனில் தேவன் ஒவ்வொரு காலத்துக்கும் அவர் நியமித்த கிரியைகளை நிறைவேற்றி அதை நிரூபித்து. அதை தமது வார்த்தையில் உரைத்து வைத்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் தேவனுடைய வார்த்தை அக்காலத்தில் நிரூபிக்கப்பட்டபோது, பெரும்பாலோர் அதை நிராகரித்துவிட்டனர். எனவே, “அதை நிரூபியுங்கள், நான் நம்புகிறேன்” என்பது உண்மையல்ல. தேவன் உங்களுக்கு விசுவாசத்தை அளித்தால் மாத்திரமே உங்களுக்கு விசுவாசம் இருக்கமுடியும். விசுவாசம் என்பது தேவனுடைய வரம். நீங்கள் எவ்வளவாக மதப்பற்று கொண்டிருந்தாலும், அதை பெற வேண்டுமானால்... உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், உங்கள் விசுவாசம் நிருபிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் மேல் மட்டுமே சார்ந்திருக்க முடியும். 34இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஒவ்வொரு காலத்துக்கும் தேவன் தமது வார்த்தையைப் பகிர்ந்தளித்து, அந்த குறிப்பிட்ட காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்னுரைத்தார். மோசே நோவாவின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. இயேசு மோசேயின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. ஒரு தீர்க்கதரிசி மற்றொரு தீர்க்கதரிசியின் செய்தியுடன் வந்திருந்தால், அது கிரியை செய்திருக்காது. ஆனால் அவர் தமது தீர்க்கதரிசிகளின் மூலமாய் தம்மையும் தமது திட்டத்தையும் முழுமையாக வெளிப்படுத்திவிட்டார். எனவே வேதாகமத்துடன் ஒரு வார்த்தை கூட்டப்படவோ அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தை எடுக்கப்படவோ கூடாது. எனவே நீங்கள் உங்களுடைய கணக்கை... உங்கள் விடையை உங்கள் கணக்கின் மூலம் நிரூபிக்க முடியுமானால், இக்காலத்துக்கென்று நாம் பெற்றுள்ள வார்த்தையின் மூலம் நாம் ஏன் விடையை நிரூபிக்க முடியாது? இந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்கும் என்று வேதம் உரைத்திருக்குமானால், அது வேதத்தில் உள்ளதன் காரணத்தால் அது நிறைவேறும். நீங்கள் ஜனங்களுக்கு எடுத்துரைக்க முயற்சிக்கும் விடை இந்த வேதாகமப் புத்தகத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டால், அது உண்மையாயிருக்க வேண்டும். அது உண்மை. இல்லையென்றால், அது உண்மையல்ல. 35நாம் வேறொன்றைக் காண்கிறோம். அதாவது, “கண்டாலே நம்புதல் என்று மக்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. அது மற்றொரு பழமொழி. அதுவும் கிரியை செய்வதில்லை. அது கிரியை செய்வதில்லை. ஏனெனில் ஒரு மனிதன் உடகார்ந்து கொண்டு ஒன்றை நேராக பார்த்தும் கூட, அது என்னவென்று அறிந்து கொள்ளாதிருக்க வகையுண்டு. ”See“ என்னும் ஆங்கில சொல்லுக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. அது தண்ணீர் நிறைந்த கடலை (sea) குறிக்கலாம். அது ”புரிந்து கொள்ளுதல்“ என்னும் அர்த்தமும் உடையது. அதை ”ஒன்றைக் காணுதல்“ என்றும் அர்த்தம் கொள்ளலாம். ஓ, இப்படியாக நீங்கள் உபேயாகிக்க இத்தகைய பலவித சொற்கள் உண்டு. ஆனால் நீங்கள், ”கண்டாலே நம்புதல் என்று சொல்லும் போது, நீங்கள் தவறாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளும் போது, அதை விசுவாசிக்கிறீர்கள். “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்று இயேசு கூறினார். வேறுவிதமாகக் கூறினால், “ராஜ்யத்தைப் புரிந்து கொள்ளமாட்டான்”, ஏனெனில் ராஜ்யம் என்பது உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியாகும். எனவே உங்களுக்குள் இருக்கும் இது என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி, அது உங்களை என்ன செய்ய வைக்கும் என்று வேதாகமம் கூறியுள்ளதுடன், அது உங்களை செய்ய வைக்கும் செயலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே. அப்பொழுது உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது, பாருங்கள். அப்பொழுது அவர் அந்த பரிசுத்தஆவியே. 36எனவே கண்டாலே நம்புதல் என்பது கிடையாது. அதை சரீரத்தின் புலன்கள் மூலம் என்னால் நிரூபிக்க முடியும் கண்டாலே நம்புதல் என்பது உண்மையல்ல என்பதை, இந்த எண்ணெய் குப்பியை என்னால் காண முடியவில்லை. ஏனெனில் அது என் கையில் எனக்குப் பின்னேயுள்ளது. இருப்பினும் என்னில் உள்ள உணர்ச்சி, அது என் கையில் உள்ளது என்பதை அறிவிக்கிறது. பாருங்கள்? அதை என்னால் காண முடியவில்லை. அது முடியாத காரியம். இப்பொழுது அதை என் கையை நீட்டி எடுக்க முடியாது. அது முடியாத காரியம். இருப்பினும் அதை நான் விசுவாசிக்கிறேன். இது கண்டால் நம்புதல்; இது உணர்ந்தால் நம்புதல்; இப்பொழுது என் கண்களை மூடிக்கொள்கிறேன். என்னால் அதை காணவும் முடியவில்லை. உணரவும் முடியவில்லை. நான் அதை அருகில் கொண்டு வந்து அதை என்னால் முகர முடியுமானால், அது இங்குள்ளது என்பதை என்னால் அப்பொழுது விசுவாசிக்க முடிகிறது. எனவே விசுவாசம் என்பது நம்பப்படாதவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின், ருசி பார்க்கப்படாதவைகளின், உணரப்படாதவைகளின், முகரப்படாதவைகளின் அல்லது கேட்கப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள்! விசுவாசத்துக்கு இளைப்பாறும் இடம் இருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைக்கு முரணான எதுவும் தேவன் பேரிலுள்ள விசுவாசத்துக்கு இளைப்பாறும் இடமாக இருக்க முடியாது. தேவனுடைய வாக்குத்தத்தமே அதன் இளைப்பாறும் இடம். அங்குதான் அது நித்தியமான நிலையைக் கடைபிடிக்கிறது. 37ஆனால் இவையனைத்தின் மத்தியிலும்... இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும், இதுவரை நாம் வாழ்ந்து வந்த இந்த சந்தேகிக்கும் காலத்தில் எல்லா காலங்களிலும் மிகவும் மோசமான இந்த காலத்தில் இந்த சந்தேகம் அனைத்தின் மத்தியிலும், தேவன் ஒவ்வொரு காலத்திலும் செய்து கொண்டு வந்தது போல், இந்தக் காலத்திலும் அவர் வார்த்தை உண்மையென நிரூபித்துக் கொண்டு வருகிறார். அவர்... அவிசுவாசம் தேவன் கிரியை செய்வதை நிறுத்துவதில்லை. அது அவரைத் தடை செய்வதில்லை. உலகம் எவ்வளவாக அவிசுவாசித்தாலும் எனக்குக் கவலையில்லை. அது எப்படியும் நடந்தே தீரும். அவிசுவாசம் அவிசுவாசியை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதைத் தவிர வேறொன்றையும் செய்வதில்லை. அவிசுவாசம் அவிசுவாசியை நரகத்துக்கு கொண்டு செல்லும். அது அவனுக்கு தேவன் வாக்களித்துள்ள எந்த ஆசீர்வாதமும் கிடைக்கமலிருக்கும்படி செய்துவிடுகிறது. ஆனால் தேவன் விசுவாசியுடன் ஈடுபடுவதை அது தடை செய்வதில்லை. பாருங்கள், அவிசுவாசம் தேவனுடைய செயலை தடுத்து நிறுத்துவதில்லை, அது அவிசுவாசியை மாத்திரம் நிறுத்துகிறது. நீங்கள், “நான்... நாளை சூரியன் பிரகாசிக்காதபடி அதை தடுத்து நிறுத்தப் போகிறேன்” எனலாம். நீங்கள் முயன்று பாருங்கள்? சரி, உங்களால் முடியாது. தேவன் அதை ஒழுங்கில் வைத்து அது பிரகாசிக்கும் என்று உரைத்திருப்பதால், அது பிரகாசிக்கும், அவ்வளவுதான். அது பிரகாசிக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஒருவேளை அதை மேகங்கள் மறைத்திருக்கலாம், இருப்பினும் அது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதை தேவன் தடுத்து நிறுத்தும்படி உங்களால் செய்ய முடியாது. அவர், என்ன... 38தேவன் தம்முடைய வார்த்தையை ஜனங்களுக்கு எவ்விதம் அறியப் பண்ணுகிறார்? முதலாவதாக, அவிசுவாசிகள் இருப்பார்கள் என்பதை தேவன் அறிந்தவராய்... இப்பொழுது தேவனுடைய ஞானத்தைக் கவனியுங்கள். அவிசுவாசிகள் இருப்பார்கள் என்றும், பெரும்பாலோர் அவிசுவாசிகளாக இருப்பார்கள் என்றும் தேவன் அறிந்தவராய், இதை விசுவாசிக்கும் ஒரு சந்ததியை அவர் ஒவ்வொரு காலத்திலும் தமது முன்னறிவினால் முன்குறித்தார். அங்கு நீங்கள் கவனிப்பீர்களானால், ஒவ்வொரு காலமும் அவருடைய வார்த்தையுடன் சென்று கொண்டிருக்கிறது, எல்லாமே குறித்த நேரத்தில் நடக்கிறது. ஒன்றுமே தேவனைத் தடைசெய்வதில்லை. வினாடி முள் ஒவ்வொரு வினாடியும் சரியாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நாம், அது சரியாக வேலை செய்யாது என்று நினைக்கிறோம். ஆனால் கவலைப்படாதீர்கள், அவருடைய கடிகாரம் ஒவ்வொரு வினாடியும் கிரமமாக உள்ளது. எல்லாமே சரியாக வேலை செய்கிறது. 39சில நேரங்களில் நான் சுற்றுமுற்றும் பார்த்து, இன்று நாம் பெற்றுள்ள ரிக்கிகளையும், ரிக்கெட்டாக்களையும் தெருக்களில் காணும்போது, “ஓ, தேவனே!” என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு. அவரோ, “ஒரு நிமிடம் பொறு”. “என் கடிகாரம் சரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான் முதலாம் மனிதனை அவன் நாட்களில் எந்த அடிப்படையில் வைத்தேனோ அந்த அடிப்படையில் உன்னையும் வைக்க வேண்டும். லூத்தரை வைத்த அதே அடிப்படையில், வெஸ்லியை வைத்த அதே அடிப்படையில் உன்னையும் வைத்திருக்கிறேன்” என்றார். பாருங்கள், பாவம் இப்பொழுது அதிகரித்துள்ளது போல் அக்காலத்தில் இல்லை. முன்காலத்தைக் காட்டிலும் இப்பொழுது அறிவு விருத்தியடைந்துள்ளது. வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுகிறார்: பாருங்கள்? இன்று நமக்கு அதிக அறிவு, அதிக புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதால், அவிசுவாசம் என்னும் நதியில் வெள்ளப் பெருக்கு அதிகமாய் உள்ளது. ஆனால் தேவன் அதற்கு விரோதமாய்க் கொடியேற்றுகிறார். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அவர் எப்பொழுதும்... இவை இன்று நடக்கும் காரணம், இவை நடக்க வேண்டுமென்று அவர் முன்குறித்து, இவை நடக்குமென்று தீர்க்கதரிசிகளின் மூலம் முன்னுரைத்தார். இவை உறுதிப்படுவதை நீதிமான்கள் காணும்போது, இது உண்மையென்று அவர்கள் அறிந்து கொள்கின்றனர். யார் என்ன கூறினபோதிலும், இது உண்மையென்று அவர்கள் அறிந்து கொள்கின்றனர். 40நாம் வேதாகமத்தில் என்ன காண்கிறோம் என்றால் அது 1தெசலோனிக்கேயர் என்று நினைக்கிறேன், “நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவீகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்” என்று பவுல் கூறியுள்ளான். தேவன், “உன்னைத் தெரிந்து கொள்கிறேன், உன்னைத் தெரிந்து கொள்ளமாட்டேன்” என்று கூறுவதில்லை. அவருடைய முன்னறிவினால், நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே அவருடைய முன்னறிவின் மூலம் அவர் எல்லாவற்றையும் ஒழுங்கில் கொண்டு வந்து, தம்முடைய நன்மைக்கேதுவாகவும், உங்களுடைய நன்மைக்கேதுவாகவும் நடக்கும்படி எல்லாவற்றையும் செய்திருக்கிறார். 41ஆதியாகமத்தில் தேவன் ஆதாம் ஏவாளிடம், அவர்கள் அவருடைய வார்த்தையை அவிசுவாசித்தால் என்ன நடக்குமென்று கூறினார். அவர் நன்மையும் தீமையும் அவர்களுக்கு முன்பாக வைத்து, “இதை புசிக்கும் நாளில் சாகவே சாவீர்கள்” என்றார். தேவன் என்ன சொன்னாரோ, அதை அதே அர்த்தத்தில் கூறினார். அவர் எப்பொழுதும் அவ்விதம் செய்கிறார். அவர் சொல்வதன் அர்த்தம் அதுவே. ஏவாள் அதை அவிசுவாசிக்கும்படி சாத்தான் செய்தான். சாத்தானே அதை விசுவாசிக்கவில்லை. அவன் அதை விசுவாசிக்காததனால், அவளும் அதை விசுவாசிக்காதபடி செய்தான். அவன் இன்றைக்கும் மற்றவர்களுக்கு அதையே போதித்து, அதையே செய்துகொண்டு வருகிறான். அவர்களும் ஏவாளைப் போல் அதை அவிசுவாசிக்கின்றனர். தேவன் தமது மக்களை அவருடைய வார்த்தை என்னும் அரணுக்குள் வைக்கிறார். அது ஒன்று மாத்திரமே உங்கள் பாதுகாப்பு, உங்கள் ஸ்தாபனமோ, உங்கள் தகப்பனோ, தாயோ அல்ல, தேவனுடைய வார்த்தைக்குப் பின்னால் மறைந்திருப்பதே. அந்த இடத்தில் தான் வார்த்தைக்கு பின்னால் தான் அவன் பாதுகாப்பாயிருக்கிறான். அதில் ஒரு சிறுபாதை உண்டாக்கப்பட்டு, “இது சரியா இருக்குமா இல்லையா என்று வியக்கிறேன். அது சரியாயிருக்காது” என்று யோசனை உள்ளே புகுந்து விசுவாசத்தின் இடத்தை எடுத்துக்கொண்டது. அவர்கள் பாதுகாப்புக்கு இருந்த கம்பிகளை உடைத்துப் போட்டனர். ஆனால் தேவன் தமது வார்த்தையைக் காத்துக் கொண்டு அதை நிறைவேற்றினார். அவள் அதை விசுவாசிக்கும்படி... அவிசுவாசிக்கும்படி சாத்தான் செய்தான். 42அல்லது யோசனை, அதனை யோசிக்கத் தலைப்படாதீர்கள். நீங்கள், “நல்லது. நான் நினைக்கிறேன்...” என்று கூறலாம். அதை சந்தேகிக்க உங்களுக்கு உரிமையில்லை. தேவன் ஒன்றைக் கூறுவாரானால், அவர் சொன்ன விதமாக அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். செய்ய வேண்டியது அதுதான். நீங்கள், “நல்லது. நான் நினைக்கிறேன்...” என்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சிந்தனையும் வருவதில்லை. கிறிஸ்துவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். வார்த்தையே உங்களில் இருக்கக்கடவது. மற்ற எல்லா வார்த்தைகளும் தவறாயிருப்பதாக. கிறிஸ்துவின் வார்த்தைகளே சரி!மற்றவர்கள் ஏவாளைப் போல் சாத்தானையும் அவனுடைய எல்லா யோசனைகளையும் நம்புகின்றனர். “நல்லது, தேவன் ஏன் இதை செய்வார்? இதுவும் அது போன்று நல்லதல்லவா அது வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், அது நல்லதல்ல. எனவே யாராவது, எந்த போதகராவது, எந்த வேத வியாக்கியானியாவது உங்களுக்கு வேதம் உரைப்பதிலிருந்து ஒரு சிறு அணுவும் வித்தியாசமாக போதித்து உங்களை விசுவாசிக்கச் செய்யமுயன்றால், அது கள்ளப் போதகமே. அது சாத்தான், ஏவாளுக்கு இருந்த விதமாகவே. அவன் என்ன செய்தபோதிலும், தேவன் தொடர்ந்து செல்கிறார். சாத்தான் என்ன செய்த போதிலும், தேவன் தொடர்ந்து அதை நிரூபித்துக் கொண்டே செல்கிறார். 43சாத்தான் ஏவாளிடம் என்ன கூறினான் என்பதை கவனியுங்கள்: “நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் அறிவாளியாகிவிடுவீர்கள்”. இன்று உலகம் அதை தான் எதிர்நோக்கியிருக்கிறது. விஞ்ஞானப் பிரகாரமான நிரூபணம், ஒரு மனிதனின் ஏதோ அறிவு. சாத்தான், “நீங்கள் சாகவே சாவதில்லை” என்றான். ஆனால் தேவனோ, “நீங்கள் சாவீர்கள்” என்றார். தேவன் அதை நிரூபித்தார். அவர் சொன்னதன் அர்த்தம் அதுவே என்று நாம் காணலாம். நீங்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று பாருங்கள்... அவர் சொன்னதன் அர்த்தம் அது தானா இல்லையாவென்று. “நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்”. நீங்கள் சென்று எந்த ஒரு காலத்திலிருந்த எந்த ஒரு மனிதனின் வயதையும் ஆராய்ந்து பார்க்கலாம். ஒரு மனிதனும் கூட ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததில்லை. தேவன் தமது வார்த்தையை நிரூபித்தார், அவர் ஒவ்வொரு முறையும் அவ்விதம் செய்வார். 44ஆனால், ஞாபகம் கொள்ளுங்கள், அவர் ஆசீர்வாதத்தைக் குறித்த அவருடைய வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுகிறார். அவர்கள் புசித்த அந்த நாளில் செத்தார்கள். அவர்கள் புசிக்கும் நாளில் சாவார்கள் என்பதை அவர் உங்களுக்கு நிரூபிக்கிறார். அவ்வாறே அவருடைய ஆசீர்வாதங்களைக் குறித்து அவர் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அவர் நிறைவேற்றுகிறார். ஓ, அது எனக்குப் பிரியம். உங்களுக்கு எது வேண்டுமென்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் விசுவாசிப்பதனால் அவருடைய ஆசீர்வாதங்களையா, அதை தாறுமாறாக்குவதனால் அவருடைய சாபங்களையா என்று. நீங்கள் அதை தாறுமாறாக்கி, தாறுமாறாக்கின பாகத்தை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் சபிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள். நீங்கள் அது எழுதப்பட்ட விதமாகவே அதை விசுவாசித்து, அதைப் பற்றிக் கொள்வீர்களானால், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அது எப்பொழுதும் விஞ்ஞானத்துக்கு முரணாயிருக்கும், காரியங்களைக் காண்பிக்க கடைபிடிக்கப்படும் ஜனங்களின் விஞ்ஞானப் பிரகாரமான முறைகளுக்கு அது எப்பொழுதும் முரணாயிருக்கும். அவர் தமது ஆசீர்வாதங்களையும் தமது சாபங்களையும் குறித்த ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுகிறார். 45ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த உலகத்தில் ஆண்களும் பெண்களும் அவருடைய வார்த்தைக்கு விரோதமாக பாவம் செய்தபோது... ஆதாமும் ஏவாளும் அவருடைய உண்மையான வார்த்தைக்கு விரோதமாக பாவம் செய்தபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த சந்ததிகள் அனைத்தும் அதையே செய்தன. அவர் அவர்கள் மேல் மரணத்தை விதித்தார். முடிவில் உலகிலிருந்த எல்லாமே தண்ணீரினால் மூடப்பட்டு, தண்ணீரினால் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு, எல்லாமே முழுவதுமாக அழிந்து போயின. இப்பொழுது, அவர் காப்பாற்றி பூமியின் உயரே கொண்டு சென்றவைகளைத் தவிர பூமியின் மேலிருந்த சகலவற்றையும் ஒவ்வொரு செடியையும் ஒவ்வொரு சிருஷ்டியையும், முழுவதுமாக அழித்த அதே தேவன்; அவர் என்ன செய்வதாக உரைத்திருந்தாரோ அதை நிறைவேற்றினார். ஜலப்பிரளயத்தை அனுப்புவதாக எச்சரித்து, அவருடைய வார்த்தையை நிறைவேற்றின அதே தேவன் இப்பொழுது அக்கினி விழும் என்று எச்சரித்துள்ளார், அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார். அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார். 46இப்பொழுது, இப்பொழுது அவர்கள் என்ன செய்தனர்? அவருடைய வார்த்தையை அவர்கள் எவ்விதம் அறிந்து கொண்டனர்? அவர் சேதத்தை விளைவிக்கும் முன்பு அல்லது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவதற்கு முன்பு, அவர் எப்பொழுதும் ஜனங்களுக்கு வார்த்தையை அனுப்பி அவர்களை எச்சரிக்கிறார். ஓ, அது எனக்குப் பிரியம்! அதன் விளைவாக நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நாம் காணலாம். அவர் அதை செயல்படுத்துவதன் மூலம் தம்மை நிரூபிக்கிறார். நோவாவின் காலத்தில் போதகர்களை கொண்ட பலவிதமான சங்கங்கள் இருந்தன. அவன் காலத்தில் பலவிதமான மார்க்கங்கள் இருந்தன. ஏனெனில் இயேசு, “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்று உரைத்துள்ளார். அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி காட்சியில் தோன்றி ஏதோ ஒன்றைச் செய்ய ஆரம்பித்தான். அவன் பேழையை உண்டாக்க ஆரம்பித்தான். தேவன் தமது வார்த்தையை அனுப்பி, அழிவு வரப் போகிறதென்றும், ஜனங்களின் பொல்லாத செயல்களை, அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும், அவர் ஒரு காலத்தில் சிருஷ்டித்த மனுஷனை அழிக்க வேண்டும் என்றும் எச்சரிக்க தமது தீர்க்கதரிசியாகிய நோவாவை அனுப்பினார். 47வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. அவர் ஒருபோதும் மாறுவதில்லை. “நான் கர்த்தர், நான் மாறாதவர்” என்று மல்கியா 3 உரைக்கிறது. நோவா விஞ்ஞான காலத்திற்கு, விஞ்ஞான ஆதாரமில்லாத செய்தியுடன் அனுப்பப்பட்டான். நோவா அறிவு படைத்த காலத்திற்கு, அறிவுடன் சம்பந்தமில்லாத ஒரு செய்தியுடன் அனுப்பப்பட்டான். விஞ்ஞான காலத்திற்கு அவன் விசுவாசமும் வாக்குத்தத்தமும் கொண்ட ஒரு செய்தியுடன் அனுப்பப்பட்டான். விஞ்ஞான காலம் விஞ்ஞான ஆதாரமில்லாத செய்தியை விசுவாசிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அறிவு படைத்த காலம், மனித அறிவுக்கு முற்றிலும் முட்டாள் தனமாய் தோன்றும் ஒன்றின் மேல் விசுவாசம் வைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஆனால் தேவன் எப்பொழுதும் அவ்விதம் செய்கிறார். நோவா உறுதிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய தீர்க்கதரிசி. அவன் அந்த காலத்தின் தேவனுடைய செய்தியாக இருந்தான். அது தேவனுடைய வார்த்தை என்றும் தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார் என்றும் தேவனால் அவனுக்கு உறுதிப்படுத்தப்பட்டதனால், ஜனங்கள் அவனுடைய செய்தியை விசுவாசிப்பார்கள் என்று அவன் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. 48இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது, இந்த ஜனங்கள் அறிந்திருக்க வேண்டும். பாருங்கள், நோவா உபத்திரவ காலத்திற்குள் கொண்டு செல்லப்படும் யூதர்களுக்கு முன்னடையாளமாயிருக்கிறான் என்பதை கவனியுங்கள். ஏனோக்கு உண்மையான செய்திக்கு, சபை எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்னடையாளமாயிருக்கிறான். ஏனெனில் ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். அதன் பிறகு வெள்ளம் வந்தது. இருவருமே... முதலாம் தீர்க்கதரிசியாகிய ஏனோக்கு, நோவா தன் வழியில் தேவன் நோவாவுடன் ஈடுபட வேண்டும் என்பதற்காக வழியிலிருந்து அகற்றப்பட்டான். இப்பொழுது தேவன் மறுபடியும் யூதருடன், யூதரில் மீதியான லட்சத்து நாற்பது நாலாயிரம் பேருடன் ஈடுபடுவதற்கென சபையானது எடுத்துக் கொள்ளப்படும். இதைக் குறித்த வேத வசனங்களை நாம் இங்கு படித்திருக்கிறோம். 49ஆனால் விஞ்ஞானப் பிரகாரமான அவிசுவாசமான காலம் அனைத்தின் மத்தியிலும், தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்பி, அவருடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தை, உண்மையென நிரூபித்தார். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், நோவாவின் நாட்களில் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. தேவன் பூமியில் மூடுபனியை எழும்பப் பண்ணி செடிகளை வளரப்பண்ணினார். ஆனால் மழை பெய்யவில்லை. ஆனால், “நோவா மழை பெய்யும்” என்றான். அக்காலத்தில்... அவர்கள் ஒரு கருவியை வானங்களுக்கு அனுப்பி, அங்கு ஈரம் இல்லை. அங்கு மழை இல்லை. அங்கு தண்ணீர் இல்லை என்று எங்களால் நிரூபிக்க முடியும் என்று சொல்லும் காலம் அது. ஆனால் விஞ்ஞானம் என்ன சொன்னபோதிலும், “தேவன், மழை பெய்யும்” என்றார், அது கிரியை செய்யும். தேவன் என்ன செய்தார். என் கருத்து என்னவெனில், அவர்களில் சிலர் உலகத்தை சிறிது அசைத்து அதை சுழற்பாதையிலிருந்து சற்று தள்ளி விட்டிருக்கக் கூடும். அது அதை இந்தப் பக்கம் தள்ளி, பூமியின் உஷ்ணத்தை குளிராக மாற்றி, ஈரத்தை கொண்டுவந்திருக்கக் கூடும். அப்பொழுது முதன், முறையாக உலகில் வாயுமண்டலத்தில் ஈரப்பசை உண்டாகி, அவை ஒன்றாகத் திரண்டு மேகங்களாக மாறி, மழை பெய்திருக்கக் கூடும். அவ்வளவுதான். இப்பொழுது நாம் அறிந்திருக்கிற வண்ணமாக ஆக்கினியானது மேலே உள்ளது. பூமிக்குள் வாயுக்கள் இருக்கின்றன. வானங்கள் மடமடவென்று அகன்றுபோம். பூதங்கள் வெந்து உருகிப்போம் என்று வேதம் உரைக்கிறது. அதனாலேயே மேலே அக்கினியுள்ளது என்று நாம் அறிவோம். நோவாவின் நாட்களில் இருந்த வண்ணமாகவே இப்பொழுதும் இருக்கிறது. 50இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நோவாவின் காலத்தின் செய்தி விசுவாசத்தின் மூலமேயன்றி, அது விஞ்ஞானப் பிரகாரமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் இன்றைக்கோ, செய்தியானது தேவனுடைய வார்த்தையின்படி அமைந்திருந்து, விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எலியா முதலில் வந்து அற்புதங்களைச் செய்தான். அவன் பிரசங்கம் எதுவும் செய்யவில்லை. அவன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு சென்று அற்புதங்களைச் செய்தான். அடுத்த முறை அவன் யோவான் ஸ்நானன் உருவில் வந்தபோது, செய்தான். மூன்றாம் முறை அவன் வந்திருக்கும்போது, அவன் அற்புதங்களையும் பிரசங்கத்தையும் இவ்விரண்டையுமே செய்கிறான். பாருங்கள்? அது எவ்விதம் உள்ளதென்று பார்த்தீர்களா?வேதவசனங்கள் எவ்வாறு தொடர்ச்சியாக ஓடுகிறது என்பதைக் கவனியுங்கள். அதில் நாம் நிறைய நேரத்தை செலவழிக்கலாம். ஆனால் நாம் அவ்விதம் செய்யாமல் விட்டுவிடுவோம். உங்களுக்கு அந்த கருத்து விளங்கிவிட்டது என்று நம்புகிறேன். 51அவர் செய்வதாக வாக்களித்ததை, மற்ற காலங்களில் செய்தது போல், அந்த காலத்திலும் செய்தார், அவர் எல்லா காலங்களிலும் செய்வார். தேவன் ஒன்றை வாக்களிப்பாரானால், அவர் இறங்கிவந்து அவருடைய வார்த்தை உண்மையென்பதை நிரூபிக்கிறார். விசுவாசிக்கிற அனைவரும், உள்ளே வந்து இரட்சிக்கப்படுகின்றனர். அது அவ்விதம் எந்த காலத்திலும் இருக்கும். செய்தியையும் செய்தியாளனையும் விசுவாசிக்காத அனைவரும் அழிந்து போயினர். இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை உண்மையாய் விசுவாசிக்கிற அனைவரும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசியாத அனைவரும் உலகத்தோடு சேர்ந்து அழிந்து போவார்கள். ஏனெனில் அவர்கள் உலகத்தாராயுள்ளனர். உலகத்திலுள்ள அனைத்துமே உலகத்தோடு அழிந்து போக வேண்டும். தேவனால் இரட்சிக்கப்படுகிறவர் தேவனுக்குள் இருப்பதனால் அழிந்து போக முடியாது. நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்... அவர்களை நான் கடைசி நாளில் எழுப்புவேன். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், தேவன் தமது வார்த்தையை நிச்சயமாய் நிறைவேற்றி, உலகத்தை அழிக்கிறார் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் எவ்வளவு ஆறுதலாக உள்ளது. அவர் தமது வார்த்தையைக் காத்துக் கொண்டு, தம்முடைய ஜனங்களை எழுப்பி அவர்களை இரட்சிக்கிறார். அவர் அதை நிரூபிக்கிறார். 52அவருடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தை உண்மையென்று அவர் ஆபிரகாமுக்கு அவன் காலத்தில் நிரூபித்தார். கவனியுங்கள், நூறு வயது சென்ற ஆபிரகாமுக்கும், தெண்ணூறு வயதான ஸ்திரீக்கும் பருவம் கடந்த அவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது விஞ்ஞான ஆதாரமற்ற ஒன்றாக விளங்கினது. ஆபிரகாமால் அதற்கு விளக்கம் தர முடியவில்லை. அவன் மருத்துவரிடம் சென்று, “மருத்துவரே, அது சாத்தியமா என்று கேட்டிருந்தால், அது சாத்தியமல்ல என்னும் பதில் கிடைத்திருக்கும். இக்காலத்தில் அப்படிப்பட்ட ஒருவன் பிரசவ விடுதிக்குச் சென்று, வயது சென்ற தன் மனைவியின் பிள்ளைப் பேறுக்காக ஆயத்தம் செய்திருப்பானானால், அவனைப் பைத்தியக்காரன் என்று அழைத்திருப்பார்கள். அவனுக்கு மனநிலை சரியில்லை“ என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் தேவன் உரைத்திருந்தார்! அவன்... வேதாகமம் ரோமர் 4-ம் அதிகாரத்தில், ஆபிரகாம், “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” என்றுரைக்கிறது (ரோமா 4 : 20-21), அவன் இறுகப்பற்றிக் கொண்டிருந்தான், ஏனெனில் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றுவாரென்று அவன் முழு நிச்சயமாய் நம்பினான். நாம் அவன் பிள்ளைகளென்று கருதப்படுகிறோம். ஆமென்!இப்பொழுது நான் பக்திபரவசமடைகிறேன், ஆவியினால் ஊக்குவிக்கப்படுகிறேன். அதை சற்று யோசித்துப் பாருங்கள்! ஓ, அவர் அதை நிரூபித்தார் அத்தனை ஆண்டுகள் கழித்து அவர் ஆபிரகாமை வாலிபனாகவும் சாராளை வாலிபப் பெண்ணாகவும் மாற்றி, அவள் குழந்தை பெற்றாள். ஆபிரகாமும் சாராளும் உயிர்வாழ்ந்து, நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்து சாராள் மரணமடைந்தாள், ஆபிரகாமுக்கு நூற்று நாற்பத்தைந்து வயதான போது மறுபடியும் விவாகம் செய்து கொண்டு, குமாரத்திகளையும் ஏழு குமாரர்களையும் பெற்றான். அவனுடைய பருவம் கடந்து, அவன் சக்தியை இழந்த பின்பு அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவன் வித்தை இழந்தான், அவன் உடலில் சாரமில்லை. ஆமென்! ஏன்? அவன் தன் சரீரம் செத்துப் போனதையும் சாராளுடைய கர்ப்பம் செத்துப் போனதையும் எண்ணாதிருந்தான். அவன் தேவன் உரைத்ததை மாத்திரம் எண்ணி, தேவன் தாம் உரைத்ததை நிரூபிப்பார் என்பதை அறிந்திருந்தான் ஆமென்! தேவன் எதைச் செய்வதாக உரைக்கிறாரோ, அதை நிறைவேற்றுவார். விஞ்ஞான ஆதாரமுள்ளவர்களின் மத்தியிலும், விஞ்ஞானத்தின் மத்தியிலும் எவைகளின் மத்தியிலும், அவை எதுவாயிருந்தாலும், தேவன் தாம் சரி என்பதை நிரூபிக்கிறார். அவர் எப்பொழுதும் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். அவர் மாத்திரமே சரி, மற்றவர் அனைவரும் தவறு. 53அவர் லோத்துக்கும் அதை நிரூபித்தார். அவர் அவனிடம், “இந்த பட்டினத்தை விட்டு நீ வெளியே போகாவிட்டால், அவளை நான் எரித்துவிடுவேன்” என்றார். அவர் பத்து நீதிமான்களை அங்கு கண்டால் அதை அழிப்பதில்லையென்று ஆபிரகாமிடம் கூறினார். அவரால் பத்து நீதிமான்களை அங்கு காணமுடியவில்லை, எனவே அவருடைய வார்த்தை சரியென்பதை அவர் நிரூபித்தார். அக்கினி எங்கிருந்து வரும்? அந்த சமவெளிகளில், “இந்த சகதிக் குழிகளில் காணவில்லையே'' ஆனால் தேவன் உரைத்திருந்தார். எனவே அது நடக்கும் என்று ஆபிரகாம் அறிந்திருந்தான். லோத்தும் அதை அறிந்து, மலைக்குத் தப்பி ஓடிப்போனான். 54ஆபிரகாமின் சந்ததியார் ஒரு அந்நிய தேசத்தில் அந்நியராயிருந்து அங்குள்ள ஜனங்களால் கொடுமையாக நடத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் நானூறு ஆண்டுகள் அந்நியரின் மத்தியில் சஞ்சரிப்பார்கள் என்றும் அவர் உரைத்தார். அவர் என்ன செய்வதாக உரைத்திருந்தாரோ, அதை அப்படியே செய்து நிறைவேற்றினார். ஆபிரகாமின் சந்ததியார் எகிப்தில் நானூறு ஆண்டுகள் சஞ்சரித்தனர். அவர்களைப் பலத்த கரத்தினால் விடுவிப்பதாகவும் அவர் வாக்களித்திருந்தார். அவர் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பலத்த கரத்தினால் விடுவிப்பார். அவருடைய வார்த்தையை அவர் நிறைவேற்றினார். இஸ்ரவேல் புத்திரரை எகிப்துக்குக் கொண்டு செல்ல அவர் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள் நாசம் வந்து கொண்டிருப்பதைப் போல் தோன்றினது. அது எப்படியிருந்ததாக தோன்றினது என்றால்... யோசேப்பு மரித்ததாக கருதப்பட்டது. மிகவும் பயங்கரமானது ஏழை ஈசாக்கு... இல்லை, அவன் தகப்பன் யோசேப்பு இல்லை, அவன் தகப்பன் ஈசாக்கு... இல்லை, யாக்கோபு தான். ஈசாக்கு அவன் பாட்டனார், யாக்கோபு அவன் தகப்பன். அவனுடைய சொந்த மகன் மிருகங்களால் பீறுண்டு கொல்லப்பட்டதாக யாக்கோபு எண்ணினான். சிறு யோசேப்பு, அந்த ஏழை பையன், தன் வீட்டாரிடமிருந்து பிரிக்கப்பட்டு, தன் சகோதரர்களால் மறுதலிக்கப்பட்டு, குழியில் போடப்பட்டு, அவன் மரித்ததாக கருதப்பட்டது. அவனுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! அவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொன்று அவன் அங்கியை அந்த இரத்தத்தில் தோய்த்து அதை தகப்பனிடத்தில் கொண்டு சென்றனர். ஆனால் யோசேப்புக்கு ஒன்று மட்டும் தெரியும், அதாவது கர்த்தருடைய கரம் அவன் மேல் தங்கியிருந்ததென்று. அவன் ஒரு விசுவாசி என்பதை அவன் அறிந்திருந்தான். அவனுடைய சகோதரர் அவனை எவ்வளவாக புறக்கணித்தாலும், எவ்வளவாக அவனுக்கு ஒத்துழைப்பு இல்லாமல் போனாலும், தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார் என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்கள் எல்லோரும் அவனை வணங்கினதாக தரிசனம் கண்டபோது, அது நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று அவன் அறிந்திருந்தான். ஆமென். அது எவ்வளவு. நியாயமற்றதாக காணப்பட்டபோதிலும், அவன் கடினமான சூழ்நிலையின் வழியாக செல்ல வேண்டியிருந்த போதிலும், என்றாகிலும் ஒரு நாள் அவர்கள் அவன் பாதங்களை வணங்குவார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்கள் அவனைப் பகைக்கும்போது, அவர்கள் எப்படி அதை செய்வார்கள்?. ஆனால் தேவன், அவர் ஒவ்வொரு முறையும் செய்வது போல், அவருடைய வார்த்தையை நிரூபிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். 55இன்றைக்கும் அவர் அவ்விதமே செய்வார்! விஞ்ஞானம் எவ்வளவாக, அது முடியாது என்று கூறினாலும், தேவன் தமது வார்த்தையை நிரூபிப்பார். நாம் எவ்வளவாக கல்வியறிவு பெற்று அறிவாளிகளானாலும், சபைகள் எவ்வளவாக அகன்று சடங்காச்சாரங்களைக் கடைபிடித்தாலும், தேவன் இன்னமும் அவருடைய வார்த்தை உண்மையென்பதை நிரூபிப்பார். அந்த வார்த்தையில் நீங்கள் இளைப்பாறுங்கள். 56ஆம், யோசேப்பு எகிப்துக்கு செல்வதற்கென அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் தேவன் அவர் உரைத்திருந்தபடியே அவர்களை வெளியே கொண்டு வந்தார். அது இன்றைய நிலைக்கு மிகவும் அழகான உதாரணமாயுள்ளது. அதை சிந்திக்க நமக்கு நேரமில்லை. இதற்கு முன்பு இந்த கூடாரத்தில் அதை நாம் சிந்தித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றினார். ஏனெனில் அவர்கள் எகிப்தில் தங்க வேண்டியிருந்தது. எபிரேய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டு, பூமியின் பலன்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு, மிகச் சிறந்த இடமாகிய கோசேன் நாடு, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பின்பு, எகிப்தின் அடிமைத்தனத்தில் அடிமைகளாக சிக்கிக் கொண்டது அவர்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. அந்த தாய்மார்கள் அவர்களுடைய கர்ப்பத்தின் கனியாகிய சிறு குழந்தையை எகிப்திய போர் வீரனின் கைகளில் கொடுத்து, அவன் அங்கு நின்று கொண்டு பெரிய பட்டயத்தைக் கையிலெடுத்து குழந்தையை இரண்டாகப் பிளந்து தரையிலிட்டு அதை முதலைகளுக்கு ஆகாரமாகக் கொடுப்பதைப் பார்க்க அவர்களால் சகிக்க முடியவில்லை. அத்தகைய ஒரு அனுபவத்தின் வழியாக கடந்து செல்வது அவர்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. ஆனால் ஒரு நாள் அந்த முன்குறிக்கப்பட்ட வித்து - குழந்தை - பிறந்தது. அவனைக் குறித்த ஏதோ ஒன்று விசித்திரமாகத் தோன்றினது. ஒரு நாள் வனாந்தரத்தின் பின்புறத்திலே பரிசுத்த ஆவி அக்கினி ஸ்தம்ப வடிவத்தில் இறங்கி வந்து ஒரு முட்செடியில் தங்கி, என் ஜனத்தின் கூக்குரலைக் கேட்டு, “என் வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன். அவர்களை விடுவிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. அவர்களை விடுவிக்க உன்னை நான் அனுப்புகிறேன்” என்றார். அவன் கையில் கோலைப் பிடித்து, மனைவியைக் கழுதையின் மேலேற்றி, குழந்தை அவள் மடியில் உட்கார்ந்து கொண்டு, அவன் சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையினால் அதைச் செய்தான். மிகவும் கேலித்தனமான ஒன்று, பத்தாயிரம் ஈட்டிகளுக்கு ஒரு வளைந்த கோல் எப்படி ஈடாகும்?ஆனால் பாருங்கள், தேவன் அதில் இருக்கிறார். அவருடைய வார்த்தை எங்குள்ளது என்பதை அது பொறுத்தது. மோசே அவருடைய வார்த்தையை உடையவனாயிருந்தான், பார்வோனிடம் ஈட்டிகள் இருந்தன, மோசேயிடம் வார்த்தை இருந்தது. 57அவனுக்குத் தேவையாயிருந்ததெல்லாம் வார்த்தையே. இன்று உங்களுக்கும் அதுதான் தேவையாயுள்ளது. ஏதோ ஒரு சபையின் நற்சான்றிதழ் அல்ல. ஒரு ஸ்தாபனம் உங்களை ஆதரிக்க வேண்டுமென்று உங்களுக்கு அவசியமில்லை. உங்களை எடுத்துக் கொள்ளப்படுதலில் கொண்டுசெல்ல வார்த்தையே அவசியம். உங்களுக்கு ஏதோ ஒரு நற்சான்றிதழ் அவசியமில்லை. இன்று காலையில் நீங்கள் சுகம்பெற உங்களுக்கு ஏதோ ஒரு வேதாகமப் பள்ளியின் நீண்ட வரலாறு அவசியமில்லை. நீங்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அது கிரியை செய்யும். உங்களுக்கு மருத்துவரின் வார்த்தை அவசியமில்லை. மருத்துவர் உங்களிடம், அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டதாகவும், அவ்வளவு தான் அவரால் செய்ய முடியும் என்று கூறிவிட்டால், உங்களுக்கு புற்றுநோய், கட்டி உள்ளது அல்லது நீங்கள் பார்வையிழந்து வருகின்றீர்கள், நீங்கள் செவிடாகின்றீர்கள், ஊமையாகின்றீர்கள் என்று கூறினால், அது என்னவாயிருந்தாலும் அதனால் பரவாயில்லை. நீங்கள் அந்த வார்த்தையை வாக்குத்தத்தமான எரிகிற முட்செடிக்குக் கொண்டு செல்வீர்களானால், ஆமென்! ஏதோ ஒன்று நடக்கும் ஒவ்வொரு முறையும் வார்த்தை சரியான நிலத்தில் விழும்போது, தேவன் தமது வார்த்தையை நிரூபிப்பார். உங்களுக்குத் தேவை அவருடைய வார்த்தையே. அவர் அதை நிரூபிக்கிறார், அவர் அதை நிறைவேற்றுகிறார். அது உண்மையென்று நீங்கள் உறுதி கொண்டவர்களாய் இளைப்பாறலாம். 58அவர் ஒவ்வொரு காலத்திலும் தமது வார்த்தையை, வழக்கத்துக்கு மிகவும் மாறான வழியில் நிரூபித்துக் கொண்டு வருகிறார். ஆனால் அவர் எப்பொழுதும் அதே வழியில் செயல்பட்டு வருகிறார். பாருங்கள்? நோவாவின் நாட்களில் மீதியானவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் என்ன செய்தார்? அவர் அவர்களுக்கு தீர்க்கதரிசியாகிய நோவாவை அனுப்பினார். அவர் நோவாவை ஒரு அடையாளமாக அனுப்பினார். இப்பொழுது கவனியுங்கள், இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்க அவர் வந்தபோது, அவர் என்ன செய்தார்? அவ்விதமாகவே அவர் தீர்க்கதரிசியை அனுப்பினார். அவருடைய தீர்க்கதரிசியிடம் வார்த்தை உள்ளது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அடையாளங்களும் அற்புதங்களும், வார்த்தை முற்றிலும் உண்மையென்று உறுதிப்படுத்தி அதை ஆதரிக்கின்றன. இஸ்ரவேலர் அதை விசுவாசித்த காரணத்தால், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு அணிவகுத்து சென்றனர். 59அவர்களுடைய வனாந்தர பிரயாணத்தில், வார்த்தை உறுதிப்பட்டதை அவர்கள் கண்ட பின்பும், இந்த தீர்க்கதரிசியை அவிசுவாசித்தனர். மணவாட்டி வரிசையை விட்டு வெளியே சென்றாள். (நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும், தரிசனத்தில், பாருங்கள், “வரிசையை விட்டு வெளியே செல்லுதல்”), அங்கு யோசுவா, காலேப் என்னும் பெயர் கொண்டவர் நின்று கொண்டிருந்தனர். சூழ்நிலை என்னவாயிருந்த போதிலும், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை உண்மையென்று விசுவாசித்தனர். அவர்கள் காதேஸ்பர்னேயாவுக்கு சென்றபோது கவனியுங்கள். காதேஸ்பர்னேயாவிலிருந்து, மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவனை தேசத்தை வேவு பார்க்க அனுப்பினான் எந்த வழியாக பிரவேசிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள, அவன் தன் சேனைத்தலைவனான யோசுவாவை அனுப்பினான். யோசுவா ஒரு தீர்க்கதரிசியும் கூட. எனவே மோசே அவனுக்குக் கீழிருந்த சிறிய தீர்க்கதரிசியை அனுப்பினான். யோசுவா மோசேக்கு, செவிகொடுத்தான். அவர்கள் அவனை அனுப்பினர் மோசே. “நீங்கள் சென்று அந்த தேசத்தை வேவு பாருங்கள்” என்றான். 60சேனைத் தலைவன் சென்று ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டான். அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவன் தன் நெருங்கிய நண்பனான காலேபை கூட்டிச் சென்றான், ஏனெனில் காலேபுக்கு விசுவாசம் இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்து, ஒரு திராட்சைக் குலையுடன் திரும்பி வந்தனர். அதை இரண்டு பேர் சுமக்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள்? அவன், “இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்பே இது அவர்களுக்கு அத்தாட்சியாயிருக்கும். பாருங்கள், அது நல்ல தேசம், பாலும் தேனும் ஓடுகிற தேசம், அது சிறந்த தேசம், அது செழிப்பான தேசம், என்று தேவன் உரைத்ததற்கு இது அத்தாட்சியாக இருக்கும். இப்பொழுது உங்கள்... ஓ, இந்த பூண்டு, கொம்மட்டிக்காய், மற்றும் எகிப்தில் உங்களுக்கு இருந்த அனைத்தும். இப்பொழுது நாங்கள் உங்களை பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு கொண்டு செல்லப் போகிறோம். நீங்கள் இத்தனை ஆண்டுகளாக எகிப்தில் பால், தேன் ஒன்றையும் ஒருவேளை ருசிபார்த்திருக்க மாட்டீர்கள். அவர்கள் உங்களுக்கு அடிமைகளின் உணவையே கொடுத்தனர். இப்பொழுது நீங்கள் அந்த தேசத்துக்கு செல்லப் போகிறீகள்” என்றான். அவர்கள் மகத்தான உலக நியாயஸ்தலம் இருந்த காதேஸ்பர்னேயாவுக்கு ஏறக்குறைய ஒரு நாள் பிரயாண தூரத்தில் இருந்தபோது, இந்த பெரிய பனைமரங்களும் நீரூற்றுகளும் இருந்த இடத்தில் பாளயமிறங்கினர். அவன், “ஜனங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக... என்றான். அது எவ்வளவு பரிபூரணமான உண்மையான அத்தாட்சி என்றும், தேவன் இன்றைக்கும் எவ்வாறு அவ்விதமே செய்கிறார் என்றும் கவனியுங்கள். மோசே, ”அது செழிப்பான தேசம்“ என்று தேவன் உரைத்திருக்கிறார். ஜனங்கள், ”அது அங்கு செல்வதற்கு முன்பு அது செழிப்பான தேசம் என்பதை அவர்கள் காண வேண்டுமென்று விரும்புகிறேன். எனவே நீங்கள் அங்கு சென்று அத்தாட்சியுடன் திரும்ப வந்து அதை ஜனங்களுக்குக் காண்பியுங்கள்“ என்றான். 61எனவே அவர்கள் அங்கு சென்றனர். நீங்கள் எப்பொழுதும் அத்தாட்சியுடன் திரும்ப வருவதற்காக செல்லும் போது சத்துரு பாதையில் இருக்கிறான். வேவு பார்க்கச் சென்றவர்களில் சிலர் கானானின் இராட்சதர்களைக் கண்டபோது, ஓ, என்னே, அவர்கள், நம்மால் முடியாது என்றனர். ஆனால் தேசம் அங்கிருந்தது என்பதற்கு அவர்கள் அத்தாட்சியைக் கொண்டுவந்தனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படவில்லை. அவர்கள் தேசத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்பே தேவன் தமது வார்த்தையை அவர்களுக்கு நிரூபித்தார். இன்றைக்கு வசனத்தைக் கேட்பதற்காக நீங்கள் ஆயிரம் மைல் பிரயாணம் செய்து, அது நிரூபிக்கப்பட்டு உறுதிப்படும்போது, அது ஒரு மகத்தான தேசம் என்பதன் அத்தாட்சி என்பதை உங்களால் காண முடிகிறதல்லவா? புற்று நோயால் பீடிக்கப்பட்டு எலும்பும் தோலுமாய் கிடக்கும் மனிதன் பூரண குணமடைவதை நீங்கள் காண்கிறீர்கள். தேவன் அன்று உரைத்த வார்த்தைகள் இன்று நிறைவேறி உறுதிப்படுகின்றன. தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார் என்பதற்கு அதுவே அத்தாட்சி. ஒரு மகத்தான தேசம் உண்டு என் உயிர் போய்விட்டு, தேவன் இறங்கி வந்து அதை மறுபடியும் அளிப்பாரானால், நித்திய ஜீவன் உண்டு என்பதற்கு அதுவே அத்தாட்சி. முன்பெல்லாம் நீங்கள் சபை கதவின் அருகில் நின்று இருட்டடையச் செய்வதில்லை. ஆனால் இப்பொழுதோ உள்ளே வருவதற்கு வரிசையில் நிற்கிறீர்கள். தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றி அதை உண்மையென்று நிரூபிக்கிறார் என்பதற்கு அதுவே அத்தாட்சி. 62நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் காரோட்டி வருகிறீர்கள். நான் இங்கு காலையில் வந்து பார்த்தபோது, தாய்மார்கள் விடியற்காலை ஐந்து மணிக்கு வீதியில் உட்கார்ந்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு கொக்கோ கோலா குப்பியிலிருந்து குடிக்கக் கொடுப்பதையும், சிறிது சமைத்த தானியங்கள் ஊட்டுவதையும் கண்டு, “தேவனே, இவ்வளவு தூரத்திலிருந்து ஜனங்களை வரச் செய்து, அவர்களுக்கு தவறான ஒன்றை போதிப்பேனானால், நான் உலகிலேயே மிகவும் தாழ்ந்த மாய்மாலக்காரனாயிருப்பேன். அவர்களுக்காக நான் வருந்துகிறேன். என் இருதயம் அவர்களுக்காக பரிதபிக்கிறது. அவர்கள் தேவனுக்காக பசிதாகமுற்றிருக்கின்றனர். கர்த்தாவே, அவர்களுக்கு சத்தியத்தை உரைக்க எனக்குதவி செய்யும், இல்லையெனில் என்னை இவ்வுலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்: அவர்களுக்கு சத்தியத்தை உரைக்க எனக்குதவி செய்யும். என் கரத்தை நீர் பிடித்து, சத்தியம் எதுவென்று எனக்கு அறிவித்து, நான் கூறினது சத்தியமென்று உறுதிப்படுத்தும். அப்பொழுது அவர்கள் அது சாத்தியமென்று அறிந்துகொள்வார்கள். இந்த ஏழை ஜனங்கள் வஞ்சிக்கப்பட இடங்கொடாதேயும். வேண்டாம் என்று மனதில் எண்ணிக் கொண்டேன். இந்த விசுவாசமுள்ள மக்களைக் காணும்போது, என் இருதயம், அப்படிப்பட்ட ஒன்றிற்காக பரிதபிக்கிறது. 63யோசுவாவும் ஜனங்ளை ஒன்று கூட்டி, அவர்கள் தங்கள் உடைகளை வெளுத்து மூன்றாம் நாள் ஆயத்தமான போது அவ்விதமே நினைத்திருப்பான் என்று எண்ணுகிறேன். ஆம், அவன் அதை நிரூபித்தான். யோசுவா என்ன கூறினான். அவர்கள், “ஓ, நம்மால் முடியாது. உங்களால் முடியவே முடியாது. நமது ஸ்தாபனத்தை விட்டு நாம் வெளியேற வேண்டியதுதான். நாம் தொலைந்தோம். பாருங்கள், இப்பொழுது நம்மால் செய்ய முடியாது. அது விவேகமற்ற செயல் என்றனர். யோசுவா அவர்களை அங்கு நடத்தி சென்றபோது, அது ஏப்ரல் மாதம். யோர்தானில் தண்ணீர் மட்டம் உயரமாயிருந்தது. அதன் அகலமும் ஓஹையோ நதியின் அகலம் அளவுக்கு இருந்தது. தேவன் மிகவும் தவறான காரியத்தை செய்தது போல் தோன்றினது. சில நேரங்களில் நீங்கள் வியாதிப்படும்போது, “நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன். தேவன் தவறு செய்துவிட்டார், நான் வியாதிப்படும்படி விட்டுவிட்டார். நான் ஒரு கிறிஸ்தவன்” என்கின்றீர்கள். தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று வேதம் கூறியுள்ளது என்பதை நீங்கள் உணருவதில்லையா? 64யோர்தானின் தண்ணீர் மட்டம் மிகவும் தாழ்ந்திருக்கும். நீங்கள் அதன் வழியாக எந்த பகுதியிலும் கடந்து செல்லலாம். சில இடங்களில் மாத்திரம் குழியில் தண்ணீர் நிறைந்து, அது மிகவும் ஆழமாக இருக்கும். அங்கு ஆழமில்லாத சிறு துறைகள் கரைகளில் உண்டு. அந்தக் கரையில் தான் எரிகோ பட்டினம் இருந்தது. தண்ணீர் கணுக்கால் ஆழம் வரை தான் இருக்கும். நீங்கள் அதை ஜீப்பில் கடக்கலாம், அல்லது நடந்து கடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யோசுவா அவர்களை ஏப்ரல் மாதத்தில் அங்கு நடத்திச் சென்றான். அப்பொழுது அந்த இடம், ஏறக்குறைய ஒரு மைல் தூரத்துக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும். யோர்தானில் அப்பொழுது ஒருவேளை முப்பது அல்லது நாற்பது அடி ஆழம் தண்ணீர் இருந்திருக்கும். அவன், “மூன்றாம் நாளில் நாம் கடந்து செல்லப் போகிறோம். தேவன், ஜனங்களை ஒன்று கூட்டி, அவர்களை பரிசுத்தம்பண்ணு. நீங்கள் யோர்தானைக் கடந்த செல்லப் போகிறீர்கள்” என்று கூறினார் என்றான். பாருங்கள் தேவன் எவ்விதம் காரியங்கள் நிகழ அனுமதிக்கிறார் என்று. அவருடைய ஜனங்கள்... தம்முடைய ஜனங்களை வெளியே இழுப்பதற்காக. அவர்கள் என்ன செய்தனர். தண்ணீர் எவ்வளவு ஆழமாக இருந்தபோதிலும், யோர்தான் எவ்வளவு சகதியாக இருந்த போதிலும், வெள்ளம் எவ்வளவு வேகமாக பாய்ந்து கொண்டிருந்த போதிலும், அவர்கள் தங்களை பரிசுத்தம் பண்ணிக் கொண்டு ஆயத்தமாயினர். பாருங்கள், தேவன் தமது வார்த்தையை நிரூபிப்பார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். என்ன நடந்தாலும், நீங்கள் யோர்தானுக்கு எவ்வளவு அருகாமையில் இருந்தாலும், உங்கள் சூழ்நிலை என்னவாயிருந்தாலும், நீங்கள் மட்டும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை உங்கள் இருதயத்தில் பற்றிக் கொண்டிருப்பீர்களானால், தேவன் அதை உண்மையென்று நிரூபிப்பார். எல்லா அவிசுவாசத்தின் மத்தியிலும் அவர் இப்பொழுதும் அதை உண்மையென்று நிரூபிப்பார். ஆம், அவர் அதை செய்கிறார். சூழ்நிலைகள் அவரைத் தடுத்துநிறுத்த முடியாது. அவர் அன்று செய்ததையே இப்பொழுதும் செய்வார். 65கவனியுங்கள், தமது விசுவாசிகளின் மூலமாகவே அவர் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். அவர் அவிசுவாசிகளின் மூலமாய் அல்ல, விசுவாசிகளின் மூலமே... தமது வார்த்தையை நிரூபிக்க முடியும். மற்றவர்கள் எவ்வளவுதான், “ஓ, நான் பாருங்கள், நீங்கள் விசுவாசித்தால், தேவன் அதை நிரூபிப்பார். ஏனெனில் அது நிரூபிக்கப்படுவதை நாம் மற்றவர்களில் காண்கிறோம். அப்படியிருக்க அவர் செய்வதில்லை என்று நாம் எவ்விதம் கூற முடியும்? பாருங்கள் உண்மையான விசுவாசிகளின் மூலம் அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறாரேயன்றி, வாயளவில் தாங்கள் விசுவாசிப்பதாக கூறிக் கொள்பவர் மூலம் அல்ல. விசுவாசிக்கும் தமது பிள்ளைகளின் மூலமாக அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார். யோசுவா விசுவாசிகளைக் கொண்டிருந்தான். முன்பிருந்தவர்கள் மாண்டு போயினர். “நம்மால் தேசத்தைக் கைப்பற்ற முடியாது” என்று கூறின அவிசுவாசிகள் அனைவரும் மாண்டு போயினர். விசுவாசிகளைத் தவிர மற்றவர் அனைவரும் அழிந்து போகும்படி அவர் செய்தார் (ஏன்) யார் மீதமிருந்தனர்? மோசே மகிமையில் எடுத்துக் கொள்ளப்பட்டான். அவிசுவாசிகள் வனாந்தரத்தில் அழிந்து போயினர். இது அவர்களுடைய பிள்ளைகள். இரண்டு பேர் மாத்திரமே கடந்து சென்றனர், அவர்கள் விசுவாசிகளான யோசுவாவும் காலேபும். அவர்கள் விசுவாசிகள், அவர்கள் கடந்து சென்றனர். தேவன் அந்த ஒரு வழியில் மட்டுமே அதைச் செய்ய முடியும். அதாவது அவருடைய விசுவாசிக்கும் பிள்ளைகளின் மூலம். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. அதை செய்தது. அவருடைய விசுவாசிகளே. யோர்தானைக் கடந்துபோகப் பண்ண அவர் அவர்களை உபயோகித்தார். பாருங்கள்? 66நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு காலத்திலும் அவர் அவ்விதமே செய்து வருகிறார். அவர் ஒவ்வொரு முறையும் விசுவாசிகளை உபேயாகிக்கும் அதே முறையை கையாண்டு வருகிறார். விசுவாசிகள் அந்த வார்த்தையை சந்திக்க வேண்டுமென்பதற்காக, அவர் இதை அந்த காலத்திற்கென்று முன்குறிக்க வேண்டியதாயுள்ளது பார்த்தீர்களா? அந்த காலத்தின் சவாலைச் சந்திக்க அவர் இந்தக் காரியத்தை முன்குறிக்க வேண்டியதாயுள்ளது. நீங்கள் கிரகித்துக் கொண்டீர்களா? நீங்கள் உணருகிறீர்களா? நீங்கள் அதைக் காண்கிறீர்களா? உங்களுக்கு விளங்குகிறதா? இன்றைக்கு முன்னறிவினாலே அவர் இதை முன்குறித்தார். அவர் மல்கியா 4-ல் அதை முன்குறித்துள்ள போது, அது நடந்தேயாக வேண்டும். ஒன்று நடக்கவேண்டும் என்று அவர் தமது வார்த்தையில் முன்குறித்திருப்பாரானால், அவர் தமது வார்த்தையை நிரூபிக்க வேண்டும். ஒன்று நடக்கவேண்டும் என்று அவர் ஒன்றை முன்குறித்து, அது நடக்கும் என்று உரைத்திருப்பாரானால், அந்த வித்து அந்த குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் ஒரு மணவாட்டியை முன் குறித்தார். அவள் அங்கிருப்பாள்! எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கும், அவள் அங்கிருப்பாள்! அவர் தமது. முன்னறிவினாலே முன் குறிக்கிறார். அதை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. 67தேவன் இஸ்ரவேலரிடம், “உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் கொடுப்பதாக வாக்களிக்கிறேன் உங்கள் பிதாவாகிய ஆபிரகாமிடம், அவனுடைய பிள்ளைகள் நானூறு வருடம் அந்நியதேசத்தில் சஞ்சரிப்பார்கள் என்றுரைத்தேன்” என்றார். மோசே, “நான் கர்த்தருடைய தீர்க்கதரிசி, நான் தீர்க்கதரிசனமாக உரைத்ததை கவனித்து வாருங்கள். அது நிறைவேறினால், நான் கர்த்தரால் அனுப்பப்பட்டேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் தேவன் அதை ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் இதை நான் தீர்க்கதரிசனமாக உரைத்து அது நிறைவேறினால் அதை தீர்க்கதரிசனமாக உரைத்து அது நிறைவேறினால் இதை தீர்க்கதரிசனமாக உரைத்து அது நிறைவேறினால் ஒவ்வொரு முறையும் அது நிறைவேறினால், உங்களிடம் உரைக்க நான் தேவனால் அனுப்பப்பட்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் ஒன்றுண்டு, தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். பாருங்கள் தேவன் இந்ததேசத்தைக் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறார். அது செழிப்பான தேசம். அதில் பாலும் தேனும் ஒடுகிறது என்னைப் பின்பற்றி வாருங்கள்” என்றான். அவன் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டிய வனாந்தரத்தின் வழியாய் அவர்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, தேவன் அவர்களை சீனாய் மலையின் அருகில் கொண்டு வரும்படி கூறினார். அப்பொழுது தேவன் இஸ்ரவேலர் அனைவருக்கும் முன்பாக அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்து, “மோசே சொன்னது அங்குள்ளது என்பதை உறுதிபடுத்தி அது உண்மையென்று நிரூபித்தார். அவர் மோசேயையும் அங்கு உறுதிபடுத்தி. இந்த மலையின் மேல் நான் எரிகிற முட்செடியில் அவனுக்கு தரிசனமானதாக மோசே உங்களிடம் கூறினான். இப்பொழுது நான் மலை முழுவதையும் தீப்பிடிக்கப் பண்ணுகிறேன்” என்றார். அவர்கள், “அதோ தேவன் எங்களிடம் பேச வேண்டாம், மோசே எங்களிடம் பேசட்டும். இல்லையென்றால் நாங்கள் அழிந்து போவோம்” என்றனர். அவர், “நான் இனிமேல் பேசமாட்டேன். அவர்களுக்கு நான் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன், அவன் என் நாமத்தினால் அவர்களிடம் பேசுவான்” என்றார். அதை தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். அதே விதமாக அவர் தமது வார்த்தையை நிறைவேற்றி வருகிறார். 68கவனியுங்கள், அவிசுவாசித்தவர் அனைவரும் அவர்கள் அவிசுவாசித்த அந்த தேசத்தின் அருகாமையில் வந்த பிறகு, குறிப்பு எழுதிக் கொள்பவர்களே, எபிரேயர் 6-ஐக் குறித்துக் கொள்ளுங்கள். அது, “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிற படியால், அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்றுரைக்கிறது. பாருங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த தேசத்துக்கு அவர்கள் கடந்து செல்வது கூடாத காரியம். ஜனங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வரைக்கும் வருகின்றனர். அவர்கள் வார்த்தை வரைக்கும் வருகின்றனர். அவர்கள் எல்லா ஸ்தாபனங்கள், எல்லா சபைகள், எல்லா சபை பிரமாணங்கள், எல்லாவற்றின் வழியாகவும் வருகின்றனர். ஆனால் அவர்கள் அந்த கடக்கும் கோடாகிய வார்த்தைக்கு வரும்போது அவர்கள், “ஓ, அதைக் குறித்து எனக்குத் தெரியாது, என் சபை அவ்விதம் போதிப்பதில்லை என்கின்றனர். உங்கள் சபை என்ன போதித்தாலும் எனக்குக் கவலையில்லை, வேதம் அவ்விதம் உரைக்கிறது. நீங்கள், அது சரியென்று எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கலாம். அவர் அதை உறுதிப்படுத்தி, அதை நிரூபிக்கிறார். 69வேதாகமம் அந்த நாளில், ஒரு செழிப்பான தேசம் அங்குண்டு, அது பாலும் தேனும், சிறந்த திராட்சை பழங்களும், மாதுளம்பழங்களும் நிறைந்த அழகான இடம் என்றது. அவர்கள், “இந்த ஜனங்களை ஆறுதல்படுத்த, உங்களில் சிலர் அங்கு நழுவிச் சென்று அதைப் பார்த்துவிட்டு திரும்பி வாருங்கள். நீங்கள் விசுவாசித்தால், நாம் இப்பொழுதே கடந்து அங்கு செல்லலாம்” என்றனர். அந்த வேவுகாரர் அங்கு சென்றனர். இதோ அவர்கள் திரும்பி வருகின்றனர். ஓ, இரண்டு பேர், ஆர்ப்பரித்துக் கொண்டு, “தேவனுக்கு ஸ்தோத்திரம்! நாங்கள் அதைக் கண்டோம்! நாங்கள் அதைக் கண்டோம்! ஓ, அது அருமையானது. அதை போன்றது எதுவுமில்லை” என்றனர். மற்ற பத்து பேரும் அங்கு சூழநின்று கொண்டு, “ஓ, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, நம்மால் முடியாது” என்றனர். எத்தனை பேர் கடந்து அங்கு சென்றனர்? அந்த இருவர்! அது உண்மை. அந்த இருவர். ஏனெனில் தேவன் தமது வார்த்தை உண்மையென்று நிரூபிப்பார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கவனியுங்கள், வெள்ளம் பிரவாகித்த யோர்தானோ, வெள்ளத்தால் மூழ்கின யோர்தானின் கரைகளோ, கானானின் இராட்சதர்களோ அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, இல்லை ஐயா. தேவன் தமது வார்த்தையை நிரூபித்து, அவர்களை தேசத்துக்குள் கொண்டு சென்றார். இன்றைக்காக அளிக்கப்பட்ட வாக்குத்தத்தங்களைக் குறித்தும் அவர் அவ்விதமே செய்வார். ஆம், ஐயா. அவர் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். என்னவானாலும், அவர் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். 70அவருடைய வார்த்தை உண்மையென்பதையும் அவரால் விடுவிக்க முடியும் என்பதையும் தீர்க்கதரிசியாகிய தானியேலுக்கு நிரூபிக்க அவர் ஒரு நாள் பசியுற்ற, மனிதரை உண்ணும் சிங்கங்களின் வாயைக் கட்டினார். அவர்கள் அந்த சிங்கங்களுக்கு மனிதரின் மாமிசத்தை இரையாகக் கொடுத்து வந்தனர். அவர்கள் அந்த சிங்கங்களை பசியால் வாட வைத்திருப்பார்கள். அப்பொழுது அவர்கள் ஒரு மனிதன் அல்லது ஒரு குழந்தையை அதனிடம் தூக்கியெறியும் போது அது அவர்களுக்கு மரண தண்டனை. அந்த சிங்கம் அவர்களை கண்டம் துண்டமாக கிழித்துவிடும், பசியால் வாடின இந்த சிங்கங்கள். இஸ்ரவேல் புத்திரர் சிறைபிடிக்கப்பட்டு அந்த இடத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. அது நிறைவேறி அவர்கள் அங்கிருந்தனர். கர்த்தருடைய வார்த்தையை உடையவனாயிருந்த இந்த தீர்க்கதரிசியும் அவர்களுடன் அங்கிருந்தான். அவர்கள் அந்த சிங்கங்களைப் பட்டினிபோட்டு, இந்த தீர்க்கதரிசியை அங்கு எறிந்தனர். அப்பொழுது சிங்கங்கள் அவனை நோக்கி இப்படி வேகமாக ஓடி வந்தன. ஆனால் அக்கினி ஸ்தம்பம் அங்கு நின்று கொண்டிருந்தது (எந்த மிருகத்துக்கும் அக்கினியைக் கண்டால் பயம்). அந்த அக்கினி ஸ்தம்பம் அங்கு நின்று கொண்டிருந்தது, அதைக் கண்ட சிங்கங்கள் படுத்துக்கொண்டன. அவர் தமது வார்த்தையை நிறைவேற்றினார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். தேவன் தமது வார்த்தையைக் காத்துக்கொண்டு அதை நிரூபிக்கிறார். அது உண்மையென்று நிரூபிக்கிறார். 71தேவன் அக்கினியிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார் என்னும் தமது வார்த்தையை நிரூபிக்க, எரிகிற சூளையிலிருந்த அக்கினி ஜுவாலையின் உஷ்ணத்தை எடுத்துப் போட்டார். அந்த அக்கினி ஜுவாலையின் மத்தியில் அந்த எபிரேயப் பிள்ளைகள் எறியப்பட்டனர். அதில் எறிவதற்காக அவர்களைக் கொண்டு சென்ற அந்த போர் வீரர்கள் அக்கினியின் உக்கிரத்தால் எரிந்து போயினர், இவர்களோ அந்த சூளையில் நீண்ட நேரம் தங்கியிருந்தனர். தேவன் அக்கினி எரியும்படி செய்து, அதன் உஷ்ணத்தை அதிலிருந்து எடுத்துப் போட்டார். அவர் நிரூபிக்கிறார்! நீங்கள் அவர் பக்கம் நின்றால், அவர் உங்கள் பக்கம் நிற்பார். உங்கள் பக்கம் நிற்பாரா? ஆம், நிச்சயமாக! ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் சூளையின் வாசலைத் திறந்தனர். நெபுகாத்நேச்சார், “நாம் எத்தனை பேரை அதற்குள் போட்டோம்? நாம் போட்ட மூன்று பேரை அங்கு காண்கிறோம். ஆனால் நான்கு பேர் இருக்கிறார்களே, அவர்களில் ஒருவர் காண்பதற்கு தேவபுத்திரனைப் போல் இருக்கிறாரே” என்றான். பாருங்கள், அவர் காண்பிக்கிறார்! ஏன்? அவர் வார்த்தையாயிருக்கிறார் இந்த எபிரேயப் பிள்ளைகள், “தேவன் எங்களை அக்கினிச் சூளையிலிருந்து நீங்கலாக்கிவிடுவிக்க வல்லவராயிருக்கிறார். விடுவிக்காமற் போனாலும் நாங்கள் இந்த சிலையைப் பணிந்து கொள்ளமாட்டோம். ஏனெனில் நாங்கள் வார்த்தையில் நிலைநிற்கிறோம்” என்றனர். விக்கிரகத்தினின்றும், மார்க்க ஒழுங்கினின்றும் விலகுங்கள். அப்பொழுது தேவன் உங்கள் பக்கம் நிற்பார். அவர் உபத்திரவத்தின் உஷ்ணத்தை எடுத்துப் போடுவார். அவர் புற்று நோயிலுள்ள ஜீவனை எடுத்துப் போடுவார். அவர் எடுத்து... அவர் எதையும் செய்வார். அவர் தேவன்! நீங்கள் அவர் பக்கம் நில்லுங்கள், அவர் உங்கள் பக்கம் நிற்பார். அவர் ஒவ்வொரு முறையும் தமது வார்த்தை உண்மையென்று நிரூபிக்கிறார். அவர் அக்கினி ஜுவாலையின் உஷ்ணத்தை எடுத்துப் போட்டார், சிங்கங்களின் வாயைக் கட்டினார், எத்தனையோ காரியங்களைச் செய்தார். 72தேவன், தாம் தேவன் என்பதைக் காண்பிக்க மற்றுமொரு காரியத்தைச் செய்தார். வனாந்தரப் பிரயாணத்துக்குப் பிறகு மனிதன் அறிவைச் சம்பாதித்து தன்னை பெரிய மனிதனாக்கிக் கொண்டான். அவர்களுக்கு பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் போன்ற சில ஸ்தாபனங்கள் இருந்தன. அவர்கள் மேதைகள். அவர்கள் இவர்களிலிருந்து, ஆசாரியர்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் பிரதான ஆசாரியர்களையும், பெரிய மனிதர்களையும், பெரும் பதவியில் அமர்த்தி இத்தகைய செயல்களைப் புரிந்தனர். ஆனால் தேவன் இவையனைத்தின் மத்தியிலும், ஒரு ஆசாரியனின் குமாரனை தீர்க்கதரிசியாக எழுப்பினார். ஒரு போதும்... அவனுக்கு ஒன்பது வயதான போது அவன் வனாந்தரத்துக்குச் சென்றான். எவ்வளவு பெரிய எழுத்தில் அவனுடைய பெயரை எழுதினாலும், அவனுக்குப் படிக்கத் தெரியவில்லை. ஏன், அவன் ஏன் அப்படி செய்தான்? அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தன் தகப்பன் போல் கல்வி பயின்றிருந்தால், ஒருவேளை பரிசேயர், சதுசேயர் போன்ற குழுக்கள் ஒன்றில் சேர்ந்திருப்பான். ஆனால் அவனுக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தது, அதுதான் மேசியாவை அறிவிக்கும் வேலை. ஏன்? தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றி, அதை நிரூபித்தார். “நான் டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்டேன் என்று வேதாகமக் கல்லூரியிலிருந்து கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாயிற்று” என்றா? அது கிழவிகளின் பிறந்த நாள் பஞ்சாங்கத்தில் காணப்படலாம், ஆனால் தேவனுடைய வார்த்தையில் அல்ல. அவன், “கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வை பண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று” என்றான். அப்பொழுது அவன், வார்த்தை தோற்றமளிப்பதற்கென்று வார்த்தைக்கு வழியை ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தானா? அல்லேலூயா! 73இவை நிழல்களாய் உள்ளதை உங்களால் காணமுடியவில்லையா? கடைசி நாட்களில் வார்த்தை வெளிப்படுவதற்காக ஒரு இடம் ஆயத்தம் பண்ணப்பட வேண்டும். நாம் இப்பொழுது புதிய தேசமாகிய, ஆமென், மனுஷகுமாரன் என்னும் அத்தாட்சியினால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யோவான் கல்வியறிவு இல்லாதவனாய், ஒன்றும் இல்லாதவனாய், ஊழியத்துக்கான கட்டளை பெற்று, வனாந்தரத்தில் வசித்து வந்தான். அவனுடைய பிரசங்கங்கள் உதாரணங்களைக் கொண்டதாயிருந்தன. “கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது”. அதைதான் அவன் கண்டான், கோடாரியால் வெட்டி, தனக்கு சிறு வீட்டை உண்டாக்கி, மரத்தில் நெருப்பு மூட்டினான். “ஓ, பாம்பின் சந்ததிகளே. அதை தான் அவன் கண்டான். காட்டில் உள்ள புதரில் அவனுக்கு மிகவும் அருவருப்பாக காணப்பட்டது பாம்பு. அவன், ”பாம்பின் சந்ததிகளே, வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? எங்களுக்கு இது உண்டு, நாங்கள் இதை சேர்ந்திருக்கிறோம். அதை சேர்ந்திருக்கிறோம்“ என்று சொல்ல நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார். கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. நல்ல கனிகொடாத மரமெல்லாம்... அது வனாந்தரத்தில் கனிகொடாமல் போனால் அவன் என்ன செய்கிறான்? அவன் வெட்டுக்கிளிகளையும் மற்றவைகளையும் தனக்கென வளர்த்து, இதை வெட்டி எரித்து விடுகிறான். பாருங்கள்? அவர் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். அப்படிப்பட்ட ஒருவன், குருவானவரின் மேலங்கியையும் தொப்பியையும் அணிந்து கொள்ளவில்லை. பாருங்கள்? அவன் ஆட்டுத்தோல் துண்டால் தன்னைச் சுற்றிக் கொண்டு, ஒட்டகத்தின் முதுகு தோலை மேலே போர்த்துக் கொண்டு, வளர்ந்த தாடியுடனும் பரட்டை தலையுடனும் அங்கு வந்து, ”கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது“ என்றான். அவன் தைரியத்தோடு வருகிறான். ஏன்? ”தேவன் இந்தக் கல்லுகளினாலே வல்வலராயிருக்கிறார்“ என்னும் தேவனுடைய வார்த்தை அங்கு நிரூபிக்கப்பட்டது. ”இதோ, நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்“ என்று தேவன் வாக்களித்தார். அது மத சம்பந்தமான, விஞ்ஞான சம்பந்தமான நிரூபணம் அல்ல, ஆனால் தேவனுடைய வார்த்தையின் நிரூபணம். தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றினார். பாருங்கள்; ஒரு படித்த அறிவாளி அல்ல, ஆனால் கர்த்தருடைய நாமத்தில் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. அவன் அதை செய்தான். ஏன்? அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்த. 74அந்த ஆசாரியர்கள். “கடைசி நாட்களில் ஒருவர் வரப் போகிறாரென்று நாம் அறிந்திருக்கிறோம். எனவே நமது பையன்கள் அனைவரையும் வேதாகமக் கல்லூரிக்கு அனுப்பி அதற்கென்று ஆயத்தப்படுவோம். பையன்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கல்லூரிக் கல்வி பெற்று இங்கு வரவேண்டும். அது எந்த சந்ததி என்பதில் சந்தேகமில்லை. அவன் லேவியரின் சந்ததியில் தான் வரவேண்டும். ஏனெனில் ஆசாரியத்துவம் அந்த சந்ததிக்கே உரிமையானது” என்றனர். ஆனால் அவன் ஆசாரியன் அல்ல, அவன் தீர்க்கதரிசி. அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதல். அவன் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்திலிருந்தோ அல்லது குறிப்பிட்ட வம்சத்திலிருந்தோ வர வேண்டுமென்பதில்லை. அது தேவன் தமது முன்னறிவினால் முன்குறித்து தெரிந்து கொள்ளுதல். தேவன் தெரிந்து கொள்ளும் வழியில் அவன் வருகிறான். அவர்கள் அவனை விசுவாசிக்கவில்லை. ஏனெனில் அவன் தாங்கள் நினைத்துக் கொண்டிருந்த முறையில் வரவில்லை. உங்களுக்குத் தெரியுமா, அது மீண்டும் நிகழ ஏதுவுண்டு. அது வழக்கமாக அப்படித்தான். அவன் தேவனுடைய வார்த்தையை நிரூபிக்க, தேவன் நியமித்த வழியில் வந்தான் என்று நாம் காண்கிறோம். 75கவனியுங்கள், அவர் தமது வார்த்தையை நிரூபிக்க, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகும்படி செய்தார். “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” என்று ஏசாயா: 9-5-ல் நாம் காண்கிறோம். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்” என்று அவர் உரைத்ததாக நாம் காண்கிறோம். தேவன் ஒரு கன்னிகை கர்ப்பவதியாகும்படி செய்தார். ஏன்? தமது வார்த்தையை நிரூபிக்க. இப்பொழுது கவனியுங்கள், இன்னும் சில நிமிடங்களில் நாம் முடிக்கப் போகிறோம். அவர் தமது வார்த்தையை நிரூபிப்பதற்கென ஒரு கன்னிகை கர்ப்பவதியாகும் படி. செய்தார். அது முற்றிலும்... அது எல்லா விஞ்ஞானிகளையும் திணறடித்தது (ஒலிநாடாவில் காலி இடம்)... 76அது உங்களுக்கு விளங்குகிறது, இல்லையா? பாருங்கள், பூமியானது சபிக்கப்பட்டுள்ளது. ஆதாமின் பாவத்தின் காரணமாக, பூமி முழுவதுமே சபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறு வித்து... இப்பொழுது, ஸ்திரீக்கு வித்து இல்லை. வித்து விதைக்கப்படுவதற்கு அவளிடம் நிலம் உள்ளது. ஆனால் வித்து இல்லை. ஏனெனில் அதில் எந்த ஜீவனும், ஜீவனானது... ஒருவித்து அதனுள் ஜீவனைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் ஜீவன் அதற்குள் இல்லையென்றால் அது உதவாத பொருள். வித்து மனிதனில் உள்ளது. அதன் காரணமாகத்தான் சர்ப்பத்தின் வித்து ஒரு ஸ்திரீயில் வைக்கப்பட வேண்டியிருந்தது, பாருங்கள், அது தேவனுடைய வித்தல்ல. அதை நாமறிவோம். இந்தப் புத்தகம் கிடைக்கும் வரைக்கும் காத்திருந்து அதைப் படியுங்கள், அப்பொழுது உங்களுக்கு அது விளங்கும். அது உங்களுக்கு வேதப்பூர்வமாக காண்பிக்கப்பட்டுள்ளது. அவருடைய நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் போன்று இதுவும் முழுவதுமாக திறக்கப்பட்டு, அது என்னவென்பதைக் காண்பீர்கள். தேவன் ஒரு போதும் தவறாயிருப்பதில்லை, அவர் எப்பொழுதும் சரியாயிருப்பார். உங்களால் அதை புரிந்து கொள்ள இயலாவிட்டால், அதை எப்படியாயினும் விசுவாசியுங்கள், அது முற்றிலும் உண்மை. 77நாம் காண்கிறோம், அவர் இதை சொன்னார், அவர் இது நடக்கும்படி செய்தார். மனிதனின் தொடர்பில்லாமல் அவர் சிருஷ்டித்த அந்த சிறு வித்து நிலத்திருந்த அந்த சிறு முட்டைக்குள் வந்தபோது, அந்த சிறு வித்து, அந்த சிறு கிருமி, முட்டைக்குள் நகர்ந்து சென்று அதன் சிறு வால் நெளிந்து, அது உயிரணுவுக்கு மேல் உயிரணுவை உற்பத்திசெய்து, தாயின் ஜீவனைக் கொண்டு வாழ்கிறது. அவள் சரீரத்திலுள்ள தன் இரத்தத்தின் மூலம் அதைப் போஷிக்கிறாள். அவள் அதை போஷிப்பதாக நாம் காண்கிறோம். அதன் இரத்தம் அவள் இரத்தம் அல்ல. அது தாயின் இரத்தத்தை சிறிதளவும் கூட பெற்றிருக்கவில்லை. அது தாயிடமிருந்து விட்டமின் சத்துக்களைப் பெற்று போஷிக்கப்படுகிறது. ஆனால் அது அவள் இரத்தத்தைப் பெற்றிருக்கவில்லை. அது அதிர்ச்சியினின்றும், மற்றவைகளினின்றும், பாதுகாக்கப்படதாயின் இரத்தத்தினாலும், தண்ணீரினாலும் சூழப்பட்டுள்ளது, ஆனால் ஒரு துளி தாயின் இரத்தமும் கூட அது பெற்றிருக்கவில்லை. க்ஷயரோகத்தினால் பாதிக்கப்பட்ட தாய் குழந்தையை பிரசவித்தால், அந்த வியாதி குழந்தைக்கு வராது. ஏனெனில் க்ஷயேராக கிருமி இரத்தத்தின் மூலம் வருகிறது. பாருங்கள், அது... க்ஷயரோகம் குழந்தைக்கு வருவதில்லை. தாயின் பலவீனத்தை அது பெற்றுக்கொள்ளும், ஆனால் க்ஷயரோகத்தை அல்ல. ஏனெனில் தாயின் மூச்சு அதன் மேல் பட்டால் தான் அந்த கிருமி அதற்குள் வரும், பாருங்கள். அது பிறக்கும் போது அந்த வியாதி இல்லாமல் பிறக்கிறது. ஏனெனில் அதற்கு தாயின் இரத்தம் கிடையாது. 78தேவன் இந்த சிறு உயிரணுவுக்குள் வந்து, தன் தாயின் விட்டமின்களைப் பெற்றுக் கொண்டு உயிரணுக்களைப் பெருக்கிக் கொண்டார். அவர் தானாக உண்ணும் வயதை அடைந்த போது, அவர் உண்டார். அது என்ன? அது பூமியின் மண். அதிலிருந்து தாவர இனங்களும் மிருக இனங்களும் தோன்றுகிறது. அவர் மீனையும் ரொட்டியையும் புசிக்கத் தொடங்கின போது. உயிரணுக்கள் மேலும் பெருகின. அவர் வளர்ந்து அவருக்கு முப்பது வயதான போது, அவர் யோவானுக்கு, இல்லை தேவனுக்கு கீழ்படிந்து அங்கு தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானம் பெற்று கரையேறினார். என்ன நடந்தது? தேவன் புறாவைப் போல் வானத்திலிருந்து, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்” என்னும் சத்தத்துடன் இறங்கி வந்தார். அவர் எதைச் செய்ய இறங்கி வந்தார்? பூமியின் அந்த பாகத்தை மீட்பதற்காக. அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர். தேவன் ஒரு சிருஷ்டியல்ல, கிறிஸ்துவில் மாத்திரம் அவர் சிருஷ்டியாயிருக்கிறார். தேவன் நித்தியமானவர், அவர் ஆவியாயிருக்கிறார். ஆவி சிருஷ்டிக்கப்படுவதில்லை. அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர். தேவன் அந்த சரீரத்தை மீட்டுக்கொண்டார். அவர் இறங்கிவந்து, “இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தபோது. 79எனவே அவர், தேவன், இதை செய்து முடித்த பின்பு இறங்கி வந்தார். இப்பொழுது அதை புசித்து இயற்கை உடலுறவினால் பிறந்த ஒவ்வொரு குமாரனும் நீங்கள் அவ்விதம் தான் இவ்வுலகிற்கு வருகிறீர்கள். அதன் பிறகு நீங்கள் தண்ணீர் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் நிலைக்கு வரும்போது, அக்கினி அபிஷேகத்தின்போது பரிசுத்த ஆவி இறங்கி வந்து இயேசுவைச் செய்தது போல, இந்த சிருஷ்டியை உரிமையாக்கிக் கொள்கிறார். பரிசுத்த ஆவியும் தேவனும் ஒரே ஆவியே, பாருங்கள். அவர் இறங்கி வந்து இந்த சரீரத்தை உயிர்த்தெழுதலுக்கென உரிமையாக்கிக் கொள்கிறார். அவர் நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டு இருக்கிறார். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், அவைகளில் ஒன்றும் இழந்து போவதில்லை. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். தலையிலுள்ள ஒரு மயிராகிலும் அழிந்து போவதில்லை”. அது தேவனுடைய சிருஷ்டியின் ஆதியுமானது, இது தேவனுடைய சிருஷ்டியின் தொடர்ச்சி. பிறகு பூமி முழுவதும் அக்கினி அபிஷேகம் பெறவேண்டும். அதன் பிறகு பரிசுத்த ஆவி ஒரு நகரத்தில் வந்து பூமியின் மேல் வசிக்கிறார். அப்பொழுது மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கும். அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார். தேவன் பூமியிலே வாசமாயிருப்பார். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் மீட்பின் முழு திட்டமும், முன்பிருந்தது போலவே இப்பொழுதும். 80இப்பொழுது கவனியுங்கள், அவர் ஒரு கன்னிகை கர்ப்பவதியாகும்படி செய்தார். இதன் விளைவாக அவள் புருஷனை அறியாமலேயே ஒரு குமாரனை பிரசவித்தாள். இது காலங்கள் தோறும் விஞ்ஞானத்தை திணறச் செய்தது. அது இப்பொழுதும் செய்கிறது. ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று ஏசாயா உரைத்தபோது, அவர்கள் ஒருவேளை அவனைப் பார்த்து சிரித்திருப்பார்கள். தேவன், “அவர்களுக்கு ஒரு உன்னத அடையாளத்தைக் கொடுப்பேன், அவர்களுக்கு ஒரு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன், ஒரு கன்னிகை காப்பவதியாவாள்” என்று உரைத்ததை ஏசாயா கேட்டபோது அவனுடைய தர்மசங்கடமான நிலையை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவன் தனது ஜனங்களின் மத்தியில் பிரபலமானவன், தேவனால் உறுதிப்படுத்தப்பட்டவன். அவன் மருத்துவர்கள் மற்றுள்ளவர் முன்னிலையில், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று உரைக்க வேண்டியதாயிருந்தது. பாருங்கள், காலம் தொடங்கின முதற்கு, தேவன் முதலாவது மனிதனை சிருஷ்டித்த முதற்கொண்டு. இத்தகைய ஒன்று நிகழ்ந்ததேயில்லை. ஆனால் இங்கு அவன், பூமியில் உள்ள ஒரு ஸ்திரீ அந்த வழியில் கர்ப்பவதியாகப் போகிறாள் என்று அறிவிக்க வேண்டும். நியாயமாக சிந்தித்துப் பார்த்தால் அந்த தீர்க்கதரிசிக்கு தர்மசங்கடமாய் இருந்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுவார், அவர் அதை நிரூபிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான். அப்பொழுது இருந்த ஒவ்வொரு எபிரேய குடும்பமும் தங்கள் மகள் இவ்விதம் குழந்தை பெறுவாள் என்று கருதி, அதற்கு காலுறைகள், துணிமணிகள் போன்றவைகளை வாங்கி ஆயத்தம் செய்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். பல சந்ததிகள் கடந்து சென்றன. ஆனால் தேவன் தமது வார்த்தையை நிரூபித்தார். ஒரு கன்னிகை கர்ப்பவதியானாள். அவள் குழந்தையைப் பெற்று, அவருடைய தீர்க்கதரிசியின் வார்த்தை உண்மையென்பதை நிரூபித்தாள். அவர் எப்பொழுதுமே அதை நிறைவேற்றி வருகிறார். 81இந்த கன்னிகையின் குமாரன் மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தை. இப்பொழுது பரி. யோவான் 1, நீங்கள் படிக்க விரும்பினால், அது பரி. யோவான் 1, இந்த தீர்க்கதரிசி; இந்த கன்னிகையின் குமாரன் மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தை, தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர். பூமி முழுவதுமே தேவனுடைய சிருஷ்டிதான், ஆனால் அது இழக்கப்பட்டுவிட்டது. பாருங்கள்? பிறகு அவர் இந்த பூமியை மீட்கிறார். நீங்கள் பூமியின் ஒரு பாகமாய் இருக்கின்றீர்கள். அவர் பூமி முழுவதையும் மீட்கும் அதே வழியில் உங்களையும் மீட்கிறார். பாருங்கள்? இப்பொழுது, இந்த கன்னிகையின் குமாரன் மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். அவர் இதைக் கைவிட, சாத்தான் எல்லா சூழ்ச்சிகளையும் கையாண்டான். அவர் இதைக் கைவிட சாத்தான் தன்னாலான எல்லாவற்றையும் கையாண்டான். அவர் பாடுபடாமலே ராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளவும்; (அவர் இரத்தத்தின் மூலமாக மட்டுமே அதைப் பெற வேண்டும் என்று தேவன் ஏதேன் தோட்டத்தில் ஆட்டுக்குட்டியைக் கொன்று அவருடைய திட்டத்தை வெளிப்படுத்தியிருக்க), மீட்பு இல்லாமலேயே அவர் அதைப் பெற்றுக் கொள்ள சாத்தான் முயற்சி செய்தான். அவருக்கு விருப்பமானால், உலகத்தின் ராஜ்யங்கள் அனைத்தையும் அவர் பெற்றுக் கொள்ளலாம் என்று சாத்தான் வாக்களித்தான்! அது எத்தகைய வாக்களிப்பு என்பதை சிந்தித்துப் பாருங்கள்! 82என் விலையேறப்பெற்ற நண்பர்களே, இந்த நிமிடத்தில் சாத்தான்... உங்களை சங்கத்தின் சிறந்த போதகர்களில் ஒருவராக செய்துவிடுவதாக வாக்களிப்பதை நீங்கள் உணருவதில்லையா? அவன் உங்களுக்கு சபையில் முன் இடத்தைக் கொடுத்து உங்களை 'டீகன்' ஆக்கிவிடுவான். நீங்கள் மாத்திரம் வார்த்தையை விட்டு விலகிவிட்டால், அவன் எதை வேண்டுமானாலும் செய்வான். இப்பொழுது கவனியுங்கள், எல்லா... அவன் உலகத்தையும் எல்லா ராஜ்யங்களையும் அவருக்குத் தருவதாகவும், அவர் அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினான். அவர் அந்த வார்த்தையை மீறப் பண்ண அவன் முயன்றான். அவர் அவன் முன்னிலையில் இருப்பதை அவன் அறிந்ததால், அவனால் முடிந்தால் அதை செய்ய நினைத்தான். அவன் மோசே வார்த்தையை மீறும்படி செய்தான். அவன் ஏவாள் வார்த்தையை மீறும்படி செய்தான். ஆனால் இம்முறை அவன் தவறான ஆளை சந்தித்தான். ஏன்? அவரே வார்த்தை, அவன் அதை அறியாமலிருந்தான். அவரே அந்த வார்த்தையாக இருந்தார் 83அவனை என்னால் காண முடிகிறது. ஒரு சிறு பிள்ளை அவனைக் கற்பனை செய்வது போல் நாமும் செய்வோம். அவன் கறுப்பு செட்டைகளை அடித்துக் கொண்டு ஏவாளிடம் வந்து, “உனக்கு சொல்லுகிறேன், அது இனிமையானது. அதை நீ முயன்று பார்க்க வேண்டும்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. “நாங்கள் அப்படி செய்தால் சாகவே சாவோம் என்று தேவன் கூறியுள்ளார். “ஓ, அப்படியா, நீ நிச்சயமாக சாகமாட்டாய். ஓ, அது மூடத்தனம். அது ஏதோ பழைய நாகரீகம் கொண்ட ஒரு கருத்து. அதை ஒன்றும் விசுவாசிக்காதே”. ஆனால் தேவன் அவ்விதம் உரைத்திருந்தார்! அது சரியென்று தேவன் நிரூபித்தார். அவர் இப்பொழுதும் அதை நிரூபித்து வருகிறார். ஒவ்வொரு நிமிடமும் ஜனங்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். அவர் இன்னமும் அது சரியென்று நிரூபித்து வருகிறார். கவனியுங்கள், அவன் மோசேயிடம் வந்து, “மோசே, நீ துணிகரமுள்ளவன், நீ கோபக்காரன். அந்த துரோகிகளின் கூட்டம் என்ன செய்ததென்று பார். அவர்களிடம் நீ ஏன் போய் அதைக் குறித்து சொல்லக் கூடாது” என்றான். மோசேயும் அப்படியே செய்தான். 84ஆனால் அவன் இயேசுவுக்கு எதிராக வந்த போது, அவன் பத்தாயிரம் வோல்டு மின்சாரக் கம்பியைத்தொட்டுவிட்டான். அது அவனுடைய செட்டைகளை சிறிது எரித்துவிட்டது. அவன், “ஓ, கவனியும். இந்த ராஜ்யங்கள் அனைத்தும் உமக்குத் தருவேன் என்றான். “எழுதியிருக்கிறதே” பாருங்கள்? “எழுதியிருக்கிறதே”, அவன், “நீர் தேவனுடைய குமாரனேயானால் என்றான். பாருங்கள், அவன் எப்பொழுதும் அதை சந்தேகித்தான். அவன் இப்பொழுதும் மற்றவர்கள் அதை சந்தேகிக்க அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறான். அவன் ஏவாள் அதை சந்தேகிக்க அவளுக்கு கற்றுக் கொடுத்தான், மோசேக்கு கற்றுக் கொடுத்தான், மற்றெல்லாருக்கும் அவர்கள் சந்தேகிக்க கற்றுக் கொடுத்தான். அவன் உங்களுக்கும் அதை சந்தேகிக்க கற்றுக் கொடுக்கிறான். இங்கு இப்பொழுது உட்கார்ந்திருக்கிறவர்களே உங்கள் பெயர்களை நான் கூப்பிட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்; நீங்கள் என்னைச் சந்தேகிக்கும்படி செய்ய சாத்தான் நீண்ட நாட்களாய் முயன்று வருகிறான். அப்படி செய்யாதீர்கள். “சகோதரியே, அப்படி செய்தால், நீ... என்னை அல்ல, நீ பொதுவாய் சந்தேகிக்கிறாய். இந்த வார்த்தையை விசுவாசி. என்னை நீ விசுவாசிக்கத் தேவையில்லை. இதை நீ விசுவாசி. பாருங்கள்? இந்த வார்த்தையை நான் உரைக்கும்போது, அது என்னுடைய வார்த்தையல்ல, அவருடைய வார்த்தை. என் வார்த்தை வித்தியாசமானது. ஆனால் இது அவருடைய வார்த்தை. பாருங்கள்? கவனியுங்கள், இப்பொழுது, கவனியுங்கள், இப்பொழுது அதில் பிரவேசிக்க நான் விரும்பவில்லை. 85இல்லை, அவர் தமது வார்த்தைகள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்று வாக்களித்திருக்கிறார். அவர் நிரூபித்தார், அவரே உண்மையான வார்த்தை என்பதை நிரூபித்தார். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்”. என்ன, அவன் எப்படி பிழைக்கிறான்? தேவனுடைய சில வார்த்தைகளை மாத்திரம் ஏற்றுக் கொண்டால், அவன் பிழைப்பானா? அவர் அவ்விதம் கூறவில்லை. கவனித்தீர்களா? “ஒவ்வொரு வார்த்தையினாலும்” என்பதை அவன் எப்படி பிழைக்கிறான்? “ஓ, அவன் அங்கே புசிக்கிறான்”. இல்லை, அவன் வேகமாக மரித்துக் கொண்டிருக்கிறான், அது மாம்சம். “நல்லது, அவன், ஓ, அவன் சபையைச் சேர்ந்தவன். அவன் அதை தவிர மற்றெல்லாவற்றையும் விசுவாசிக்கிறான்” அவன் அப்பொழுதும் மரித்தவன். உங்களுக்கு விளங்குகிறதா? “அவன் பிரதான ஆசாரியன், பேராயர், கார்டினல், போதகர் வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் மட்டுமே பிழைக்க முடியும்” என்றா உள்ளது? தேவன்! “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்”. அது தேவனுடைய வார்த்தை என்று நாம் எவ்விதம் அறிந்துகொள்வது? அவர் அவ்விதம் உரைத்து, அதன் பிறகு அதை நிரூபிக்கிறார். அவர் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். கவனியுங்கள், அப்படியானால், உங்கள் அறிக்கை உங்களை பிழைக்கச் செய்யாது. நீங்கள் சபையில் அங்கத்தினராயிருப்பது உங்களை பிழைக்கச் செய்யாது. கவனியுங்கள், அவருடைய வார்த்தையினால் மாத்திரம். ஒரு வார்த்தையும் தவறான இடத்தில் பொருத்தப்படக் கூடாது. ஒரு வார்த்தையையும்... ஒரு வார்த்தை மனித குலத்தையே கொன்றது. வேதாகமத்தில் வெளிப்படுத்தல் 22-ன் படி; ஒரு வார்த்தை இப்பொழுதும் முழுவதையும் கொன்றுபோடும், அவனுடைய பெயர் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்து போடப்படும். “ஒருவன் ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது ஒருவார்த்தையை எடுத்துப் போட்டால். ஒரு வார்த்தை அல்ல! இல்லை... இல்லை, தவறாகக் கூறிவிட்டேன், இரண்டு வார்த்தைகள் அல்ல, ஒரு வார்த்தை! ஒரு வாக்கியம் அல்ல, ஒரு வார்த்தை! ஒரு வார்த்தை! ஓ, ஜனங்களே, உங்களுக்கு விளங்குகிறதா? 86நான் இங்குள்ளவர்களிடம் மாத்திரம் இதைக் கூறவில்லை. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு உலகம் முழுவதும் செல்கிறது. உலகிலுள்ள ஜனங்களே, ஏவாள் ஒரு வார்த்தையை, ஒரு வார்த்தையை ஒரு வாக்கியத்தை அல்ல, ஒரு பகுதியை (paragraph) அல்ல, ஒரு வார்த்தையை அவிசுவாசித்தாள் என்று உங்களுக்கு விளங்குகிறதா? கொண்டு வந்தது ...தேவன் அதை நிரூபித்தார். “நீ ஒவ்வொரு வார்த்தையும் கைக்கொண்டால் பிழைப்பாய்”. அவர்கள் ஒரு வார்த்தையை அவிசுவாசித்தனர். அது மனித குலத்துக்கு மரணத்தை கொண்டு வந்தது. மனிதன் தன்னுடைய சரீர பலத்திற்காக அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பவனாயிராமல், ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். அது எழுதப்பட்ட விதமாகவே. அதை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாதென்று வேதம் உரைக்கிறது. எந்தவிடத்திலுள்ள எந்த மனிதனும், எவருமே தேவனுடைய வார்த்தையை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாது. தேவனே தமது சொந்த வியாக்கியானி. அவர், “வெளிச்சம் உண்டாகக் கடவது” என்றுரைத்து அதை வாக்களித்த போது, வெளிச்சம் உண்டாயிற்று. அவர் “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றுரைத்தார். அவள் கர்ப்பவதியானாள். பாருங்கள், தேவன் அவர் உரைக்கும் எதையுமே நிரூபிக்கிறார். 87சரீர உயிர்த்தெழுதல் இருக்க முடியாது என்று நீங்கள் எவ்வளவுதான் நினைக்க முயன்றாலும், மரித்துப் போன அந்த ஜனங்கள் அங்கு பூமியின் மண்ணாக மாறி, அவர்களுடைய சரீரம் அமிலங்களாகவும் வாயுக்களாகவும் மாறிப் போனாலும், அவர்களுடைய ஆத்துமா இன்னமும் ஜீவிக்கிறது. தேவன், “நான் அதை எழுப்புவேன்”, என்று உரைத்துள்ளார். யோபு, “இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, நான் என் மாம்சத்திலிருந்து தேவனைப் பார்ப்பேன்” என்றான். பாருங்கள், என்னவானாலும், ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற வேண்டும். மனிதன் அந்த வார்த்தையினால் பிழைப்பான். மரித்து நான்கு நாட்களான ஒரு மனிதனை அவர் எழுப்பி, அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் என்பதை நிரூபித்தார். மரித்து நான்கு நாட்களாகி நாறிப் போன ஒரு மனிதன்; அவனுடைய மூக்கு இந்த நான்கு நாட்களில் விழுந்து போனது. அது உண்மை. ஒரு மனிதன் மரித்த பின்பு, முதலில் விழுந்து போவது அவனுடைய மூக்கு. அது தனியே பிரிந்து சவத்தின் மேல் விழுகிறது. அதன் பிறகு தோல் கிருமிகள், நீங்கள்... உங்களை நன்றாக அடைக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து புதைத்துவிட்டால், நீங்கள் வேறென்ன செய்தாலும், தோல் கிருமிகள் நிலத்திலிருந்து வரவேண்டியதில்லை, அவை உங்கள் உடலிலே உள்ளன. யோபு, “என் தோல் கிருமிகள் என்னை அழித்தாலும்” என்று கூறினதை கவனித்தீர்களா? (ஆங்கில வேதாகமத்தில் “And though after my skin worms destroy this body” - அதாவது “என் தோல் கிருமிகள் இந்த சரீரத்தை அழித்த பின்பு என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). பூமியிலுள்ள கிருமிகள் அல்ல, அவை ஒன்றும் இருக்காது. கிருமிகள் உங்களுக்குள் இருந்து, உங்களை அழிக்க ஆயத்தமாய் உள்ளன. மரணம் அழிந்து போகக் கூடிய உங்கள் சரீரத்தில் கிரியை செய்கிறது. ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பெற்றிருந்தால் அழிந்து போகக் கூடிய உங்கள் சரீரத்தை மறுபடியும் எழுப்ப மறுபடியும் உங்கள் சரீரத்தில் கிரியை செய்கிறது. பாருங்கள்? அவர், ”நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்“ என்பதை நிரூபிக்க, மரித்து நான்கு நாட்களாகி, ”அவன் நாறுகிறான் என்று கூறப்பட்ட மனிதனை உயிரோடெழுப்பினார். தேவனைத் தவிர வேறு யார்“, பாருங்கள், ”நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று கூற முடியும்? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருடைய வார்த்தை உண்மையென்பதை நிரூபிக்க, அவர் அந்த மனிதனை உயிரோடெழுப்பினார். உண்மை! 88கவனியுங்கள், அவர் வார்த்தையாயிருந்தார். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது எபிரேயர் 4:12. “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று எபி. 4:12 உரைக்கிறது. அது சரியா? “வகையறுக்கிறவர்”. அவர் வார்த்தை என்பதை நிரூபிக்க என்ன செய்தார்? பேதுரு அவரிடத்தில் வந்தான், அவனுடைய பெயர் சீமோன். அவன் இயேசுவினிடத்தில் வந்தபோது, அவர் சொன்னார்... இயேசு அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். அவன் உள்ளே வந்தவுடன் அவர், “ உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன் என்றார். அவன் படிப்பறியாதவன், அவன் பெயருக்குப் பின்னால் பட்டம் எதுவுமில்லை. அவன் ஒரு சாதாரண மீன் பிடிப்பவன். படிப்பு கிடையாது. அவன் படிப்பறியாதவன், பேதமையுள்ளவன்” என்று வேதம் உரைக்கிறது. ஆனால் அவன் எருசலேமில் இருந்த சபைக்கு கண்காணிப்பாளனாக ஆனான். ஏன்? ஏன்? அவன் யாரென்றும், அவன் பெயர் என்னவென்றும், அவன் தகப்பன் பெயர் என்னவென்றும் இயேசு பகுத்தறிந்து கூறினார். அவர் வார்த்தை என்பதை பேதுரு அறிந்து கொண்டான். ஏனெனில் வேதாகமம். “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்” என்று உரைத்திருந்தது. அவர் தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும். மல்கியாவிலிருந்து மேசியா வரைக்கும் நானூறு ஆண்டுகளாக தீர்க்கதரிசிகள் வாக்குத்தத்தம் பண்ணப்படவில்லை. அவர்களுக்கு தீர்க்கதரிசி இருக்கவில்லை. இங்கு ஒரு மனிதன் நின்று கொண்டு, அவனுக்கு முன்குறிக்கப்பட்டிருந்த ஒரு மனிதனிடம் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தி அதை நிரூபித்து, “உன் பெயர் சீமோன். இப்பொழுது முதல்... நீ யோனாவின் குமாரன். இப்பொழுது முதல் நீ பேதுரு என்று அழைக்கப்படுவாய்” என்கிறார். அதை சிந்தித்துப் பாருங்கள்! அவர் யாருக்கு அதை நிரூபித்தார் அவர் ஏன் அந்த வார்த்தையை... அவர் ஏன் அந்த வார்த்தையை காய்பாவுக்கு நிரூபிக்கவில்லை? அவர் தேவன். காய்பா அதை விசுவாசிக்கமாட்டான் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் இந்த மனிதனோ ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்தான். அவன் அதை உடனே கண்டு கொண்டான். 89ஒரு சமயம் அவர்களுடைய மத்தியில், வேறொரு மனிதன் சில நாட்களுக்குப் பின்பு, அவர்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து பதினைந்து மைல்களுக்கு அப்பால் மலையின் அருகில் வாழும் தன் நண்பனிடம் சென்று அவனை அடுத்த நாள் அழைத்து வந்தான். அவன் அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருந்து, இயேசு இருந்த இடத்துக்கு வந்தான். இயேசு சுற்றிலும் பார்த்தார். அவர் தேவன் பாருங்கள். அவருக்கு பகுத்தறிதல் இருந்தது. பாருங்கள், அது வார்த்தை சரியென்பதை காண்பித்தது. அவர் வார்த்தையை நிரூபித்தார். அவர்களில் சிலர், “உனக்குத் தெரியுமா, அந்த மனிதன் தான் வார்த்தை” என்றனர். அந்த ஆசாரியர்கள், மூடத்தனம். அந்த ஆள் அல்ல, அல்ல, அவர் வார்த்தை அல்ல என்றனர். அவர்கள், “வேதம் என்ன கூறுகிறது தெரியுமா? உங்கள் தேவனாகிய கர்த்தர் மோசேயைப் போல் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார் என்று. அது தான் அவர். அவருக்குச் செவி கொடுங்கள்” என்றனர். அவர் நாத்தான்வேலைக் கண்டு, “இதோ, கபடற்ற உத்தம் இஸ்ரவேலன்” என்றார். அதற்கு இந்த ஆள், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்டான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே நீ அத்தி மரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன் என்றார். யார் அதை விசுவாசிப்பார்கள் என்று இயேசு அறிந்திருந்தார். அவன், “ரபி, நீர் தேவனுடைய குமாரன், நீரே வார்த்தை” என்றான் இயேசு வார்த்தையின் மூலம், தாம் வார்த்தை என்பதை நிரூபித்தார். 90கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீயைக் கவனியுங்கள். அவள் மேசியாவுக்காக காத்திருந்தாள். அந்த நாட்களில் இருந்த திரளான கூட்டங்களுடனும் ஸ்தாபனங்களுடனும் அவள் தொடர்பு கொண்டிருக்கவில்லை. அவள் வார்த்தைக்காக காத்திருந்தாள். ஒரு சமயம் ஒரு மனிதன் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு சாதாரண மனிதன் வழியில் உட்கார்ந்து கொண்டு அவளைப் பார்த்து, “தாகத்துக்குத் தா” என்றார். அவள், “ஒரு நிமிடம் பொறு. அவர் என்னிடம் நட்புக் கொள்ளப் பார்க்கிறார்” என்று மனதில் நினைத்திருப்பாள். ஏனெனில் அவள் பெயர் கெட்ட ஸ்திரீ என்று அறியப்பட்டிருந்தாள். அவள், “ஏன், ஆம், ஏன் அப்படிப்பட்ட கேள்வியை என்னிடம் கேட்டீர்? இங்கு இனவிலக்கு (segregation) உள்ளது. நீர், நீர், நீர்... நீர்,யூதன், நாங்கள் சமாரியர்... அது வழக்கமல்ல, என்னிடம் நீர் அப்படி கேட்டது சரியல்ல என்றாள். பாருங்கள்? அவர், “ஸ்திரீயே, உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதை அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய்” என்றார். அவள், “உம்மிடமா, தண்ணீரா? உம்மிடத்தில் வாளியோ கயிறோ இருப்பதை நான் காணவில்லையே. அப்படியிருக்க, இந்த கிணற்றிலிருந்து நீர் எவ்விதம் தண்ணீர் மொண்டு எனக்குக் கொடுப்பீர்” என்றாள். அவர், “நான் இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரைக் குறிப்பிடவில்லை என்றார்”. பாருங்கள்? அவள், “இவர் விசித்திரமான ஒரு ஆள்” என்று எண்ணிக் கொண்டு, தண்ணீர் குடத்தை கிணற்றில் இறக்கி, தண்ணீர் மொண்டு அதை மேலே இழுத்தாள். அவர், “நான் கொடுக்கும் தண்ணீ ர் நித்திய ஜீவ காலமாய் உன் ஆத்துமாவில் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்றார். 91அவள், “நல்லது. ஒரு நிமிடம் பொறுங்கள். நீர் யூதன் என்று எண்ணுகிறேன். யூதர்களாகிய நீங்கள் இந்த கிணற்றை எங்களுக்கு தோண்டித் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ” என்றாள். அவர் யாக்கோபின் தேவன். பாருங்கள்? அவள், “இந்த கிணற்றை எங்களுக்கு தோண்டித் தந்த யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ என்றாள். காண்பதற்கு பாருங்கள், ஒரு சாதாரண மனிதன். அவ்வளவு தான். நீங்கள் கண்டது. ஒரு சாதாரண மனிதன். அவள், ”இந்த கிணற்றை எங்களுக்குத் அவர் தோண்டித் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவர் என்று கூறிக் கொள்கிறீர். அவரும் அவருடைய மிருக ஜீவன்களும் இதில் குடித்ததுண்டே. அந்த தீர்க்கதரிசி தோண்டின கிணற்றின் தண்ணீரைக் குடிப்பதனால் நாங்கள் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறோம்“ என்றாள். அவர், “அப்படியா?” என்றார். “நாங்கள் இந்த மலையில் தொழுது கொள்ளுகிறோம், நீங்கள் எருசலேமில் தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே”. அவர், “ஸ்திரீயே, இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்” என்றார். ஒரு யூதன் வார்த்தையை அறிந்திருக்க வேண்டியவனாயிருக்கிறான் பாருங்கள். வார்த்தை எவ்விதம் இருக்க வேண்டுமென்று. ஆனால், பாருங்கள். அவர் கவனித்துக் கொண்டே வந்தார். ஏன்? அவர் இப்பொழுது... அவர் என்ன செய்யப் போகிறார்? தமது வார்த்தையை நிரூபிக்கப் போகிறார். பாருங்கள்? ஏன், அவள் சொன்னாள்... அவர், “சரி, நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அவள், “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள். அவர், “நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல” என்றார். பாருங்கள்? கவனியுங்கள்! ஏதோ ஒன்று சம்பவித்தது. பாருங்கள். ஏதோ ஒன்று ஜீவன் பெற்றது. அது தொடக்கத்திலேயே அங்கு இல்லாமல் போயிருந்தால், முன்குறித்தலில் அவள் இடம் பெறாமல் போயிருந்தால், அது ஒருபோதும் கிரியை செய்திருக்காது. 92ஆசாரியர்கள் அங்கு நின்று கொண்டு, “இந்த மனிதன் பெயல்செபூல்” என்றனர். நித்திய ஜீவன், “நீங்கள் என்றென்றைக்கும் இருக்கிறீர்கள் பாருங்கள், உங்களுக்கு நித்திய ஜீவன் உள்ளது. ஒன்றே ஒன்று மாத்திரமே நித்தியமாயுள்ளது. அது தேவன். நீங்கள் அவருடைய தன்மை (attribute). அவர் உங்களைக் குறித்து சிந்தித்து, உங்களை தமது சிந்தையில் உலகத் தோற்றத்துக்கு முன்பே அறிந்திருந்தார். பாருங்கள்? அவள் சுற்றிலும் பார்த்தாள். அவள் எத்தகைய பாவ நிலையில் இருந்தாள் என்பதைக் கவனியுங்கள். ஆனால், பாருங்கள், அவர் அந்த ஆசாரியனை அடைய முடியவில்லை. ஏனெனில் அவன் கல்வி கற்ற அறிவாளி, வார்த்தையில் பாண்டித்யம் பெற்ற வேத சாஸ்திரி. ஆனால் அவனுக்குப் பரலோகத்தில் இடமில்லை, பாருங்கள், அவன் தேவனுடைய சிந்தையில் ஒருபோதும் இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்திரீ இருந்தாள். அவள், “ஐயா, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். அதை மாத்திரமே அவள் காண வேண்டுமென்று அவர் விரும்பினார். பாருங்கள்? அவள், “நீர் தீர்க்கதரிசி என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் தீர்க்கதரிசி என்று நான் விசுவாசிக்கிறேன். அது எங்களுக்குத் தெரியும். எங்களால் தீர்க்கதரிசிகளைக் குறித்து விளங்கிக் கொள்ள முடியவில்லை, ஏனெனில் காலதாமதமாகிவிட்டது. மேசியா வருகிறார் என்று நாங்கள் அறிவோம். அவர் வரும்போது வார்த்தையாயிருப்பார். பாருங்கள், அவர் , இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வார். நீர் அப்பொழுது செய்த அதே காரியத்தை அவர் செய்வார். அவருக்கு முன்னோடியாக வந்த தீர்க்கதரிசியாக நீர் இருக்க வேண்டும்” என்றாள். அவர், “நானே அவர்” என்றார். 93அவர் என்ன செய்தார்? தமது வார்த்தையை நிரூபித்துக் கொண்டிருந்தார். தமது ஸ்தானத்தை நிரூபித்துக் கொண்டிருந்தார், அவர் யாரென்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்து, உலகத்தை தம்மோடே ஒப்புரவாக்கிக் கொண்டார். தேவன் வார்த்தையாயிருக்கிறார். சரி, “அவர் நாமம் வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்” என்னும் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிரூபிக்க அவர் காற்றையும் கடலையும் அமரிக்கையாயிருக்கப் பண்ணினார். பாருங்கள்? கன்னிகையின் மூலம் பிறந்த இந்த குமாரன் அப்பத்தையும் மீன்களையும் பெருகப் பண்ணினார். அது என்ன? அவருடைய வார்த்தையை நிரூபிக்க. எல்லா வேத வாக்கியங்களும் நிறைவேற வேண்டும். அவர் மாம்சத்தில் தோன்றின தேவன் என்னும் வார்த்தையை நிரூபித்தார். அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர். சிருஷ்டிப்பில் தேவன்; தேவன் தமது சிருஷ்டியின் ஒரு சிறு பகுதிக்குள் வாசம் செய்தார். அவர் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர். “அவரிலிருந்து அநேக குமாரர் பிறப்பதற்காக”. கவனியுங்கள், அவர் மீன்களையும் பெருகப் பண்ணினார். அவர் வார்த்தையாயும் வார்த்தையின் நிரூபணமாயும் இருக்கிறார். 94நாம் செய்தியின் முடிவுக்கு வரும் இந்நேரத்தில் கூர்ந்து கவனியுங்கள். அன்றொரு நாள், அந்த வரலாற்றை நான் சில நிமிடங்களுக்கு முன்பு படித்தேன். அவர் யவீருவின் வீட்டுக்கு வந்தார். அவர் அங்கு அடைந்த போது, உள்ளே நடந்து சென்றார். யாவீரு ஒரு ஆசாரியன், ஒரு எல்லைக் கோடு விசுவாசி, என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவன் இயேசுவை விசுவாசிக்க விரும்பினான், ஆனால் அவனுடைய சபையை இழந்து விட அவனுக்கு மனதில்லை. ஏனெனில் அவர்கள், “இயேசுவை விசுவாசிக்கிற எவனும் சபையிலிருந்து தள்ளப்படுவான்” என்று கூறியிருந்தனர். முடிக்கும் நேரத்தில் கூர்ந்து கவனியுங்கள். உங்கள் முழு கவனத்தையும் எனக்குக் கொடுங்கள். இதைக் கவனியுங்கள், இயேசு கடலைக் கடந்த போது அதை அறிந்திருந்தார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர் எல்லாம் அறிந்தவர். அவர் கடலைக் கடந்து நின்ற போது, இதோ இந்த ஆசாரியன் வருகிறான். அவனுடைய குமாரத்தி மிகவும் வியாதிப்பட்டு, மருத்துவர் அவளைக் கைவிட்டனர். அவன், “அவள் மரண அவஸ்தைப்படுகிறாள்” என்றான். இப்பொழுது செயல்பட வேண்டிய நேரம் வந்தது. 95ஒருவேளை இன்று காலையில் அது உங்களுக்கும் பொருந்தலாம். நீங்கள் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாருங்கள்? ஒருவேளை நீங்கள் மிகவும் வியாதிப்பட்டிருக்கலாம். ஒருவேளை நீங்கள் தவறாயிருக்கிறீர்கள் என்னும் உறுதியான உணர்வு உங்களுக்கு உண்டாயிருக்கலாம். அப்படி இருக்கலாம். தேவன் இந்த பிரச்சினையை சுமத்துகிறார், செயல்பட நேரம் வருகிறது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவன் வருகிறான், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று அவன் கவலைப்படாமல், இயேசுவின் பாதத்தில் பகிரங்கமாக விழுந்தான். கல்வி கற்ற அறிவாளி, பள்ளிக்கூடத்துக்கு சென்றதாக எவ்வித அத்தாட்சியும் இல்லாத ஒருவரிடம் வருவதற்கு கடைபிடித்த முறை எப்படிப்பட்டது! வேதசாஸ்திரத்தை நன்கு அறிந்த ஒரு மனிதன், “துஷ்டன், காட்டு மனிதன், பைத்தியக்காரன், மனநிலை சரியில்லாதவன், புத்தி சுவாதீனம் இல்லாதவன்” என்று கருதப்பட்ட மனிதனை அணுகும் முறையைப் பாருங்கள். இவ்விதம் நான் கூறுவதை மன்னிக்கவும். அவர் அந்நாளின் எல்லோருக்கும் தெரிந்த சஞ்சல புத்தியுடையவர் (crank) என்று எல்லோரும் அவரைக் கருதினர். இன்று நாம் தெருவில் கூறுவதைக் கேட்பது போல் அவர் ஒரு 'நட்டாக' இருந்தார். அன்றொரு நாள் 'நட்'டையும் போல்ட்டையும் குறித்து பேசினேன் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள், பொது மக்களுக்கு அவர் அவ்விதமாக காணப்பட்டார். பொதுவான அன்றாடக... அவர்கள், “உனக்கு மனநிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. நீ பைத்தியக்காரன் என்றனர். மனநிலை சரியில்லாதவர் என்று கருதப்பட்ட அத்தகைய ஒருவரிடம் கல்வியறிவு அதிகம் பெற்ற ஒரு மனிதன் வருகிறான். அவனுடைய சூழ்நிலை அவ்விதம் செய்ய அவனைக் கட்டாயப்படுத்தினது. 96அவளை இப்பொழுது கவனியுங்கள். உங்களுக்கு இது சிறிது வேதனை உண்டாக்கும், ஆனால் அது உங்களுக்கு நல்லது. பாருங்கள், சில சமயங்களில் ஒரு அதிர்ச்சி உங்களுக்கு விழிப்பு உண்டாக்குகிறது. கவனியுங்கள், அவர் வீட்டுக்குள் சென்று, மரித்துப் போன இந்த சிறுமியின் பக்கத்தில் சென்றாள். அவள் ஒருவேளை சில மணி நேரங்களுக்கு முன்பு மரித்திருப்பாள். அவர்கள் அவளைக் கிடத்தி; சவத் தைலத்தை அவள் மேல் ஊற்றி, அவளை மஞ்சத்தில் கிடத்தினர். அந்நாட்களில் அவர்கள் அவ்விதம் தான் செய்தனர். அவள் அங்கு மஞ்சத்தில் கிடத்தப்பட்டாள், அவளைச் சுற்றிலும் மலர்கள் இருந்தன. ஓ, அந்த அருமையான போதகன் யவீரு. அவன் ஒரு நல்ல போதகனாயிருந்திருப்பான் என்று எண்ணுகிறேன். எல்லோரும் அவனை நேசித்தனர். பாருங்கள், அவன் நல்ல போதகன் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். ஏனெனில் அவன் தன் இருதயத்தில் இயேசுவை விசுவாசித்தான். ஆனால் அவனால் சபையை விட்டு வெளியேறும் தீர்மானத்தை செய்ய முடியவில்லை. அவன் அவ்விதம் செய்தால், ஒவ்வொரு சனி அல்லது திங்கள் காலையில் அவனுக்கு காசோலை கிடைத்திருக்காது. பாருங்கள் அவனால் அந்த தீர்மானம் செய்ய முடியவில்லை. வேறொரு காரியம், ஜனங்களின் மத்தியில்அவன் பிரபலமானவனாயிருந்தான். அவன் விட்டு சென்றிருந்தால், அவர்கள், “உனக்குத் தெரியுமா , யவீரு மூட மதாபிமானம் கொண்டு அந்த கள்ளத் தீர்க்கதரிசியின் பின்னால் சென்றுவிட்டான். அதை தான் அவன் செய்தான். அந்த நசரேயனாகிய இயேசு, கலிலேயாவின் தீர்க்கதரிசி, அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வதாக சொல்லிக் கொள்கிறார்கள் என்று கூறியிருப்பார்கள். அதை நாம் இப்பொழுது விசுவாசிப்பதில்லை, அது நமக்கு தேவ தூஷணமாய் ஒலிக்கிறது. ஆனால் அப்பொழுது அவ்விதமாகவே இருந்தது. பாருங்கள்? “என்றாகிலும் ஒரு நாள், இப்பொழுது உள்ளது போல், அப்பொழுதும் இருக்கும்” பாருங்கள், அதே காரியம். 97இப்பொழுது கவனியுங்கள், யவீரு அங்கு சென்றான். அவனால் அவ்விதம் செய்ய முடியவில்லை. ஆனால் அவன் அதைக் கட்டாயமாக செய்ய வேண்டிய நேரம் வந்தது. அவன் அதை செய்ய வேண்டியதாயிருந்தது. அவன் இயேசுவிடம் சென்று எல்லோருக்கும் முன்னால் அவருடைய பாதத்திலே விழுந்து, “ஆண்டவரே! ஆண்டவரே” என்றான். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ஆளுகை, உரிமை. அது உண்மை. பாருங்கள், ஜனங்களில் பலர் இயேசு தங்கள் இரட்சகராயிருக்க விரும்புகின்றனர். ஆனால் தங்கள் ஆண்டவராயிருக்க விரும்புவதில்லை. பாருங்கள். ஆண்டவர் என்றால் ஆளுகை செய்பவர். ஆம், நீங்கள், “இயேசுவே, என்னை இரட்சியும். இங்கு நான் நின்றுகொண்டு என் சொந்த வேலையைச் செய்வேன். என் வேலையில் தலையிடாதிரும். நீர் என் இரட்சகராக இருக்கலாம், ஆனால் என் ஆண்டவராக இருக்க வேண்டாம்” என்கின்றனர். அவர் உங்கள் ஆண்டவராயிருக்க விரும்புகிறார். பாருங்கள், அப்பொழுது அவர் உங்கள் இரட்சகராயிருக்கிறார். 98இப்பொழுது, யவீரு, “ஆண்டவரே, இரட்சகரே, பாருங்கள், நான்... என் குமாரத்தி, என் ஒரே பிள்ளை, அவளுக்கு பன்னிரண்டு வயது, மருத்துவர் அவளைக் கைவிட்டனர் என்றான். அந்த ஆசாரியன் இவ்வாறு கூறியிருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ”உமக்குத் தெரியுமா, அவர்கள் எல்லாரும் உம்மை மூட மதாபிமானி என்றழைக்கின்றனர். ஆனால் ஆண்டவரே, நான் உம்மை விசுவாசிக்கிறேன், அது உமக்குத் தெரியும். உமக்கு பகுத்தறிதல் உண்டு என்று அறிந்திருக்கிறேன். நீர் செய்ய வேண்டிய ஒரே காரியம், நீர் வந்து உமது கைகளை அவள் மேல் வையும். அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறும், அதை நான் செய்வேன்“ என்றான். ஓ, இப்பொழுது நீ சரியான இடத்துக்கு வருகிறாய். அவன், “நான் புறப்பட்டுச் செல்கிறேன், நான் புறப்பட்டுச் செல்கிறேன்” என்று சொல்லி இயேசுவிடம் புறப்பட்டு வந்தான். அவன் புறப்பட்டுச் சென்று சில மணிநேரம் கழித்து, ஒருவன் அக்கால வழக்கப்படி தலையின் மேல் சாம்பலைப் போட்டுக் கொண்டு அவனிடம் ஓடி வந்து, “அந்த மனிதனை தொந்தரவு செய்ய வேண்டாம், உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள். அவளைத் தைலமிட்டு கிடத்தியிருக்கிறார்கள்” என்றான். ஓ, அவன் இருதயம் இயேசு திரும்பி அவனைப் பார்த்தார். அவன், “ஓ! ஓ! ஓ!” என்று அழுதான். அவர், “நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றார். அவர் அங்கு என்ன செய்தார்? அவர் யவீருக்கு வாக்களித்திருந்தார். அவர் அதை நிரூபித்தாக வேண்டும். ஆமென். “நான் உனக்குச் சொன்னேன். நீ விசுவாசிக்க மாத்திரம் செய். அப்பொழுது நீ தேவனுடைய மகிமையைக் காண்பாய். அவர் செய்வது இன்னதென்று அவர் அறிந்திருந்தார். பிதாவானவர் முதலில் அவருக்கு காண்பிக்காமல் அவர் ஒன்றையும் செய்யமாட்டார்” என்று அவர் கூறியுள்ளார். பரி. யோவான் 5:19, “பிதாவானவர் காண்பிக்கிறதெதுவோ அதை மாத்திரமே செய்கிறேன்”. எனவே என்ன நடக்கப் போகிறதென்பதை பிதாவானவர் அவருக்குக் காண்பித்தார். 99எனவே அவர் வீட்டுக்குள் சென்ற போது, அநேக வாரங்கள் வியாதியாய் கிடந்த அந்த சவம் விரைத்துப் போய் அங்கிருந்தது. அவளுடைய சிறு உடல் வெளுத்துப் போயிருந்தது. வியாதியின் காரணமாக ஆகாரம் எதுவும் அவள் உடலில் செல்லாமல், அவள் இறந்து போனாள். அவளுடைய உடல் முழுவதும் அவர்கள் சவ வாசனை திரவியத்தை தெளித்திருந்தனர். அவள் அங்கு மஞ்சத்தில் கிடத்தப்பட்டிருந்தாள். அவளைத் துணியில் சுற்றி கல்லறையில் வைக்க அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். அதற்கு முன்பு அவர்கள் அவளைச் சுற்றிலும் மலர்களைத் தூவி, தங்கள் சிறு சடங்கை நடத்திக் கொண்டிருந்தனர். இயேசு அங்கு வந்தார். எல்லோருமே “ஓ, யவீருவே, உன் குமாரத்தி மரித்துப் போனாள் ஓ, தகப்பன் யவீருவே, ஓ! நாங்கள் உம்முடைய நிலைக்கு வருந்துகிறோம்” என்று சொல்லி அனுதாபம் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இயேசு , “ஓ, அமரிக்கையாயிருங்கள். நீங்கள் அதிக சத்தம் போடுகிறீர்கள். இந்த சந்தடி எல்லாம் எதற்கு பாருங்கள். இந்த சந்தடி. நீங்கள்... நீங்கள் அதிக கூச்சலிட்டு அலறுகிறீர்கள். இந்தப் பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள். உஷ்” என்றார். 100அவர்கள் என்ன செய்தனர்? அவள் மரிக்கவில்லை என்று அவர் கூறினதை அவர்கள் கேட்டபோது, அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். வேறு விதமாகக் கூறினால் அவர்கள் அவரைப் பார்த்து கேலிக் குரல் எழுப்பினார்கள். “பூ, கள்ளத் தீர்கதரிசியே! மனிதரை வஞ்சிக்கிறவனே, இந்த பெண் மரித்துவிட்டாள் என்று மருத்துவர் கூறிவிட்டார். நாங்கள் தைலமிட்டு அவளைக் கிடத்தியிருக்கிறோம். அவள் அங்கு கிடக்கிறாள். அவள் மரித்துவிட்டாள். ”ஹா, ஹா, ஹா! யவீருவே, இவனைக் குறித்து பெருமையாய் பேசினாயே, இப்பொழுது என்ன சொல்லுகிறாய்? என்றனர். அவர் என்ன செய்தார் தெரியுமா? “நீங்கள் எல்லோரும் வெளியே போங்கள்” என்று சொல்லி விரட்டிவிட்டார். அப்படிப்பட்ட அவிசுவாசம் சூழ்ந்திருக்கும் போது, அது கிரியை செய்யாது. அவர் ஏன் அப்படி சொன்னார்? அவர், “யவீருவே, நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்று அவர் கூறியிருந்தார். அது அவருடைய வார்த்தை. அவர் அதை நிரூபித்தாக வேண்டும். சரி. 101அவர் வீட்டுக்குள் நுழைந்தபோது அவர்கள் எல்லோரும் அழுது புலம்பிக் கொண்டிருந்தனர். அவர், “அவள் நித்திரையாயிருக்கிறாள்” , என்றார். அது விஞ்ஞானத்துக்கு முரணானது. அது சாதாரண அறிவுக்கு முரணானது. அவள் மரித்து, தைலமிடப்பட்டிருந்தாள். அவர்கள் மரித்தவுடனே, உயிர் உடலை விட்டுப் பிரிந்தவுடனே, அவர்கள் தைலமிடுவார்கள். அவர்கள் வாசனை திரவியத்தை உடலின் மேல் ஊற்றி அதை துணியில் சுற்றி, கல்லறைக்கு கொண்டு செல்ல ஆயத்தம் செய்வார்கள். பாருங்கள், அடக்கம் செய்வார்கள், அந்த உடலை அடக்கம் செய்வார்கள். சில நேரங்களில் அவர்கள் ஜனங்களுக்கு அறிவிப்பதுமில்லை. அனனியா, சப்பிராள் வரலாறு உங்களுக்குத் தெரியும். அவர்கள் அன்னியாவை அடக்கம் செய்தனர்... சப்பிராள் உள்ளே நுழைந்த போது, பாருங்கள், அவர்கள் ஏற்கனவே அனனியாவின் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்திருந்தனர். பாருங்கள். அவர்கள் மரித்தவுடனே, அந்த வாசனைத் திரவியத்தை அதன் மேல் ஊற்றி, அதைக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். பாருங்கள்? 102அவளுடைய உடலை கல்லறையில் அடக்கம் செய்ய எல்லாம் ஆயத்தமாயிருந்தது. ஆனால் அவளை அடக்கம் செய்வதற்கு முன்பு அப்பா அவள் உடலைக் காண வேண்டுமென்று எண்ணினர். இயேசு உள்ளே வந்து அவளை அந்நிலையில் கண்டு, அவள் சிறு தூக்கத்தில் இருக்கிறாள் என்றார். அவர்கள், “இந்த ஆள் உண்மையில் பைத்தியக்காரன் அல்லவா?” என்றனர். எனவே அவர் என்ன செய்தார்? அவள் நித்திரையாயிருக்கிறாள் என்று அவர் ஏற்கனவே கூறிவிட்டார். அவருடைய வார்த்தையை அவர் நிரூபித்தாக வேண்டும். ஆனால் அந்த கூட்டத்தின் முன்னால் அவரால் அதை செய்ய முடியவில்லை. எனவே, “அவர் இவர்கள் எல்லோரையும் வெளியே போகப் பண்ணுங்கள்” என்றார். அவர் யவீருவை நோக்கி, “நீ இன்னமும் விசுவாசிக்கிறாயா”? என்று கேட்பதை என்னால் காண முடிகிறது. “ஆம், ஆண்டவரே”. “நீயும் உன் மனைவியும் இங்கே வாருங்கள். பேதுரு, யாக்கோபு, யோவானே என்னுடன் வாருங்கள். அவர்கள் அங்கு நடந்து சென்று, அவர், ”தலீத்தா கூமி“ என்னும் சொற்களை உபயோகித்து கூப்பிட்டார். அதற்கு, ”சிறு பெண்ணே, எழுந்திரு என்று அர்த்தம். அவள் நித்திரையாயிருக்கிறாள் என்னும் அவருடைய வார்த்தையை அவர் நிரூபித்தார். அது சரியா? அவருடைய வார்த்தை உண்மை என்பதை அவர் இங்கு நிரூபித்தார். அவர்களுடைய அவிசுவாசத்தை பொருட்படுத்தாமல், அவளை நித்திரையினின்று எழுப்பி, அவருடைய வார்த்தை உண்மையென்பதை நிரூபித்தார். ஏனெனில், அவள் நித்திரையாயிருந்ததாக அவர் கூறினார். அவள் நித்திரையாயிருந்தாள். 103அவர் என்றாகிலும் ஒரு நாள் ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் அதையே செய்வார். ஏனெனில், “கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களை தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார்” என்று அவருடைய வார்த்தை வாக்களித்துள்ளது (1தெச. 4:14). பாருங்கள். “கிறிஸ்துவுக்குள் நித்தியைடைந்தவர்களை”. அந்த சிறு யூதப் பெண் என்ன செய்தாள்? இந்த வேத வசனத்தை நான் விட்டு கடந்து செல்லலாம் என்று எண்ணினேன். ஆனால் அதை நான் கூறப் போகிறேன். சிறிது தாமதமாகும் என்று அறிவேன். சில நிமிடங்களில் நாம் ஜெப வரிசையை அமைப்போம். ஒரு வேளை இன்னும் ஒரு வாரத்துக்கு உங்களை நான் காணமாட்டேன். இதை ஒரு நிமிடம் பார்ப்போம். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல” பாருங்கள்? கவனியுங்கள், உங்களுக்கு காண்பிக்க இதை நான் இப்பொழுது வலியுறுத்த விரும்புகிறேன். இயேசு ஏன் இந்த சிறு எபிரேயப் பெண்ணை எழுப்பினார். ஏனெனில் அவள் மரிக்கவில்லை என்பதை அவள் அறிந்திருந்தாள். முன்குறித்தல், அவர் லாசருவுக்கு செய்த அதே விதமாக. பாருங்கள்?, அதே நாளில் அநேக சிறு பெண்கள் மரித்திருக்க வகையுண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் அவர் ஒரு வார்த்தை கூறவில்லை. இந்த பெண்ணுக்கு நித்திய ஜீவன் இருந்ததென்று அவர் அறிந்திருந்தார். பாருங்கள், அவர் மற்ற பெண்களை உயிரோடெழுப்பவில்லை. பாருங்கள், அவர் எரிகோவை விட்டு வெளியே வந்தபோது அவர்கள், “இதோ, அந்த ஆசாமி” என்றனர். அவர்கள், “நீயா மரித்தோரை எழுப்புகிறவன்? மரித்தோரை எழுப்ப உன்னால் முடியும் என்றா கூறுகிறாய்? எங்களுக்கு கல்லறைத் தோட்டம் நிறைய சவங்கள் உள்ளன; வந்து அவர்களை எழுப்பு” என்று சொல்லியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பாருங்கள், அவர் சிறிதேனும் அதற்கு கவனம் செலுத்தவில்லை. பாருங்கள், அவ்விதம் செய்யவேயில்லை. ஏனெனில் அவர் வார்த்தை என்பதை அறிந்திருந்தார். 104கவனியுங்கள், அவள் நித்திரை மாத்திரம் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய தகப்பன் வருவான் என்று அவர் அறிந்திருந்தார். இந்த சிறு பெண், பாருங்கள், இந்த சிறு பெண், நித்திரை மாத்திரம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை அவர் அறிந்திருந்தார். பாருங்கள், நீதிமான்கள் மரிப்பதில்லை. நீதிமான்களை மீட்கவே இயேசு வந்தார். மீட்பு என்னும் சொல்லுக்கு “நீங்கள் முன்பிருந்த இடத்துக்கு உங்களை மீண்டும் கொண்டு வருதல்” என்று பொருள். பாருங்கள்? அவிசுவாசிகள் எவ்வளவு படித்தவர்களாயிருந்த போதிலும், அவரால் அவர்களை மீட்க இயலவில்லை. ஏனெனில் அவர்கள் மீட்கப்பட முடியாதவர்கள். அவர்கள் தாங்கள் சேர வேண்டிய இடத்துக்கு செல்ல வேண்டும். ஆனால், அவர், தம்முடைய முன்னறிவினால், லாசரு கல்லறையை விட்டு வெளி வருவான் என்பதை அறிந்திருந்தார். இந்த சிறு பெண் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தாள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே அவள் மரிக்கவில்லை, அவள் நித்திரையாயிருந்தாள். இவ்வுலகில் நமது வேலை முடிவு பெற்று, அவர் வருகை மட்டும் நாம் உயிரோடிருக்கவில்லை என்றால், நாம் மரிக்கவில்லை. நாம் நித்திரையாயிருக்கிறோம். அவர் அதை இங்கு நிரூபித்தார். அவர் மறுபடியும் நிரூபிப்பார். இந்த என் தோல் முதலானவை அழுகிப் போன பின்பு, உம்முடைய சாயலில் நான் விழிப்பேன்“ 105அவருடைய வார்த்தை அனைத்தையும் அவர் நிரூபிக்கிறார் அவருடைய வார்த்தை அனைத்தையும். அதை சற்று சிந்தித்துப் பாருங்கள், அவருடைய வார்த்தை அனைத்தையும் நீங்கள் அவருடைய வார்த்தையாயிருந்தீர்கள். அவர் வார்த்தையாயிருந்தார். நீங்கள் அந்த வார்த்தையின் பாகமாயிருந்தீர்கள். அதன் காரணமாகத் தான், வாழ்க்கையில் உங்கள் இடத்தை உறுதிப்படுத்த நீங்கள் இங்கு அனுப்பப்பட்டீர்கள். உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். பாருங்கள், அவர் வார்த்தையாயிருக்கிறார். உங்களுக்கு விளங்குகிறதா? லூத்தரில் அவர் பாதங்களிலும், வெஸ்லியில் அவர் தொடைகளிலும், பெந்தெகொஸ்தேயில் அவர் தோள்களிலும் இருந்தார். நான் கூறுவது அர்த்தமாகிறதா? அவர் தலை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் அதை ஒன்றாக இணைக்கும் ஒரு பாகம் உள்ளது; அது பாதங்கள் பாகமல்ல, தொடைகள் பாகமல்ல, தோள்கள் பாகமல்ல, ஆனால் கழுத்து பாகம். அது சரியா? அது தலையுடன் இணைகிறது. அது தான் சரீரத்தின் அந்த பாகம். இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களை தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார். தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். அது சரியா? பாருங்கள், நீங்கள் அந்த வார்த்தையின் ஒரு பாகமாக இருந்தால், நீங்கள் அவரில் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அதை அடையாளம் காண்பிக்க, பாருங்கள், நீங்கள் அவருடைய நாமத்தை தரித்துக் கொண்டு, அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, அவருடைய சரீரத்தில் பொருத்தப்படுகிறீர்கள். நாம் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்“ இங்கே, சரியாக அதே ஸ்தானத்தில் அவர் தமது வழியை மாற்றிக் கொள்வதில்லை... ஆதி சபை அவருக்குள் இருக்கிறதென்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? பார்க்கட்டும், எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அவர்கள் எவ்வகையில் ஞானஸ்நானம் பெற்றனா? சரி. பாருங்கள், அவர் மாறாத தேவன். அதை நாம் நிரூபித்தோம். அதில் நள்ளிரவு வரை நாம் நிலைத்திருந்து, அதை நிரூபித்து, மேலும் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்க முடியும். பாருங்கள், மாறாதவர்! பாருங்கள்? நீங்கள் அவருக்குள்ளும் அவருடைய ஒரு பாகமாகவும் இருக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் அவருடைய சிந்தனையில் ஒரு பாகமாக இருந்தீர்கள். உலகத்தோற்றத்துக்கு முன்பே அவர் உங்களை அழைத்தார்! 106வேதம் கூறுகிறது. பூமியின் மேலிருந்த மிருகம்... அது பூமியின் மேல் வந்த ஸ்தாபன அந்திக்கிறிஸ்து; அது ரோமாபுரியில் மிருகமானது. அதுவே முதலாம் ஸ்தாபனம். இந்த உலக சபைகளின் ஆலோசனை சங்கம் அந்த மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குகிறது. அதைதான் அன்று நாங்கள் புத்தகத்தில் எழுதினோம். கவனியுங்கள், அது அந்திக் கிறிஸ்துவாகின்றது. வேதம், “உலகத்தோற்ற முதல் ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராத (எப்பொழுது? எழுப்புதல் கூட்டத்தின் போதா? உலகத் தோற்றத்துக்கு முன்பே உங்கள் பெயர் எழுதப்பட்டுவிட்டது) எவனையும் இந்த அந்திக்கிறிஸ்து மோசம் போக்குவான்” என்றுரைக்கிறது. “கடைசி நாட்களில் அந்திக்கிறிஸ்து உண்மையானதைப் போல் அவ்வளவு நெருங்கியிருந்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அல்லது முன்குறிக்கப்பட்டவர்களை வஞ்சிப்பான்” என்று மத்: 24:24 உரைக்கிறது. தெரிந்து கொள்ளப்படுதல், முன்குறிக்கப்படுதல் இரண்டும் ஒன்றே. தேவன் உங்களை உலகத்தோற்றத்துக்கு முன்பே தெரிந்து கொண்டார் அல்லது முன்குறித்தார். “ஜீவ புஸ்தகத்தில் முன் குறிக்கப்படாத அனைவரையும் அந்திக்கிறிஸ்து தன் பக்கம் இழுத்துக் கொள்வான்”. 107தானியேல் அதைக் குறித்து பேசினான், ஞானவான்கள் எப்படியிருப்பார்கள் என்றும், ஞானமில்லாதவர்கள் எப்படியிருப்பார்கள் என்றும். சரி, அவ்வளவு போதும், நான் பொருளை விட்டு விலகி அதிக தூரம் சென்றுவிடுகிறேன், கடிகாரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள்... என்ன நடக்கிறதென்று இங்கு கவனியுங்கள். எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். உங்கள் பயணம் முடிந்துவிட்டது, உங்கள் பங்கை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கிருபை என்பது தேவன் உங்களுக்குச் செய்தது, கிரியைகள் என்பது அதை பாராட்டும் வகையில் நீங்கள் செய்வது. கன்னிகையின் மூலம் பிறந்த இந்த குமாரன், அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார் என்பதை இந்த காரியங்களின் மூலம் நிரூபித்தார். தண்ணீரில் மீன்கள் எங்கேயிருந்தன என்பதை அவர் அறிந்திருந்தார். பேதுருவும் மற்றவர்களும் மீன்பிடிக்க வலையைப் போட்டு, அவை அகப்படவில்லை. அது அவருடைய வார்த்தையை நிரூபித்தது. அது சரியா? அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவருக்கு வரி செலுத்த நேரம் வந்தபோது, எல்லாம் அவருக்கு சொந்தம் என்பதை அது காண்பித்தது. வரிக்குத் தேவையான பணத்தை தன் வாயில் கொண்டிருந்த மீன் இருந்த இடத்தை அவர் அறிந்திருந்தார்... யாரோ ஒருவர் நாணயத்தை அங்கு போட்டுவிட்டார். அந்த மீன் அதை வாயில் கவ்விக் கொண்டது. அவர், “பேதுருவே, சென்று தூண்டிலைப் போட்டு அந்த மீனைப் பிடித்து, அதன் வாயிலிருந்து அந்த பணத்தை எடுத்து, வரி செலுத்தி அவர்களைத் திருப்திபடுத்து என்றார். ஓ, ஆமாம்! 108நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு, ஆனால் அவரிடமோ வார்த்தை இருந்தது. அவர் வார்த்தையாயிருந்தார், அவர் அதை நிரூபித்தார். அவர் எப்பொழுதும் தமது வார்த்தையை நிரூபிக்கிறார். இன்றும் அவர் அதையே செய்வார். ஒவ்வொரு சந்ததியிலும் அவர் அதை நிரூபித்து வருகிறார். அவருடைய மரணம், அடக்கத்துக்குப் பிறகு, தமது வார்த்தையை நிரூபிக்க அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார். ஏனெனில் தீர்க்கதரிசி, “என் பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன், அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன்” என்று கூறியுள்ளான் மூன்றாம் நாள், எழுபத்திரண்டு மணி நேரத்துக்குள், அழிவு தொடங்குவதற்கு முன்பாக, பாருங்கள், அது மூன்று நாட்கள் முழுவதுமாக இருக்கவில்லை. ஏனெனில் எழுபத்திரண்டு மணி நேரத்தில் உடல் அழுகத் தொடங்கிவிடும். பாருங்கள், அவர் அதுவரைக்கும் முழுவதுமாக இருக்கவில்லை. ஏனெனில் தீர்க்கதரிசி உரைத்தான், பாருங்கள், தீர்க்கதரிசி, “என் பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன் என்றான். அவர் தமது வார்த்தையை நிரூபித்தார். 109ஏசாயாவும் மற்ற தீர்க்கதரிசிகளும் உரைத்த தமது வார்த்தையை நிரூபிக்க அவர் பிணியாளிகளை சுகப்படுத்தினார், முடவர்களை நடக்கச் செய்தார். அவர் தமது வார்த்தையை நிரூபிக்க பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியை அனுப்பினார். அதற்கு ஆதாரமாக சில வேத வசனங்களை இப்பொழுது பெற விரும்பினால், யோவேல் 2:28, “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். ஊழியக்காரர் மேலும் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் வாலிபர் தரிசனங்களையும் உங்கள் மூப்பர் சொப்பனங்களையும் காண்பார்கள். அவர் பரிசுத்த ஆவியை ஊற்றி அதை நிரூபித்தார். மேலும் இதற்கு முன்பாக அவர் நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், லூக்கா 24:49-ல், ”என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்“ என்றார். அதோ அவர் அதை செய்தார். அவர் ஆவியை அனுப்பி தொடர்ந்து தமது வார்த்தையை நிரூபித்தார். அவர் என்ன சொன்னார் என்று கவனியுங்கள். அவர் அதை செய்தாரா? சரி. 110மாற்கு: 16-ல் அவர், “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” என்றார். எவ்வளவு தூரத்துக்கு? உலகமெங்கும். யாருக்கு? சர்வ சிருஷ்டிக்கும். “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். ”விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன“. அவர் மாற்கு-ல் கூறினார், அவர் யோவான் 14:12-ல், ”என்னை விசுவாசிக்கிறவன் பாவனையாக விசுவாசிக்கிறவன் அல்ல, ஆனால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்“ என்றார். அதே கிரியைகளைச் செய்வதற்கு அவருக்குள் இருந்த அதே ஆவி அவசியம். எதற்காக? வருங்காலத்தில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை வெளிப்படுத்துவதற்காக ஆவி வருகிறது. பாருங்கள், அதற்கென்று ஒரு வழியை அவர் வகுத்து கொடுத்திருக்கிறார். இவை நடக்கும் என்று அவர் அறிந்திருந்தார். 111இப்பொழுது, ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகள் கழித்து சபை காலங்கள் கடந்து அவர் லூத்தர், வெஸ்லி ஆகியோரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த அனைத்தும் நிறைவேறி அதைக் குறித்து நாம் பார்த்தோம், அது வரைந்து காண்பிக்கப்பட்டது. சந்திரனும் அதை வரைந்து காண்பித்தது. கர்த்தர் இதை நமக்காக கரும்பலகையில் வரைந்து. அவரே இறங்கி வந்து அது சரியென்று உறுதிப்படுத்தினார். ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகள் கழித்து, நாம் லவோதிக்கேயா சபை காலத்தின் முடிவில் இருக்கையில், இதே மனுஷகுமாரன், “சோதோமின் நாட்களில் செய்தது போல, பூமியின் மேல் வெளிப்படுவார் என்று லூக்கா 17:30ல் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் அப்படி செய்தாரா அது நிறைவேறினதா? அது நிறைவேறாமலிருப்பது கூடாத காரியம்... இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அவர் மூன்று நாமங்களில் வருகிறார்: மனுஷகுமாரன், தீர்க்கதரிசி; தேவ குமாரன், ஆவி, தாவீதின் குமாரன், ஆயிர வருட அரசாட்சி. ஆனால் இதற்கிடையில், அவருடைய சொந்த வார்த்தையின்படி, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில் (எவ்விதம் தம்மை வெளிப்படுத்துவார்? தேவகுமாரனாக அல்ல), மனுஷகுமாரனாக. வேறு வகையில் தம்மை வெளிப்படுத்துவார். அது என்ன செய்கிறது? மல்கியா 4-ஐ உண்மையாக்குகிறது. பாருங்கள், மனுஷகுமாரன் தம்மை பெரிய ஸ்தாபனங்களில் வெளிப்படுத்துவதில்லை. அதை நாம் சபை காலங்களைக் குறித்து சிந்தித்த போது பார்த்தோம். அவர், ”அந்நாளில் நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன். அவன் பிள்ளைகளுடைய இருதயங்களை இந்த ஸ்தாபனக் கொள்கைகளிலிருந்து அப்போஸ்தல பிதாக்களிடத்திற்கு திருப்பி மறுபடியும் மூல வார்த்தைக்கு வரும்படி செய்வான் என்று மல்கியா 4-ல் கூறியுள்ளதை நிறைவேற்ற மறுபடியும் மனுஷகுமாரனாக வெளிப்படுவார். அவர் வாக்களித்துள்ள கடைசி கால் மணவாட்டி மரத்தை வெளியே இழுத்துக்கொள்ள இவ்விதம் செய்வார். “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். அது மப்பும் மந்தாரமான நாள் அல்ல, அப்பொழுது வெளிச்சம் இருக்கும். அந்த நாள் பகலுமல்ல, இரவுமல்ல”, பாருங்கள், அது சாரத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. கிழக்கில் இருந்த அதே தலை மறுபடியும் மேற்கில் உள்ளது. “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும். ஓ, என்னே, ஒரு பாடலைப் பாட வேண்டுமெனும் உணர்வு எனக்கு உண்டாகிறது. சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும் மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டு கொள்வாய் தண்ணீரின் வழியில் இன்றைய வெளிச்சம் உள்ளது அவருடைய விலையுயர்ந்த நாமத்தில் அடக்கம் செய்யப்படுவதனால் வாலிபரே வயோதிபரே, உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவி நிச்சயம் உட்பிரவேசிப்பார் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது. தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே என்பது அறியப்பட்டு நிச்சயமாகிவிட்டது. 112மனுஷகுமாரன் தம்மை, தமக்கு முன்பிருந்த அதே வல்லமையில் வெளிப்படுத்துகிறார். (சபை காலங்களில் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், இன்னும் மற்றவைகளின் மூலம் அல்ல), ஆனால் மனுஷகுமாரன், மனுஷகுமாரன் யார் வார்த்தை. வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவர் என்ன செய்ய வேண்டியவராயிருந்தார்? அந்த வார்த்தையை நிரூபிக்க வேண்டியவராயிருந்தார். அவர் இப்பொழுது என்ன செய்வார்? அது நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் காணும்போது. அதை கவனியுங்கள். அவர் தொடக்கத்தில் இருந்த அதே உருவில், அக்கினி ஸ்தம்ப உருவில், அவரை நாம் காண்கிறோம். என்னே! அவர் எபிரேயர் 13 : 8, அதாவது “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்பதை நிரூபிக்கிறார். அது என்ன? இயேசு கிறிஸ்து நேற்று மாறாதவர். அவர் மோசேயுடன் வனாந்தரத்தில் இருந்த கிறிஸ்து. வேதம் அவ்விதம் உரைக்கிறதென்று எத்தனை பேருக்குத் தெரியும்? நேற்று! புதிய ஏற்பாட்டில் பவுல் பேசிக் கொண்டிருந்த போது அவர் இன்று கிறிஸ்துவாயிருந்தார் (அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?). அதன் பிறகு மனுஷ குமாரன், அதே கிறிஸ்து, கடைசி நாளில். பாருங்கள்? சரி. கவனியுங்கள், யோவான் 14 :12-ல் அவர், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று கூறியுள்ளார் இந்த வேத வசனங்கள் அனைத்தும், அவர் என்ன செய்கிறார்? அவர் இங்கு இப்பொழுது நிரூபித்துக் கொண்டிருக்கிறார் (லூத்தரின் காலத்தில் அல்ல, வெஸ்லியின் காலத்தில் அல்ல, பெந்தெகொஸ்தேயினரின் காலத்தில் அல்ல, பாப்டிஸ்டு காலத்தில் அல்ல, பிரஸ்பிடேரியன் காலத்தில் அல்ல. இவையனைத்தையும் நாம் சிந்தித்து, வேத வரலாற்றின் மூலம் நிரூபித்தோம். ஆனால் என்ன?), மனுஷ குமாரனின் காலம் வெளிப்பட்டு, எல்லாம் நிறைவேற வேண்டிய நேரத்தில், வார்த்தை நிறைவேறுவதற்கென இக்காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாருங்கள்? அதை நாம் காண்கிறோம், அது உண்மை! 113சிந்தித்துப் பாருங்கள், அவர் முதலில் கடைபிடித்த அதே முறைகளின் மூலம், அது நமது மத்தியில் உறுதிப்பட்டது மாத்திரமல்ல, விஞ்ஞானத்தாலும் அது உறுதிப்பட்டது. அது உண்மையென்று அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயுள்ளது. விரல் ரேகை தஸ்தாவேஜுகளின் பகுதிக்கு FBI தலைவரான ஜார்ஜ் ஜே. லேசி என்பவர், “ஒளி புகைப்படக் கருவியின் கண்ணாடியின் மேல் பட்டது. நானே அதை மனோ தத்துவம் என்று அழைத்ததுண்டு. ஆனால் திரு. பிரான்ஹாமே, இந்த புகைப்படக் கருவி மனோ தத்துவத்தை படம் எடுக்காது. இங்கு அந்த படம் உள்ளது” என்றார். அது என்ன? நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு அந்த அக்கினி ஸ்தம்பம் சுழல் காற்று போன்று அந்த புதரில், புகை பிடிக்காதே , மது அருந்தாதே. நீ பெரியவனாகும்போது, நீ செய்ய வேண்டிய வேலை ஒன்றுண்டு என்று கூறினார் என்பதற்கு அது சாட்சி. ஜனங்கள், “பையனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுவிட்டது என்றனர். அம்மா மருத்துவரைக் கூப்பிட எண்ணினார்கள். எனக்கு பயம் உண்டானது. அது என்ன? அவர் ஓஹையோ நதியின் மேல் வந்து, “வார்த்தை வெளிப்படுவதற்கு ஒரு கூட்டம் ஜனங்களை ஆயத்தமாக்க, யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன் செய்தியும் அவ்விதம் செய்யும் என்றுரைத்தார். 114டாக்டர் டேவிஸும் மற்றவர்களும் எனக்கு மூளைகோளாறு ஏற்பட்டுவிட்டதென்று கூறி, நான் பெண் பிரசங்கிகளைக் குறித்தும் இன்னும் வேதத்துடன் ஒத்துப் போகாத பல காரியங்களைக் குறித்தும் அவர்களுடன் இணங்காததால் என்னை சபையை விட்டு புறம்பாக்க எண்ணினர். அவர், “நீ பிரசங்கம் செய்து, உலகத்தை அசைக்கும் ஒரு எழுப்புதலை உண்டாக்கப் போவதாகவா கூறுகின்றாய்” என்று கேட்டார். நான், “நான் கூறவில்லை, அவர் அவ்விதம் கூறினார்” என்றேன். அவர், “பில்லி, உனக்கு தீக்கனவு உண்டாயிருக்கும்” என்றார். நான், “இப்பொழுதே என் சீட்டை கொடுத்து விடுகிறேன். இனிமேல் நான் உங்களைச் சேர்ந்தவன் அல்ல” என்று கூறினேன். அவர் அதை சொன்னார், நான் அதை விசுவாசித்தேன். அவர் அதை நிரூபித்துவிட்டார். அது தான் இதில் சிறந்த பாகம். அவர் அதை நிரூபித்துவிட்டார். அவர் தமது வார்த்தையை கொண்டு நிரூபித்தார். ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். பாருங்கள்? வார்த்தை என்ன செய்கிறது? இருதயத்தின் இரகசியங்களை அறிந்து கொள்கிறது. அது சரியா? சரி, அது எபி.13-ஐ நிரூபிக்கிறது. 115அவர் கடைசி நாட்களில் ஒரு மணவாட்டி சபையை ஆயத்தம் செய்வார். “சகோ. பிரான்ஹாமே. அவர் எவ்விதம் செய்வார் எனக்குத் தெரியாது. அவர் செய்யப் போவதாக கூறியுள்ளார். அவர் அதை நிறைவேற்றுவார். எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும் வெளியே அழைக்கப்பட்டவர்கள். அது உண்மை. அவருடைய இரத்தத்தினால் புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட புள்ளியுள்ள பறவை. பாருங்கள்? வெளியே அழைக்கப்பட்டவர்கள். கூட்டத்திலுள்ள மற்ற பறவைகள் அனைத்தும் அதற்கு விரோதமாயுள்ளன. அவள் நிந்திக்கப்பட்டு புறக்கணிக்கப் படுகிறாள். ஆனால் அந்த புள்ளியுள்ள பறவை; அந்த புத்தகத்தை எழுதினவர் எவ்வளவுதான் அந்த கருத்துக்கு இணங்காமல் போனாலும் எனக்குக் கவலையில்லை. அவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர்கள் அந்த புள்ளியள்ள பறவைக்கு என்ன செய்தனர். அவர்கள் இரண்டு பறவைகளை எடுத்துக் கொண்டு, அந்த ஜோடியில் ஒன்றைக் கொன்று. அதன் இரத்தத்தை மற்ற பறவையின் மேல் ஊற்றினர். அது குஷ்டரோகம் சுத்திகரித்தலுக்காக செய்யப்பட்டது. இந்த பறவை இரத்தத்தின் புள்ளிகளைக் கொண்டதாய் கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம் என்று சத்தமிட்டுக் கொண்டே பறந்து சென்றது. நமது ஜோடியாகிய இயேசு கிறிஸ்து கொல்லப்பட்டார். அவருடைய இரத்தம் நம்மேல் ஊற்றப்பட்டு நாம், “கர்த்தருக்கு பரிசுத்தம், பரிசுத்தம், பரிசுத்தம் என்று சத்தமிடுகிறோம். மற்ற பறவைகள்... என் பெயர் அந்த பறவையின் புத்தகத்தில் இருப்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்; பூமியில் அல்ல, மேலே; வெள்ளாட்டுத் தோலின் மேல் அல்ல, ஆட்டுக்குட்டியின் தோலின் மேல் அது உண்மை. 116மரித்தோரின் உயிர்த்தெழுதல் இருக்கும். அவர் அதை உறுதிப்படுத்துவார். அது உண்மை. அவர் அதை நிரூபிப்பார். சபையின் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும். அது எப்படி முடியும் எனக்குத் தெரியாது, ஆனால் அவர் அதை நிருபிப்பார். அவருடைய வார்த்தை உண்மையானது. ஆயிரம் வருட அரசாட்சி இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். அது அவருடைய வார்த்தை . புதிய வானமும் புதிய பூமியும் இருக்கும். அவர் அதை நிரூபிப்பார். ஏனெனில் அவருடைய வார்த்தை அவ்விதம் கூறுகின்றது. நீதிமான்கள் மாத்திரமே அங்கிருப்பார்கள். அவர் அதையும் நிரூபிப்பார். அது உண்மை. இந்த வார்த்தையின் ஒரு பாகமாக ஆக்கப்பட்டவர்கள் (பாருங்கள், அவர்களுடைய காலத்தில் இந்த வார்த்தையில் தங்கள் பாகத்தையும் ஸ்தானத்தையும் அறிந்து கொண்டவர்கள்) மாத்திரமே அங்கிருப்பார்கள். ஏனெனில் அது தான் அவர். அவர் வார்த்தையாயிருக்கிறார். ஸ்திரீ என்பவள் யார் மனிதனின் சாயல். சபை என்பது என்ன? வார்த்தையில் சாயல். பாருங்கள். அது முற்றிலும் அப்படியே. பாருங்கள்? எனவே அது அப்படியே அங்கிருக்கும். அவருடைய வார்த்தையில் உண்மையான விசுவாசம் கொண்டுள்ளவர் மட்டுமே இதை அறிந்து விசுவாசிக்க முடியும். அது உண்மையென்று நிரூபிக்க தேவன் அவர்களுக்கு உதவி செய்கிறார், அது உண்மை. 117நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் விசுவாசத்தினால் உங்கள் கைகளை நீட்டி அவருடைய வஸ்திரத்தைத் தொடுங்கள். அவர் இந்த வழியாய் கடந்து செல்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அவர் நிரூபிப்பார், எபி. 13: 8. “இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்”, மத்தேயு. எபிரேயர் நிரூபத்தின்படி அவர் நம்முடைய பிரதான ஆசாரியராயிருக்கிறார். “நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய (ஆங்கிலத்தில் 'touched' - தொடப்படக் கூடிய - தமிழாக்கியோன்) பிரதான ஆசாரியர் அவர்”, என்று எபிரேயர் நிருபம் 4-ம் அதிகாரம் 15-ம் வசனம் உரைக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கைகளை நீட்டி கர்த்தரைத் தொடுங்கள். அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார். “இதோ . சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்”. காலங்கள் தோறும் நோக்கிக் கொண்டே வாருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார், அவர் எல்லா வகையிலும் மாறாதவர் என்று விசுவாசிக்காத சபையை நீங்கள் சேர்ந்திருந்தால், அதிலிருந்து விலகி வாருங்கள். சோதித்துப் பாருங்கள்! 118அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று நாம் கூறுகிறோம். நான் கூறவில்லை, இங்குள்ள வார்த்தை உரைக்கிறது. அவர்கள், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்றனர். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவை கடைசி நாளில் சம்பவிக்கும் என்றும், அதே மனுஷகுமாரன் வெளிப்படுவார் என்றும் அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். தமக்குப் பின்னால் இருந்த சாராளின் மனதிலிருந்த சிந்தனைகளைப் பகுத்தறிந்து ஆபிரகாமிடம் பேசினவர் இயேசுவல்ல. அது இயேசுவல்ல, அவர் அப்பொழுது பிறக்கவில்லை. அது மாம்ச சரீரத்தில் இருந்த ஒரு மனிதன். ஆபிரகாம் அவரை “ஏலோகிம், சர்வ வல்லமையுள்ளவர்” என்றழைத்தான்... இயேசு, “சோதோமின் நாட்களில் நடந்தது போல” என்றார். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருங்காலத்தில், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில் நடக்கும். இனிமேல் சபையாக அல்ல, பாருங்கள், இனிமேல் அல்ல. மணவாட்டி அழைக்கப்படுகிறாள், பாருங்கள். ”மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில் என்ன? சபையுடன் தலையை ஒன்று சேர்க்க, இணைக்க, மணவாட்டியின் கலியாணம். மணவாளனின் அழைப்பு இதன் வழியாகவே வரும். அப்பொழுது மனுஷகுமாரன் இவ்விருவரையும் ஒன்றாக இணைக்க கீழே இறங்கி மாம்ச சரீரத்தில் வருவார். சபை வார்த்தையாக இருக்க வேண்டும், அவர் வார்த்தையாயிருக்கிறார். இவ்விருவரும் ஒன்றாக இணைகின்றனர். அதை செய்வதற்கு மனுஷகுமாரன் மாம்ச சரீரத்தில் வெளிப்பட வேண்டும். குருவானவர் அல்ல. எனக்குத் தெரியாது, நான்... நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? பாருங்கள், மனுஷகுமாரன், இயேசு கிறிஸ்து, நமது மத்தியில் மாம்ச சரீரத்தில் இறங்கி வந்து, அவருடைய வார்த்தையை மிகவும் தத்ரூபமாக்குவார். அது மணவாட்டியையும் அவரையும் ஒன்றாக இணைக்கும். அதன் பிறகு அவள் கலியாண விருந்துக்கு வீடு செல்வாள். ஆமென். அவள் ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டாள், பாருங்கள், நாம் கலியாண விருந்துக்குச் செல்கிறோம், கலியாணத்திற்கு அல்ல. “...நீங்கள் பலவான்களின் மாம்சத்தைப் பட்சியுங்கள், ஏனெனில் ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது” எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது கலியாண விருந்துக்கு செல்லுதல். வார்த்தை அந்த நபருடன் இணையும்போது, இருவரும் ஒன்றாகின்றனர். அப்பொழுது அது என்ன செய்கிறது? அது மனுஷகுமாரனை மறுபடியும் வெளிப்படுத்துகிறது - சபையிலுள்ள வேத சாஸ்திரிகளையல்ல. மனுஷகுமாரனை! வார்த்தையும் சபையும் ஒன்றாகிவிடுகிறது. மனுஷகுமாரன் என்னென்ன செய்தாரோ... அவர் வார்த்தையாயிருக்கிறார்... சபையும் அதையே செய்கிறது. 119காலங்கள் தோறும் அவர் தம்மை எவ்விதம் நிரூபித்தார்? தீர்க்கதரிசிகளின் மூலம். அவர்கள் அவருடைய சிந்தைகளை அறிந்து வார்த்தையை உரைத்தனர். அவ்விதம் தான் அவர் அறியப்பட்டார். சபை காலங்கள் கடந்து, “ஒரு நாள் உண்டு, அது பகலுமல்ல, இரவுமல்ல”. ஆனால் - சாயங்காலத்திலே மனுஷகுமாரன் வெளிப்படுவார். அது மறுபடியும் நடக்கும். “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்” என்று அவர் வாக்களித்தார். பாருங்கள்? அவர் என்ன செய்கிறார்? அவருடைய வார்த்தையை நிரூபிக்கிறார் . இப்பொழுது பின் நோக்கிப் பாருங்கள், வேதம் கூறியவாறு அவர் கன்னிகையின் மூலம் தோன்றினாரா? அது கூறினபடியே அவர் வந்தாரா? இன்று நடப்பதை கவனியுங்கள். எத்தனை நாத்திகர், அலட்சியம் செய்பவர் இருந்தபோதிலும் அவர் வந்து, தமது வார்த்தையை நிரூபித்தார். இதோ நாம் சபை காலங்கள் அனைத்தின் வழியாக கடந்து வந்தோம். அவர்கள் மல்கியாவிலிருந்து கிறிஸ்து வரும் வரைக்கும் உண்டாயிருந்த காலத்தில் எவ்விதம் விலகிச் சென்றனரோ அவ்விதமே சபை காலங்களில் விலகிச் சென்றனர். கிறிஸ்து வருவதற்கு முன்பிருந்த காலத்தில் தீர்க்கதரிசிகள் தோன்றுவது நின்று போனது. அவர்கள் பெரிய மனிதர்களை தெரிந்து கொண்டனர். அந்நேரத்தில் அவர் எத்தகைய தன்மை படைத்த மனிதனை அனுப்பினார் என்பதைப் பாருங்கள் - எலியாவைப் போன்ற ஒருவனை. ஒழுக்கங்கெட்ட பெண்களை, முகத்தில் வர்ணமும் பவுடரும் அழகுபடுத்தும் சாதனங்களும் பூசிக் கொள்ளும் பெண்களை வெறுக்கும் ஒருவனை அவன் குருவானவர்களை இரக்கமின்றி தாக்கினான். அவன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்து, அவர்கள் எவருடனும் எவ்வித தொடர்பும் கொண்டிராமல், “மேசியா வந்து கொண்டிருக்கிறார். அவர் வரும்போது அவரை நான் அறிந்து கொள்வேன். அவரை நான் அறிமுகம் செய்வேன். ஆமென். நீங்கள் இதை, அதை சேர்ந்தவர்கள் என்று நினையாதிருங்கள்” என்றான். எலியா செய்த அதே விதமாக 120“கடைசி நாட்களில், கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே, நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்” கவனியுங்கள், பிதாக்களுடைய விசுவாசத்தை பிள்ளைகளிடத்திற்கு திருப்பினது. அது யூதர்கள். பாருங்கள்? புறஜாதிகளுக்கு வேதாகமத்தில் அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம், அவர்கள் எந்நிலையிலிருந்து விழுந்து போயினர் என்று. யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் அளிக்கப்பட்ட இருவகையான வாக்குத்தத்தங்கள் எவ்வளவு பிழையின்றி உள்ளதைப் பாருங்கள். தேவன் தமது வார்த்தையை நிரூபிப்பதை இங்கு நாம் காண்கிறோம். 121சிறிது நேரம் நாம் தலைவணங்குவோம். அன்புள்ள தேவனே, உமது வார்த்தையை நிரூபிக்க கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரே, அவர் இன்று உயிரோடிருப்பது உமது வார்த்தையை நிரூபிக்கிறது. இதோ, முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்“ என்பது அவருடைய வார்த்தையை நிரூபிக்கிறது. ”இயேசுகிறிஸ்து நேற்றம், இன்றும், என்றும் (forever) மாறாதவராயிருக்கிறார்“ (என்றும் என்று நீர் கூறாமலிருந்தால், அது சிலரை இடறச் செய்திருக்கும்). கர்த்தாவே, அதை விவரிக்க நான் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என்றும் என்பது ஒரு 'கால அளவை' குறிக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த காலத்துக்குப் பிறகு வேறொரு காலம் இராது, அது நித்தியமாயிருக்கும். எனவே அதே தேவன் மோசேக்குள்ளும் மற்ற தீர்க்கதரிசிகளுக்குள்ளும் இருந்தார். அதன் பிறகு, ஒரு கால அளவுக்குப் பிறகு, அவர் தம்மை தேவன் - தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தினார். பிறகு ஒரு கால அளவு உண்டாயிருந்தது. அவர் மறுபடியும் வருகிறார். ”நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்“ 122யூதர்களுக்கிருந்த அந்த மகத்தான ஆயிர வருட அரசாட்சியில் நாங்கள் சாலொமோனை நினைவு கூருகிறோம். எந்த தேசமும் அவர்கள் மேல் படையெடுக்க துணியவில்லை. அந்த தீர்க்கதரிசிக்குள் அந்த மகத்தான வரம் இருந்தது. அவன் ராஜ ஸ்திரீயின் இருதயத்திலுள்ள இரகசியங்கள் அனைத்தையும் அறிவித்தான், அவனுக்கு ஒன்றும் மறைபொருளாயிருக்கவில்லை. அந்த மகத்தான காலம், ஒரு மகத்தான காலம் வரப்போகிறது என்பதைக் காண்பித்து அதற்கு முன்னடையாளமாகத் திகழ்ந்தது. இப்பொழுது, பிதாவே, அது நீர், சாலொமோன் அல்ல. அது இயேசுவுக்குள் இருந்த நீர். ஏனெனில் அவர், “தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தாரை தம்முடன் ஒப்புரவாக்கிக் கொண்டார். அவர் சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறார்” என்று கூறியுள்ளார். அவருடைய சரீரம் மீட்கப்பட்ட சிருஷ்டி. இப்பொழுது சபை காலங்களில் சபையானது, தான் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டது. ஆனால் இந்த கடைசி நாட்களில் நீர் சிறுபான்மையோரை, சிறு மந்தையை, அழைப்பதாக வாக்களித்திருக்கிறீர். பிதாவே, அதை நினைத்துப் பார்த்து, உமது வார்த்தைகள் சத்தியமுள்ளவை, அவை ஒன்றாகிலும் தவறாது என்று அறிந்திருக்கும்போது, எங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் துள்ளுகின்றன. என் இருதயம் வெடித்துவிடும் போல் உள்ளது. இன்றுள்ள ஜனங்கள் அதை புரிந்து கொண்டு, கதவுகள் அடைபட்டு காலதாமதமாவதற்கு முன்பு, இந்த நேரத்தில் பாவிகள் உம்மை தேடுவார்களாக. மணவாட்டி இதிலிருந்து அதிலிருந்து வரிசையை விட்டுப் போகத் தொடங்கும் போது, சில வாரங்களுக்கு முன்பு அந்த தரிசனம் காண்பித்தபடி, அவள் மீண்டும் அணிக்குள் வருவாளாக. 123பிதாவே, இப்பொழுது எங்களை ஆசீர்வதித்து, வியாதியஸ்தரை சுகப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இங்கு துணிகள், உறுமால்கள் வைக்கப்பட்டுள்ளன... அவை வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவை. பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து வியாதிக்காரர் மேல் போட, தேவன் அவர்களை சுகப்படுத்தினதாக வேதம் கூறுகிறது. நாங்கள் பரி. பவுல் அல்ல என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் அது பரி. பவுல் அல்ல, அது அவன் உம்முடைய ஊழியக்காரன் என்று ஜனங்கள் கொண்டிருந்த விசுவாசம். கர்த்தாவே, இவர்கள் விசுவாசிக்கவில்லை என்றால் நூற்றுக்கணக்கான மைல்கள் காரோட்டி இங்கு வரமாட்டார்கள். கர்த்தாவே, இவர்களுடைய விசுவாசத்துக்கு பலனளிப்பீராக... இந்த உறுமால்களை நான் அபிஷேகம் செய்யவில்லை (பவுல் அவைகளை அபிஷேகம் செய்யவில்லை, அவைகள் அவன் சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டன). கர்த்தாவே, இந்த உறுமால்களை என் கைகளில் பிடித்துக் கொண்டிருக்கும் போது, என் சாரத்தின் மேல் அல்ல, (ஏனெனில் அது ஒன்றும் நல்லதல்ல) ஆனால் அது நீர் மீட்டுக் கொண்ட சொத்து. எனவே தேவனே, அவர்களுடைய விசுவாசத்தை நீர் கனப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய ராஜ்யத்தின் நிமித்தம் சுகமடைவார்களாக. இப்பொழுது, கர்த்தாவே, இது நீண்ட செய்தியாக ஆகிவிட்டது. சில நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைத்தேன், ஆனால் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது. இப்பொழுது, வியாதியஸ்தர் சுகமடைவார்களாக. நீர் இங்கே இருக்கிறீர் என்றும், இதை நானாக சொல்லவில்லை என்றும் ஜனங்கள் கண்டு கொள்வார்களாக. அது நீர், கர்த்தாவே. இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 124இப்பொழுது இன்னும் பத்து நிமிடங்கள் எனக்குத் தெரியவில்லை. இங்கு ஏதேனும் அட்டைகள் கொடுத்தீர்களா? அதன் எண் என்ன? சில அட்டைகளைக் கொடுத்ததாக பில்லி கூறினான். அவைைைள கொடுக்க இன்று காலை நான் அவனிடம் கூறினேன். ஆராதனை தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நான் வந்தேன், எனவே அவனிடம் கேட்க எனக்குத் தருணம் கிடைக்கவில்லை. நான் சகோ. பென், இன்னும் மற்றவர்களுடனும் உரையாடிக் கொண்டிருந்தேன். அவனைக் கேட்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவன் ஜெப அட்டைகளைக் கொடுத்துவிட்டதாக இப்பொழுது தான் என்னிடம் கூறினான். ஜெப அட்டை பி (B), நூறு... (ஒன்று முதல் நூறா?) 'பி', நல்லது. ஜெப அட்டை எண் ஒன்று. யாரிடம் 'பி' உள்ளது? உங்களால், உங்களால் எழுந்து, கைகளை உயர்த்த முடியுமானால்; உங்களால் நடந்து வர முடியுமானால், சில ஸ்திரீகள் பின்னால் இருக்கின்றனர். சரி, 'பி', எண் ஒன்று, எண் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, இந்த பக்கம் வாருங்கள். இந்த சிறு பிள்ளைகள் மேடையின் பின்னால் வந்து உட்கார்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் போகிறேன். இப்பொழுது சரி, இப்பொழுது. உங்களிடம் கூறுகிறேன், அவர்களை அனுப்புங்கள். ஜெப அட்டைகள் ஒன்று முதல் ஐந்து எண்களை உடையவர்கள் அங்குள்ள அந்த உட்பாதையின் வழியாக வந்து இங்கு வாருங்கள். உட்பாதையிலுள்ளவர்கள் கூடுமானால் இங்கு சுற்றிலும் வந்து அவர்களுடைய இருக்கைகளில் அமர்ந்து கொள்ளட்டும். இங்கு உட்கார்ந்திருக்கும் சிறுபிள்ளைகள் மேடைக்குப் பின்னால் வரட்டும். இவர்கள் இங்கு நடந்து வர வேண்டுமென்று விரும்புகிறேன், அப்பொழுது அவர்களுக்காக நான் ஜெபிப்பேன். 125இப்பொழுது பார்ப்போம். அப்படியா? நான் எந்த எண்களைக் கூப்பிட்டேன்? ஒன்று முதல் ஐந்து, இல்லையா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. ஒன்று... ஒன்று முதல் ஐந்து எண்கள் ஜெப அட்டைகளை உடையவர்கள் உங்கள் கைகளையுயர்த்துங்கள், அவர்களெல்லாரும் எழுந்து நிற்கிறார்களா என்று காண. அங்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஒருவர் இல்லை. பி வரிசையில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. எல்லோரும் இருக்கின்றீர்களா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு 'பி' வரிசையில் எண் ஐந்து எங்கே? ஐந்து, ஸ்திரீயே அந்த வழியாகச் செல். சரி, ஐயா, அந்த வழியாகச் செல்லுங்கள். அப்படித்தான். ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, சுற்றி வந்து இங்கு வாருங்கள், ஐந்து ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. பாருங்கள், இதை நாங்கள் செய்யக் காரணம், உங்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருக்க. ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, இப்பொழுது எல்லாரும் வந்துவிட்டார்கள்... என்று நினைக்கிறேன். அங்கு நின்று கொண்டிருக்கும் ஐயா, உம்மிடம் ஜெப அட்டை உள்ளதா? ஏழா? சரி, அங்கு சென்று அவர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். இன்னும் இரண்டு பேர் மாத்திரமே அங்கு உள்ளனர் என்று நினக்கிறேன், இங்கு... ஐயா, உங்களிடம் ஜெப அட்டை உள்ளதாக பார்த்தீர்களா? அதோ மற்றவர்கள். பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து. அப்படியானால் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. சரி, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது. அது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. சரி, இருபது, இருப்பத்தொன்று, இருபத்திரண்டு, இருபத்து மூன்று, இருபத்து நான்கு, இருபத்தைந்து. ஒன்று, இரண்டு, மூன்று ஐயா, அந்த வழியாக சுற்றி வந்து வரிசையில் சேர்ந்து கொள்ளுங்கள், இருபத்தைந்து. அவருக்கு அங்கு உதவி செய்யுங்கள், அவர் எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லட்டும். இதோ சகோதரனே. உங்களுக்காக. இங்கு அவர்கள் வழியை உண்டாக்கிக் கொடுத்துள்ளனர். ஜனங்கள் உங்களுக்காக வழியை உண்டாக்கியுள்ளனர். யாராகிலும் ஒருவர் அவருக்கு உதவி செய்யுங்கள், உங்களால் கூடுமானால் அவர் சுற்றி வந்து வரிசையில் சேர்ந்து கொள்ளட்டும். அவரை அங்கு உட்காரச் செய்யுங்கள். அவருடைய எண் கூப்பிடப்படும் போது, அவரை வரிசையில் நிறுத்துங்கள். பாருங்கள்? அவருடைய எண் வரும்போது. அவரை வரிசையில் நிறுத்துங்கள். சரி, இவ்வளவு பேர் தான் இப்பொழுது வரிசையில் வர முடியும். 126இங்குள்ள எத்தனை பேர் ஜெப அட்டை இல்லாமல், ஆனால் தேவன் வியாதியஸ்தரை சுகமாக்க முடியும் என்னும் முழுமையான விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்குள்ளவர்களில் எத்தனை பேர்... உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. உங்களுக்குள்ள வியாதி என்னவென்று எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்திருக்கிறீர்கள்? என் கூடாரத்தைச் சேர்ந்தவர்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் அந்நியராயிருக்கின்றனர். எனக்குத் தெரிந்தவர்கள் யாரையுமே என்னால் காணமுடியவில்லை. இந்த போதகர்களைத் தவிர. அங்கு எனக்குத் தெரிந்த ஒரு நபரைக் காண்கிறேன். நான் மக்களை அறிந்து கொள்ள அதிக நாட்கள் இங்கு தங்குவதில்லை, பாருங்கள். எல்லாவிடங்களிலுமிருந்து ஜனங்கள் இங்கு வருகின்றனர். இங்குள்ள எத்தனை பேர்... அதை நான் உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்கட்டும். இங்குள்ளவர்களில் எத்தனை பேர், உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்பதை அறிந்திருக்கிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். பாருங்கள், தேவனுக்கு முன்பாக உங்கள் கரம் உயர்த்தப்பட்டுள்ளது. பாருங்கள். அவர்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. இப்படி ஜெப வரிசைக்கு அழைக்கப்பட்டவர்களில் யாராகிலும் ஒருவர் எனக்கு தெரிந்திருக்க வகையுண்டு. ஆனால் அவர்கள் எதற்காக இங்குள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. பாருங்கள், அவர்கள் எதற்காக இங்குள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. 127இப்பொழுது நான் என்ன செய்கிறேன் என்றால், நீங்கள் இதை அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். இப்பொழுது கவனியுங்கள். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களார் அந்த வார்த்தையை அவர் நிருபிப்பாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. சபை காலங்களின் முடிவில், அவர் தம்மை மனுஷ குமாரனாக வெளிப்படுத்துவார் என்று உரைத்துள்ளாரா? எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? உலகம் சோதோம் கொமோராவின் நிலையில் காணப்படும் என்று அவர் உரைத்துள்ளாரா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, பில்லி, அவர்களை ஏன் இங்கு வரும்படி நீ அனுப்பக் கூடாது? ஆம், சரி, நல்லது. சரி . காலத்தின் முடிவில் அவர் தம்மை வெளிப்படுத்துவார். இப்பொழுது பாருங்கள், இது முழுவதும் கூடாத காரியம் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? இதுவரை என் வாழ்க்கையில் கண்டிராத மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். நான் கண்டிராதவர் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் எபிரேயர் 4:15-ஐ நினைவுகூருங்கள். அந்த வசனம் தான் என்று நினைக்கிறேன். “நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக் கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார்” என்றுரைக்கிறது. அது உண்மையா? இப்பொழுது, அவர் பிரதான ஆசாரியராயிருப்பாரானால், அவர் எபிரேயர் 13 : 8 ஆக, ''அதாவது நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக“ இருப்பார். அது சரியா? அவர் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துவார்? நான் உங்களுக்கு கூறினது போன்று, அவர் எப்பொழுதும் தமது தீர்க்கதரிசிகளின் மூலம் பேசுகிறார். அவர் நியாயத்தீர்ப்புக்கு முன்பாக எப்பொழுதும் ஒரு செய்தியை அனுப்புகிறார். இவையனைத்திலும் அவர் தமது வழியை மாற்றிக் கொள்வதேயில்லை. 128அவர் ஏதேன் தோட்டத்தில், குற்றமற்ற ஒன்றின் சிந்தப்பட்ட இரத்தம் மூலம் மனிதனை இரட்சிக்கத் தீர்மானித்தார். அவர் அதை மாற்றவேயில்லை. நாம் தான் அதை கல்வியின் மூலமாகவும், பாபேல் கோபுரங்களின் மூலமாகவும், பெரிய பட்டினங்களின் மூலமாகவும் அப்படிப்பட்டவைகள் மூலம் மாற்ற முயல்கிறோம். நாம் மாற்ற முயன்றாலும் அதனால் பயனில்லை. நாம் உலகத்துக்கு கல்வி புகட்டி அவரிடம் கொண்டு வந்து, அதன் மூலம் அதை மாற்ற முயல்கிறோம். ஜனங்களை ஸ்தாபனங்களுக்குட்படுத்தி அதன் மூலம் அதை மாற்ற முயல்கிறோம். ஆனால் அது கிரியை செய்யவில்லை. ஆராதிக்க மனிதன் சந்திக்கும் ஒரு இடம் மாத்திரமே உண்டு. அது தான் இரத்தத்தின் கீழ். உங்கள் ஸ்தாபனங்கள் உங்களை பிளவுப்படுத்தும். ஆனால் இரத்தத்தின் கீழ் நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள். அவர் மாறுவதேயில்லை. அவர் மாறாத பிரதான ஆசாரியராக, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருப்பாரானால், அவர் அந்த வார்த்தையை நிறைவேற்ற வேண்டியவராயிருக்கிறார். அவர் அப்படி செய்வாரென்று நாம் சொல்வதனால் அல்ல, அவர் செய்வாரென்று அவரே சொன்னதனால் பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது, அவர் அப்படி செய்வாரானால்... இப்பொழுது, ஒரு நிமிடம் நிறுத்தி யோசியுங்கள். இப்பொழுது, ஜெப வரிசையிலுள்ள உங்களில் எத்தனை பேர், உங்களைக் குறித்தும் உங்கள் வியாதியைக் குறித்தும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்துள்ளனர்? அப்படியானால் உங்கள் கைகளையுயர்த்துங்கள். நான் என்ன சொல்லுகிறேன் என்று... ஜெப வரிசையில் உள்ள எத்தனை பேர் உங்களை எனக்குத் தெரியவே தெரியாது என்பதை அறிந்துள்ளனர்? உங்கள் கைகளையுயர்த்துங்கள். 129கூட்டத்தில் உள்ளவரைப் பாருங்கள். அங்குள்ளவர்களே, நீங்கள் இங்கிருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. அவருடைய வஸ்திரத்தை மாத்திரம் தொடுங்கள். நீங்கள் “கர்த்தராகிய இயேசுவே, உம்மை நான் விசுவாசிக்கிறேன்” என்று அவரிடம் கூறுங்கள். நீங்கள், அதை நான் விசுவாசிக்கிறேன, “நீர் சகோ. பிரான்ஹாமினிடத்தில் அதை வெளிப்படுத்துவீர் என்று விசுவாசிக்கிறேன், ஏனெனில்...” என்று கூறுங்கள். அது சகோ. பிரான்ஹாம் என்பதனால் அல்ல, அவர் ஒரு சாதாரண மனிதன். ஒருவேளை எடுத்துக்கொள்ளப்படுதல் இன்று காலை நிகழ்ந்தால்... நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். இதை நான் தாழ்மையோடு கூறுகிறேன், எடுத்துக் கொள்ளப்படுதல் இன்று காலை நிகழுமானால், இந்த சபையோரில் பாதிபேர், நாம் படிப்படியாக எடுத்துக் கொண்டு, நாம் எங்கே இருக்க வேண்டுமென்பதை ஆதாரமாகக் கொண்டால் உங்களில் பாதி பேர் எனக்கு முன்னால் சென்றுவிடுவீர்கள். அது உண்மை... நான்... எனக்குள்ள உத்திரவாதத்தைப் பாருங்கள், நான் எவ்வளவு தளர்ச்சியாக அதை சுமக்கிறேன் என்று. நான் கிறிஸ்துவுக்கு அப்பிரயோஜனமான ஊழியக்காரன், அவரைக் குறித்து நான் அவ்வளவாக அறிந்தும், இந்தவிதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நடத்தை கெட்ட விதத்தில் அல்ல, அசுத்தமாக அல்ல, அப்படியொன்றும் அல்ல. அது உண்மையென்று தேவன் அறிவார். பாருங்கள், நான் நேர்மையாக வாழ முயற்சி செய்கிறேன், ஆனால் என்னால் சரியான விதத்தில் இதை எடுத்துரைக்க முடிகிறதில்லை என்று தோன்றுகிறது. ஒருவேளை அதிகம் படித்த வேறு யாராகிலும் இதை ஜனங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கக் கூடும். ஆனால் எல்லாருமே இதை எப்படியும் ஏற்றுக் கொள்ளப் போகிறதில்லை என்று நினைக்க வேண்டியதாயுள்ளது. பாருங்கள்? அவர் செய்யப் போவதை அவர் அறிந்திருக்கிறார். எனவே என்னை நான் அவரிடத்தில் ஒப்புவித்து, “கர்த்தாவே, நான் உம்முடைய கைகளில் இருக்கிறேன். உமக்கு சித்தமானதை என்னில் செய்யும் என்று கூறுகிறேன். இப்பொழுது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருப்பாரானால்...” 130இப்பொழுது, இந்த ஸ்திரீயை எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவள் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இவளை எனக்குத் தெரியும். இவளை எப்படியோ எனக்குத் தெரியும். இவளுடைய முகத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்நேரத்தில் யாரென்று எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் இவளை எப்படியோ எனக்குத் தெரியும். என்னை உனக்குத் தெரியுமல்லவா? அ, அ, அப்படித்தான் நான் எண்ணினேன். அவளுடைய முகத்தைப் பார்த்த மாத்திரத்தில், அவளை எனக்குத் தெரியுமே என்று எண்ணினேன். ஆனால் அவளுடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. உன் கணவர்... நீ அங்கு வேலை செய்யும் ஸ்திரீ அல்லவா... அவள் கணவர் நியூ ஆல்பனியிலுள்ள ஏழு ஏழு ஏழு அல்லது ஏழு பதினொன்று, என்னுமிடத்தில் வேலை பார்க்கிறார், அப்படி ஏதோ ஒன்று. திருமதி ஏகன். அது உண்மை. நீ இங்கு வசித்து சபைக்கு வந்திருக்கிறாய். ராய், ஒரு நாள் நாம் மலையின் மேல் சென்றோமே, இவளா அவள் என்ன சொல்லுகிறீர்கள்? இவளுடைய சகோதரி. அப்படித்தான் நடந்தது. பாருங்கள், ராயும் நானும் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர் அந்த பெயரைக் குறிப்பிட்டார். கர்த்தர் என்னை அங்கு அனுப்பி அந்த ஸ்திரீயை அப்பொழுதே சுகமாக்கினார். ஆம், ஐயா. அது எனக்கு ஞாபகம் வந்தது. 131இப்பொழுது, உனக்குள்ள கோளாறு என்னவென்று எனக்கு ஒன்றும் தெரியாது. அது உனக்குத் தெரியும். ஆனால் கர்த்தராகிய இயேசு அவள் செய்த சில காரியங்களை அவளிடம் கூறினால், ஒருவேளை அவளுக்கு பணக்கஷ்டம் இருக்கக் கூடும். ஒருக்கால் அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் இடையே தொல்லை ஏற்பட்டிருக்கக் கூடும். அல்லது அவளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், ஒரு பிள்ளைக்கும் - அவளுக்கு பிள்ளைகள் இருக்குமானால். எனக்குத் தெரியாது. ஒருவேளை அவளுக்கு பிள்ளைகள் இருந்தால், அவர்கள் வெளியே திரிகிறவர்களாய் இருக்கலாம். ஒருவேளை அதைக் குறித்து அறிந்து கொள்ள அவள் இங்கு நின்று கொண்டிருக்கக் கூடும். எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்து கொள்ள ஒரு வழியும் இல்லை. என்னால் உன்னிடம் கூற முடியாது. ஆனால் அவர் அறிந்திருக்கிறார். பாருங்கள்? எனவே, உனக்கு விளங்குகிறதா? கவனியுங்கள், இதை கூர்ந்து கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். இதை நான் முன்பு கூட்டத்தினரிடம் கூறினதில்லை, ஆனால் இப்பொழுது கூற ஏவப்படுகிறேன். வார்த்தை என்பது என்ன? வெளிப்படையாக கூறப்பட்ட சிந்தனை. அவளுடைய சிந்தனையை என்னால் எப்படி வெளிப்படையாக கூற முடியும் அல்லது அவளுடைய சிந்தனை என்னவென்று என்னால் எப்படி வெளிப்படையாய் அவளிடம் கூற முடியும்? அது வெளிப்படையாய் கூறப்படும் சிந்தனையாக இருக்க வேண்டும், அவளால் அது முடியாது. எனவே நான் அவருடைய சிந்தனையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அது சரியாயிருந்தால்... அது தேவனுடைய சிந்தனையாயிருந்தால், அது சரியாயிருக்கும். அது தேவனுடைய சிந்தனையாய் இராமல் போனால், அது சரியாயிருக்காது. அவள் அதை அறிந்து கொள்வாள், நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள், நாம் அதை அறிந்து கொள்வோம். பாருங்கள், வேறு வழியேயில்லை. அது தேவனாயிருக்க வேண்டும், அல்லது தேவனாய் இராமல் இருக்க வேண்டும். அவருடைய கிருபை போதுமானதாய் உள்ளது. இப்பொழுது, நீங்கள் விசுவாசியுங்கள், ஒவ்வொருவரும் எத்தனை பேர் விசுவாசிக்கப் போகின்றீர்கள்? நல்லது, ஒருவேளை இப்படிப்பட்ட கூட்டங்களை நீங்கள் முன்பு கண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் தேவன் அதை செய்வாரானால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? அங்குள்ளவர்களே, ஜெப வரிசையில் இல்லாதவர்களே, நீங்களும் ஜெபம் செய்யுங்கள். ஜெப வரிசையில் வருபவர்களும், நீங்கள் யாராயிருந்தாலும், ஜெபம் செய்யுங்கள். 132கர்த்தராகிய இயேசுவே, நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். ஆனால் இது உம்முடைய ஆராதனை, கர்த்தாவே. மனிதப் பிரகாரமாக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை நான் செய்துவிட்டேன். ஆனால் நீர் தேவன், மற்றவை உமது கரங்களில் உள்ளது. பிதாவே, நீரே தேவன் என்றும் உம்முடைய வார்த்தை உண்மையென்றும் அறிந்து கொள்ளப்படட்டும். கர்த்தாவே, கடைசி நாளில் மனுஷகுமாரன் வெளிப்படுவார் என்னும் உம்முடைய வார்த்தையை நிரூபிப்பீராக. அவர் எவ்விதம் தம்மை அறியப்படுத்தினார்? அவர் வார்த்தையாயிருந்தார். வார்த்தை என்பது என்ன? இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும், வகையறுப்பவர். அவர் பேதுரு, பிலிப்பு, நாத்தான்வேல், கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீ, இன்னும் மற்றவர்களிடம் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கூறினார். அந்த சிறு பெண் மரிக்கவில்லை என்றும், அவள் நித்திரையாயிருக்கிறாள் என்றும் அறிந்து கொண்டார். தேவனே, பூமியில் வாசம் செய்யும் எங்கள் தாழ்மையுள்ள கூடாரங்களை நீர் உபயோகித்து, உம்மை வெளிப்படுத்த வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 133என்னால் சுகப்படுத்த முடியாது. அது உங்களுக்குத் தெரியும். சகோ. பிரான்ஹாமே, நீங்கள் பெற்றிருக்கும் இந்த வரம் என்ன இல்லை, அது வழியிலிருந்து எப்படி விலகிக் கொள்வது என்பதை அறிந்திருத்தல். பாருங்கள்? வழியில் உள்ள வரைக்கும் அது கிரியை செய்வதில்லை. வில்லியம் பிரான்ஹாமே எனக்குள்ள மிகப் பெரிய சத்துரு. பாருங்கள்? அவரை நான் வழியிலிருந்து விலக்கிக் கொள்ளும்போது, பாருங்கள், இயேசு கிறிஸ்து சரீரத்தை உபயோகிக்க முடியும். பாருங்கள்? இப்பொழுது இந்த ஸ்திரீயினிடத்தில் நான் வருகிறேன். இப்பொழுது என்ன? இவள் வியாதியாயிருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். இங்கு ஒரு ஸ்திரீ இருக்கிறாள், அவளுடைய கால் ஊனமுற்று நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள். இப்பொழுது இயேசு இங்கிருப்பாரானால், அவர் சென்று அந்த ஸ்திரீயின் மேல் தமது கரங்களை வைப்பாரானால், அந்த கால் சுகமடையும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், பாருங்கள், நாம் அசுத்தமான கரங்களைக் கொண்ட மானிடர். அவருடைய கரங்கள் பரிசுத்தமுள்ளவை. தேவன் அவரை உறுதிப்படுத்தினார். அவர் வார்த்தையாயிருந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக. அவருக்கு சந்தேகமே இருக்கவில்லை. அவர் தம்முடைய கரங்களை அவள் மேல் வைத்து, “மகளே, சுகமடைவாயாக” என்று உரைத்தால், அவள் சுகமடைவாள். ஆனால் நாம் அதையே செய்ய வேண்டுமென்று அவர் நமக்கு கட்டளை கொடுத்திருக்கிறார். அவர் அதை தெளிவுபடுத்தியிருக்கிறார் என்று எண்ணுகிறேன். 134அவர் எனக்கு ஒரு தரிசனத்தை அருளி, இந்த ஸ்திரீ ஒன்றைச் செய்ய வேண்டுமென்று கூறினால் அப்பொழுது என் கைகளை அவள் மேல் வைத்தால், அவள் சுகமடைவாள் என்று நான் விசுவாசிப்பேன். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆனால் அவர் தரிசனம் கொடுக்காமல் போனால்? தரிசனம் என்ன செய்கிறது? அது எனக்கு விசுவாசத்தை அளிக்கிறது. தேவனுடைய காணக் கூடாத வல்லமை என் விசுவாசத்தின் மூலம் மற்றவர்களுக்கு கடந்து செல்கிறது.பாருங்கள்? இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிமிடம் மரிப்பீர்களானால், உங்களுடைய நீங்கள் உங்கள் சரீரத்தை விட்டு செல்வதை உங்களால் காண முடியாது. உங்களுடைய அறிவுத்திறன். உங்களுக்குள்ள எல்லாமே போய்விடும். அது செல்வதை உங்களால் காணமுடியாது. பாருங்கள்? அது ஒரு காணக்... என் கைகளை அசைக்கச் செய்வது ஒரு சக்தி அல்லவா? என்னை சிந்திக்கச் செய்யும் சக்தி, என்னை பிரசங்கிக்கச் செய்யும் சக்தி, என்னை வாழச் செய்யும் சக்தி, இந்த சரீரத்தை இயக்கும் அந்த சக்தி அதை விட்டுச் செல்லும்போது, அந்த சக்தி விட்டுச் செல்வதை உங்களால் காண முடியாது. அது காணக்கூடாத ஒரு சக்தி. விசுவாசமும் அது போன்றது! இதை காணத் தவறாதீர்கள். விசுவாசம் இயேசு, “வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்” என்றார். இப்பொழுது, பாருங்கள், நான் தரிசனம் கண்டு, அவள் மேல் கைகளை வைக்கும்போது, அவள் சுகமடைவாள் என்று நான் விசுவாசிக்கிறேன். ஏனெனில் நான் தரிசனம் கண்டேன். என் நம்பிக்கை அந்த தரிசனத்தின் மேல் உள்ளது. ஆனால் வார்த்தையைக் குறித்தென்ன? அதே விசுவாசத்துடன் அவள் மேல் கைகளை வைத்தல். என் விசுவாசத்தையும் உங்கள் விசுவாசத்தையும் இயக்கவே தரிசனம் அளிக்கப்படுகிறது. தரிசனம் இல்லாமலே, அதே விசுவாசம் அதே கிரியையை நடப்பிக்கும். சிலருக்கு மகத்தான விசுவாசம் அளிக்கப்படுகிறது. சிலருக்கு, அப்படிப்பட்ட விசுவாசம் கிடையாது. எனவே அவர்களுக்கு அந்த விசுவாசத்தை அளிக்க தரிசனம் கொடுக்கப்படுகிறது. பாருங்கள், அது அதே அசுத்த கரங்கள், அதே நபர், ஆனால் அவள் மேல் கைகளை மாத்திரம் வைத்தல். 135இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தாமே தமது பிரசன்னத்தை, அவர் வாக்குத்தத்தம் பண்ணின தமது வார்த் தையை உறுதிப்படுத்துவாராக. உன் பெயரை நான் மறந்துவிட்டேன். உன் பெயர் என்ன? ஏகன். வேண்டுமானால் அவர் எனக்கு உன் பெயரை அறிவித்திருக்கலாம். ஆனால் உன்னை எனக்குத் தெரியும் என்பதை நான் கூறுகிறேன். இங்கு சிறிது அருகில் அங்கு ஜனங்கள் நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். பார். அது... இப்பொழுது, திருமதி ஏகன், நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனாக, சத்தியம் என்று நான் அறிந்துள்ள வார்த்தையை பிரசங்கித்து வந்திருப்பேனானால்; அதை நீ விசுவாசிக்கிறாயா? (திருமதி ஏகன் “ஆம்” என்கிறாள் - ஆசி). அதை நீ விசுவாசிக்கிறாய். உனக்கு ஏதாகிலும் தேவை இருக்குமானால், அதை என்னால் தர முடியாது. ஏனெனில் தருவதற்கு அது என்னிடம் கிடையாது. அது சிறிது பணத்தேவையாயிருக்குமானால், அல்லது உன் கணவர், பிள்ளைகள் அல்லது அன்பார்ந்தவர்களிடம் நான் சென்று பேச வேண்டுமானால், அது என்னால் முடியும். ஆனால் உனக்கு சுகம் தேவைப்படுமானால், அதை என்னால் உனக்குக் கொடுக்க முடியாது. அது ஏற்கனவே கிரயம் செலுத்தி வாங்கப்பட்டுவிட்டது. ஆனால், உனக்கு விசுவாசம் இருக்குமானால், ஒரு வரத்தின் மூலம், அது ஏற்கனவே வாங்கப்பட்டுவிட்டது என்பதை நீ அறிந்து கொள்ளும்படி என்னால் செய்ய முடியும். அதை கிரயம் கொடுத்து வாங்கினவர் தேவனுடைய குமாரன் அவர் ஒருவர் மேல் மாத்திரமே நீ விசுவாசம் வைக்க வேண்டும். கிரயம் கொடுத்து வாங்கினவர் இங்கு நின்று கொண்டிருக்கிறார். பாருங்கள்? அது சரியா? வாங்கினவர் இங்கிருக்கிறார். 136இப்பொழுது, நீ என்னை ஒரு சகோதரனாக, ஒரு ஊழியக்காரனாக அறிந்திருக்கிறாய். உன்னை நான் ஒரு சகோதரியாக அறிந்திருக்கிறேன். நாம் அவரை தேவனாக அறிந்திருக்கிறோம். காணக்கூடாத அந்த நபர், எனக்குள்ள வரத்தின் மூலம் நான் வழியை விட்டு விலகி, என்னிடம் கூறி, என் உதடுகளின் மூலம் உன்னிடம் கூறுவாரானால், பாருங்கள். இப்பொழுது, நான் ஜெபிக்கும் போது, தேவன் என்னைக் காண்பதில்லை. அவர் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் என் குரலை மாத்திரம் கேட்கிறார். பாருங்கள், அவர் என்னைக் காண்பதில்லை, என் குரலைக் கேட்கிறார். அங்குள்ள இரத்தம் நான் கேட்பதை அங்கு எடுத்துரைக்கிறது. பாருங்கள்? அப்பொழுது அவர் என் குரலைக் கேட்கிறார், ஆனால் அவர் இரத்தத்தை மாத்திரம் காண்கிறார். பாருங்கள், அவர் என்னைக் காண்பதில்லை. நான் இரத்தத்தின் கீழ் உள்ள போது அசுத்தமாயிருக்க முடியாது. இரத்தம் சுத்திகரிக்கிறது. பாருங்கள், அவர் எனக்கும் தேவனுக்குமிடையே மோட்டார் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள 'பம்பர்' (bumper) போல் இருந்து, பிதாவினிடத்தில் எதையும் கேளுங்கள், அதை நான் செய்வேன் என்று வாக்களித்துள்ளார். அது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நீங்கள் எல்லோருமே... எவ்விதம் காணப்படுகிறதென்றால்... அது தான் நடக்கிறதென்று உங்களால் காண முடிகிறதா? பாருங்கள், அது ஒளி, சொகுசா நிறம், சுழன்று வருகிறது. அவள் மறைக்க முயன்றாலும் அவளால் முடியாது, முடியாது, முடியாது. உனக்கு நடந்த ஏதோஒன்றின் விளைவினால் இங்கு வந்திருக்கிறாய். நீ நிமோனியா ஜுரத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாய். உன்னை பிராணவாயு கூடாரத்தில் வைத்தார்கள். அதன் விளைவுகள் உன்னை பாதித்துள்ளன. நீ சுகமடைவாய். இயேசு கிறிஸ்து உன்னை குணமாக்குவார். சகோதரி ஏகன், அதை விசுவாசித்து செல். உன் மேல் என் கைகளை இயேசுவின் நாமத்தில் வைக்கப் போகிறேன். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. போ, சந்தோஷமாயிரு. அவர் சொன்னதை சந்தேகப்படாதே. 137சகோதரியே, எப்படியிருக்கிறாய்? என்னை உனக்குத் தெரியாதென்று நினைக்கிறேன். நாம் அந்நியர். எனக்குத் தெரியாத ஒரு ஸ்திரீ இங்கிருக்கிறாள். உன்னை எனக்குத் தெரியாது. உன்னை அறிய எனக்கு யாதொரு வழியும் இல்லை. ஆனால் தேவன், தமது வார்த்தையினால், எனக்கு வெளிப்படுத்தித் தருவாரென்று விசுவாசிக்கிறாயா? ஏனெனில் அவர் அதை வாக்களித்திருக்கிறார். உன்னைக் குறித்து ஏதாவதொன்றை அவர் என்னிடம் கூறுவாரென்று விசுவாசிக்கிறாயா? அதை கூறினது உன் சகோதரனாகிய நானல்ல, உன் இரட்சகராகிய அவர் என்பதை அறிந்து, அதை நீ ஏற்றுக் கொள்வாய் அல்லவா? அதை நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. உனக்கு அறுவை சிகிச்சை நடத்த வேண்டுமென்று உன்னிடம் கூறப்பட்டது. அறுவை சிகிச்சை எதற்காக என்று அவர் என்னிடம் கூற முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா? அது வயிற்றில், குடல்களில். அது முற்றிலும் உண்மை. அதிலிருந்து நீ தப்ப வேண்டுமென்று நினைக்கிறாய். இந்த ஆவி இங்குள்ள நேரத்தில், கிறிஸ்துவின் ஆவி நம்மைச் சூழ இருந்து என் மேல் தங்கியுள்ள இந்நேரத்தில், ஏதாகிலும் ஒன்று உன் நிலைமையை எடுத்துரைக்க வேண்டுமென்று நீ விசுவாசிக்கிறாயா? ஏனெனில் உன்னை எனக்குத் தெரியாது. கைகளை வைப்பதன் மூலம் எனக்குள்ள விசுவாசம் அதன் வழியாய் கடந்து, உன் விசுவாசத்துடன் இணைந்து, நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நீ சுகமடைவாய் என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால் கர்த்தராகிய இயேசுவே விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: “வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்னும் உம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். தேவனுடைய நாமத்தின் மகிமைக்கென்று நமது சகோதரி சுகமடைவாளாக. இயேசுவின் நாமத்தில் ஆமென். வீடு சென்று இதைக் குறித்து மறந்துவிடு. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டேயிரு. 138எப்படியிருக்கிறாய்? உன் ஆவியுடன் தொடர்பு கொள்ள அவ்விதம் கூறினேன். அம்மணி, இயேசு கிணற்றண்டையில், “தாகத்துக்குத் தா” என்று கூறினது போல. இப்பொழுது, நான் நம்புகிறேன்... உன்னை நான் இதற்கு முன்பு கண்டதில்லை என்று நினைக்கிறேன். நீ எனக்கு அறிமுகமாகாதவள் என்று எண்ணுகிறேன். அது சரியா? அது உண்மையானால், கூட்டத்திலுள்ளவர் காணத் தக்கதாக உன் கைகளையுயர்த்து. அந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. இப்பொழுது, இது உண்மையான சுகமளித்தல், இது உண்மையான விசுவாசம், உண்மையான வேதவசனம், கலப்படமற்ற தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு, அவர் மரித்த நிலையில் இல்லை, அவர் சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறார் என்பது நிரூபிக்கப்படுதல். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இந்த விசுவாசி வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பான், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். ஓ, அதை நீங்கள் எப்படி சந்தேகிக்க முடியும்? பாருங்கள்? அதை யார் விசுவாசிப்பார்கள் என்றும் யார் விசுவாசிக்க மாட்டார்கள் என்றும் அவருக்குத் தெரியும், எனக்குத் தெரியாது. அது அவரைப் பொறுத்தது. 139இந்த ஸ்திரீ எனக்கு அறிமுகமாகாதவள், அவளை எனக்குத் தெரியாது, அவளை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. இவள் ஒரு வாலிப ஸ்திரீ, என்னைக் காட்டிலும் மிகவும் இளையவள். அவளை நான் கண்டதில்லை. அவள் ஏதோ ஒரு நோக்கத்துக்காக இங்கிருக்கிறாள். ஸ்திரீயே, நான் வேதத்திலிருந்து போதித்தவை சத்தியம் என்று விசுவாசிக்கிறாயா? அவை சத்தியம் என்று விசுவாசிக்கிறாய். நான் கூறினதனால் அல்ல, தேவன் அதை கூறினதால் அதை ஏற்றுக் கொள்கிறாயா? மனுஷ குமாரன் வெளிப்பட வேண்டிய கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறாயா? அது லூத்தர், வெஸ்லி, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தே காலங்களில் அளிக்கப்பட்ட வார்த்தை அனைத்தும் ஒன்றிணைந்து, அது என்னவெனும் வெளிப்பாடு. ஏழாம் தூதன் ஏழு முத்திரைகளின் இரகசியத்தை திறந்து வெளிப்படுத்த வேண்டியவனாயிருக்கிறான். அவையனைத்தும் மனுஷ குமாரனில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும். காலத்தின் முழுமை அவருடைய வார்த்தையின் முழுமையை அடைந்து அவருடைய சரீரத்தின் முழுமையை தோன்றச் செய்கிறது. அப்படியானால் அது தான் வார்த்தை, உரைக்கப்பட்ட வார்த்தை, வார்த்தையினால் வெளிப்பட்டு, வார்த்தையை வெளிப்படுத்துகிறது.. 140உன் கோளாறு என்னவென்று தேவன் என்னிடம் கூறுவாரானால்... அவர் உன்னை உண்டாக்கினார். உன்னைக் குறித்து அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அவர் அதை வெளிப்படுத்தித் தருவாரானால்... நீ காண்பதற்கு ஆரோக்கியமுள்ளவளாக இருக்கிறாய். அவர் எனக்கு அதை வெளிப்படுத்தித் தருவாரானால், அது உண்மையா இல்லையாவென்று அறிந்து கொள்வாய். அதை அங்கீகரிப்பாயா? என்னை நோக்கிப் பார், நீ கண்ணாடி அணிந்திருக்கிறாய், அதை நீ அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் அதற்காக நீ இங்கு வரவில்லை. அது நகர்ந்து பின்னால் சென்றதை நான் காண்கிறேன், உனக்கு இரத்தம் உறைதல் (blood clot) ஏற்பட்டுள்ளதனால், நீ இங்கு வந்திருக்கிறாய். பார்? பார் அது எங்கு ஏற்பட்டுள்ளதென்று அவர் எனக்கு தெரிவிக்க முடியுமென்று நீ விசுவாசிக்கிறாயா?கால்களில் அதை கூறினது தேவன் என்று நீ விசுவாசிக்கிறாயா? உன்னைக் குறித்து தேவன் இன்னும் அதிகமாக எனக்கு தெரிவிக்க முடியுமென்று விசுவாசிக்கிறாயா? நீ எனக்குத் தெரியாதவள் என்பதனால் பரவாயில்லை... உன்னிடம் ஒரு நிமிடம் பேசட்டும். நீ எங்கிருந்து வருகிறாய் என்று அவர் எனக்குத் தெரிவிக்க முடியுமென்று விசுவாசிக்கிறாயா? நீ இந்தியானாவிலுள்ள காரி என்னுமிடத்திலிருந்து வருகிறாய். நீ யாரென்று அவர் எனக்குத் தெரிவிக்க முடியுமென்று விசுவாசிக்கிறாயா? திருமதி ஆக்டென். அது உண்மை. வீடு சென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குணமடைவாயாக. 141எப்படியிருக்கிறாய்? நாமும் ஒருவருக்கொருவர் அந்நியர். உன்னை எனக்குத் தெரியாது, பார். உன் கோளாறு என்னவென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்கு வெளிப்படுத்தித் தர முடியுமென்று விசுவாசிக்கிறாயா? (அந்த சகோதரி, “அது எனக்குத் தெரியும்” என்கிறாள் - ஆசி). அது உனக்குத் தெரியும். சகோதரியே, நன்றி. அது மிகவும் அருமையானது. சரி, அதை நீ அறிந்திருப்பதனால், உன் குடல் சரிவு (hernia) சரியாகிவிடும். உன் பக்கத்தில் சதை வளர்ந்துள்ளது. அது உண்மை அல்லவா? அது எந்த பக்கமென்று நான் கூற விரும்புகிறாயா? அது உன் வலது பக்கத்தில். அது முற்றிலும் உண்மை. உன் பாதையில் திரும்பிச் சென்று அதை விசுவாசி. நீ குணமடைவாய். நீ விசுவாசிக்கிறாயா? முற்றிலுமாக, இது சத்தியம். தேவனுடைய குமாரன், மனுஷ குமாரன், அவர் வாக்குத்தத்தம் பண்ணினபடியே காலங்களின் முடிவில் வந்திருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறாயா? உலகம் சோதோமின் நிலையில் உள்ளதென்றும், சோதோமைப் போல் அக்கினியினால் அழிக்கப்பட ஆயத்தமாயுள்ளதென்றும் விசுவாசிக்கிறாயா? சோதோம் தேசத்தார் புறஜாதிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் சோதோமில் சில நீதிமான்கள் இருந்தனர். அவர்களை வெளியே அழைக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார். சிலர் வெளியே வரவில்லை. பெரும்பாலோரர் அங்கேயே தங்கிவிட்டனர். ஆனால் அங்கே மலையின் மேல் ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. ஆபிரகாம். ஒரு தூதன் அவனிடம் வந்து என்ன நடக்கப் போகிறதென்பதை காண்பித்தார். ஆபிரகாம் அந்த ஆபத்தில் சிக்கிக் கொள்ளப் போகிறதில்லை. உலகம் இன்று அதே நிலையில் உள்ளது. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன், மனுஷ குமாரன், தாவீதின் குமாரன், அவர் தம்மை வெளிப்படுத்த வருகிறார். 142இந்த ஸ்திரீக்கு ஏதோ நடப்பதை நான் கவனிக்கிறேன். அவள் ஒரு பெரிய நோக்கத்துக்காக இங்கிருக்கிறாள். அவள் வியாதி சுகம் பெறுதலுக்காக இங்கு வரவில்லை. அவள் என்னிடம் என்ன கேட்க வேண்டுமென்றிருக்கிறாள் தெரியுமா? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற அவள் மேல் கைகளை வைக்க. பாருங்கள்? பாருங்கள்? அது உண்மை தானே? அது உண்மையானால் உன் கையையுயர்த்து. பாருங்கள், அவள் ஒரு பெரிய காரியத்தை நாடுகிறாள். அன்புள்ள பரலோகப் பிதாவே, உம்முடைய பிள்ளையாகிய இவளுக்கு அவளுடைய இருதயத்தின் வாஞ்சையை அருளுவீராக. அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவாளாக. அவள் அந்தப்படியே பெறுவாளாக. ஆமென். அதை நீ பெற்றுக் கொள்வாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ விசுவாசிக்கிறாயா? அங்குள்ள உன்னைக் குறித்தென்ன, நீயும் விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசித்தால் எல்லாம் கூடும். அதைக் குறித்து மிகவும் உத்தமமாக இருப்பவரே, பச்சை ஷாட் அணிந்துள்ளவரே. அந்த இரத்தம் உறைதல் உம்மை விட்டுப் போகுமென்று விசுவாசிக்கிறீரா? அது விட்டுப் போகும் என்று நீர் விசுவாசித்தால், உமது கையையுயர்த்தும், அது போய்விடும். அந்த மனிதனை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. அவர் எனக்கு முற்றிலும் அந்நியர். அவரை நான் கண்டதில்லை. 143கூட்டத்திலுள்ள மற்றவர்களே, இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இது அவராகத்தான் இருக்க வேண்டும் என்பதை உங்களால் காண முடியவில்லையா? புற்றுநோயை சுகப்படுத்துவது தேவனுக்கு கடினமான காரியம் அல்ல. அவர் அதை குணமாக்குவார். இல்லையா? அவர் குணமாக்குவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா சரி. நீங்கள் சென்று, அதை இயேசுவின் நாமத்தில் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். ஹை, தேனே. உன் இரத்தம் சரியாவதற்காக இயேசு தமது இரத்தத்தை சிந்தினார் என்று உனக்குத் தெரியுமா? அதை நீ விசுவாசிக்கிறாயா? அன்புள்ள தேவனே, இந்த பிள்ளையை நான் ஆசீர்வதிக்கிறேன். கல்வாரியின் இரத்தம் இவளுக்குள் செலுத்தப்படட்டும். கர்த்தாவே, சர்க்கரையை நீக்கிப் போட்டு அவளை குணமாக்கும், இயேசுவின் நாமத்தில் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ எப்படியிருக்கிறாய்? அவர் அந்த முதுகை குணமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறாயா?(அந்த சகோதரன், அவரால் முடியும் என்று அறிவேன் என்கிறார் - ஆசி). சரி, நீ போய், அதை விசுவாசி. விசுவாசம் கொண்டவனாயிரு. உன் மேல் நான் கைகளை வைக்கட்டும். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார். சகோதரனே. நீ விசுவாசிக்கிறாயா? உண்பதற்கு அவர் உணவை உண்டாக்கினார். அதை ஜீரணிக்க அவர் வயிற்றை உண்டாக்கினார். வயிற்றில் கோளாறு ஏற்படும்போது, அவரே அதை சுகப்படுத்துகிறவர். அதை நீ விசுவாசிக்கிறாயார் சரி, அவ்வளவு தான் நீ அறிந்து கொள்ள வேண்டியது. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி உனக்கும் அதே கோளாறு இருப்பதால், நீயும் போய் உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. 144பரவாயில்லை, அந்த பெண்ணைக் கொண்டு வாருங்கள். எப்படியிருக்கிறாய்? அழகான சிறுபெண், ஸ்திரீகளுக்கான கோளாறு ஏற்படுவதற்கு மிகவும் சிறியவள். இயேசு அதை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா அன்புள்ள தேவனே, இந்த சிறு பெண், இந்த சத்துருவை சபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் அது அவளை விட்டுப்போவதாக. அவள் சுகமடைவாளாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நீ விசுவாசிக்கிறாயா? ஒரு கறுத்த நிழல் அசைந்து கொண்டிருக்கிறது. மரணம். புற்று நோய்... தேவன் புற்று நோயை குணமாக்க வல்லவர். அதை உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அவர் உனக்கு சுகமளிக்கப் போகிறார் என்று விசுவாசிக்கிறாயா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சபிக்கப்பட்ட இந்த குறுக்கு மீன்களை நான் சபிக்கிறேன். கிறிஸ்துவின் சிலுவை அதை எடுத்துப்போட்டு, அது அகன்று போகும்படி செய்வதாக, இயேசுவின் நாமத்தில் சந்தேகப்படாதே, நீ போய் உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. ஆமென். நீ விசுவாசித்தால், எல்லாம் கூடும். எப்படியிருக்கிறாயா நீ விசுவாசித்தால் உன் மூட்டு வீக்கம் உன்னை விட்டகன்று நீ சுகமடைவாய். அப்படியானால், நீ சுகமடைந்து மறுபடியும் நடக்க முடியுமென்று விசுவாசிக்கிறாயா? இந்த அருமை சகோதரியை கர்த்தர் ஆசீர்வதித்து, இயேசுவின் நாமத்தில் சுகமளிப்பாராக. உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து போ. 145அதே காரியம் உனக்கும் சம்பவிக்கும் என்று விசுவாசிக்கிறாயா நல்லது. அது சம்பவித்துவிட்டதென்று நினைக்கிறேன். நீ... நீ இப்பொழுதே சுகமடைந்துவிட்டாய் என்று விசுவாசித்தால். அது உன்னை விட்டு போய்விட்டதென்று நானும் கூட விசுவாசிக்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நமது சகோதரன் சென்று தேவனுடைய மகிமைக்கென்று சுகமடைவாராக. ஆமென். அது முடிவில் நடந்துவிட்டது. அங்கு அழுது கொண்டு உட்கார்ந்திருப்பவரே, உமது மூல வியாதி உம்மை விட்டுப்போய் விடுமென்று விசுவாசிக்கிறீரா? அவர் கடைசி அரை மணி நேரம் வரைக்கும் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார். இப்பொழுது அந்த மனிதனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். நீர் விசுவாசித்துக் கொண்டிருந்தீர் அல்லவா? உம் முழு இருதயத்தோடும் விசுவாசித்து, டெக்ஸாஸுக்கு திரும்பிச் சென்று குணமடைவீராக. அந்த மனிதனை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. அந்த முதுகு நன்றாகி, நீர் சுகமடையப் போகிறீர் என்று விசுவாசிக்கிறீரா? கர்த்தராகிய இயேசுவே, அதை தொட்டு சுகப்படுத்துவீராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். உமது முழு இருதயத்தோடும் விசுவாசியும் 146இப்பொழுது அந்த ஆவி அருகில் வருகிறது. அது கட்டிடம் முழுவதிலும் உள்ளது. அது எங்கிருந்து வருகிறது என்று கூறுவது கடினம், நரம்புத் தளர்ச்சி. உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். உங்களில் எத்தனை பேர் நரம்புத் தளர்ச்சியால் அவதியுறுகிறீர்கள். உங்கள் கையையுயர்த்துங்கள். பாருங்கள், அது எதுவென்று கூறுவது கடினம். ஆனால் தேவன் அதைக் குறித்து எல்லாவற்றையும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் அறிந்திருக்கிறார். அவைகளை மேற்கொள்ள நீங்கள் எல்லாவற்றையும் முயன்றுவிட்டீர்கள். வாழ்க்கையில் அநேக காரியங்களை நீங்கள் விட்டு விட வேண்டுமென்று முயற்சி செய்கிறீர்கள். உங்களிலுள்ள எல்லாவற்றைக் கொண்டும் நீங்கள் தேவனைச் சேவிக்க விரும்புகிறீர்கள். ஆனால் ஏதோ ஒன்று உங்களுக்கு தடையாயிருந்து வருகிறது. அது இப்பொழுதே இன்று காலையில் நடக்குமென்றும், நீங்கள் அவைகளினின்று பரிபூரண விடுதலை அடைவீர்கள் என்றும் விசுவாசிக்கிறீர்களா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எங்கள் பரலோகப் பிதாவே, நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று இந்த மற்றவர் காணத் தக்கதாக, இங்கு நின்று கொண்டிருக்கும் இந்த அருமையான ஸ்திரீக்கு சுகமளிப்பீராக. பிதாவே, இவளை அமைதியாயிருக்கச் செய்வீராக. கர்த்தாவே, இவள் எவ்வளவாக கஷ்டப்படுகிறாள் என்று நாங்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம். இவளை நீர் குணமாக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம் எல்லா விசுவாசத்தோடும் என் கைகளை இவள் மேல் வைக்கும் இந்நேரத்தில், எனக்கும் இப்பொழுது அந்த தாக்குதல் ஏற்படுகிறது, களைப்படைந்தவனாய், சாத்தான், அதிகமாக வேலை செய்து, நரம்புகள் கெட்டுவிட்டன. சாத்தானே, இவளை விட்டுப்போ. அவரை விசுவாசித்துக் கொண்டே போ. அதை தான் நான் செய்ய வேண்டுமென்று விரும்பினாய். 147உன்னை எனக்குத் தெரியாது, நீ எனக்கு அந்நியன். நீ விசுவாசித்தால் அந்த குடல் சரிவு குணமாகும். வேறொரு காரியம், உனக்கு மூட்டு வீக்கம் உள்ளது. நீ விசுவாசித்தால் குணமடைவாய். உன் முதுகு கோளாறு உன்னை விட்டகன்றது. விசுவாசித்து, போ. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களார் இங்கு, அந்த... எத்தனை பேர்... வரிசையில் இவ்வளவு பேர் தானா? வேறு வரிசை உண்டா? வியாதியஸ்தர் மேல் என் கைகளை வைக்க நீங்கள் எல்லாரும் இங்கு கடந்து செல்லுங்கள். ஒரு நிமிடம் நாம் தலைவணங்குவோம். இப்பொழுது பகல் ஒரு மணி கடந்துவிட்டது. அன்புள்ள தேவனே. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இங்கிருக்கும் போது, என் சகோதரியின் மேல் என் கைகளை வைக்கிறேன். இவளை குணமாக்குவீராக இயேசுவின் நாமத்தில் அன்புள்ள பரலோகப் பிதாவே, என் சகோதரனின் மேல் நான் கைகளை வைத்து... (ஒலிநாடாவில் காலி இடம், சகோ. பிரான்ஹாம் வியாதியஸ்தருக்கு தொடர்ந்து ஜெபிக்கிறார் - ஆசி)... விசுவாசி. 148சகோதரனே, உமக்கு ஜெபம் ஏறெடுக்கப்படவில்லையா? (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி)... சகோதரனே, இவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் மான் வேட்டையாடுபவர். மானை வேட்யைாடும் துப்பாக்கி அவரிடம் உள்ளது, இப்பொழுது வேட்டையாட முடியாதபடிக்கு அவருக்கு அதிக வயதாகிவிட்டதால் அந்த துப்பாக்கியைக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்க விரும்புகிறார். ஆமென். நாம், 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்வோம். (சபையோர், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்கின்றனர் - ஆசி). நான் அவரை நேசிக்கிறேன் (உங்கள் கேள்விகளை மறந்துவிடாதீர்கள், இங்கு வைத்துவிடுங்கள், இன்று வைக்காவிட்டால், புதன் அல்லது ஞாயிறு கொண்டு வாருங்கள்) முன்பு அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார்... (நீங்கள் எல்லோரும் ஜெப வரிசையில் இருந்தீர்களா? ஜெப வரிசையில் ) இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 149அவர் எவ்வளவு இனியவராக நமக்கு இருக்கிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் தமது வார்த்தையை நிருபிக்கிறார்! பாருங்கள்? இப்பொழுது பாருங்கள். என்னால் சுகப்படுத்த முடியுமானால், அது வித்தியாசமாயிருக்கும். பாருங்கள், ஆனால் அவர் ஏற்கனவே அதை செய்துவிட்டார். பாருங்கள், எனவே அவருடைய பிரசன்னத்தை அவர் இங்கு நிருபிக்கிறார். “மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்”. அவரைப் போல் ஒரு மனிதனும் இருந்ததில்லை. அவர் நிகரற்ற ஒரு மனிதன். அவர் தேவன். பாருங்கள்? அவர் வாழ்ந்ததைப் போல் எந்த மனிதனும் வாழ்ந்ததில்லை. அவர் பிறந்ததைப் போல் எந்த மனிதனும் பிறந்ததில்லை. அவர் செய்தது போல் எந்த மனிதனும் செய்ததில்லை. அவர் மரித்தது போல் எந்த மனிதனும் மரித்த தில்லை. அவர் மரித்தோரிலிருந்து எழுந்தது போல் எந்த மனிதனும் எழுந்ததில்லை. நீங்கள், “ஓ, சகோ. பிரான்ஹாமே, ஒரு நிமிடம் பொறும், மற்றவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டனர் எனலாம். ஆம், ஆனால் அவர்கள் மறுபடியும் மரித்தனர். இவரோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். பாருங்கள்? யாருமே அவரைப் போல் உயிரோடெழுந்ததில்லை. அவர் மரித்தோரிலிருந்து எழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். (சகோ. பிரான்ஹாம் “நான் அவரை சேக்கிறேன் என்னும் பாடலை மௌனமாக இசைக்கிறார் - ஆசி). இந்த பாடலை அவருக்கு இப்பொழுது பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் 150நாம் தலைவணங்குவோம். கர்த்தராகிய இயேசுவே, இந்த ஜனங்களை நான் நேசிக்கிறேன். கர்த்தாவே, இவர்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துவிட்டேன். அவ்விதம் செய்ய வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. இங்கு அநேகர் சிறு பிள்ளைகளுடன் காத்திருக்கின்றனர். பிள்ளைகள் பசியாயுள்ளனர், அவர்களுக்குப் புரிவதில்லை. இருப்பினும் அவர்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனெனில் மனுஷன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினால் மாத்திரம் பிழைப்பான் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். பிறகு வார்த்தை உரைக்கப்பட்டு, அது அறியப்பட்டு, வெளிப்பட்டு, நிரூபிக்கப்படும்போது, அது நீராகத் தான் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறேன். பிதாவே, இவர்களை ஆசீர்வதியும். எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள பிரயாணத்தில் அவர்கள் ஆரோக்கியமாயும், திடகாத்திரமாயும், இருப்பார்களாக. இந்த வாரம் முழுவதும் அவர்களை ஆசீர்வதியும். கர்த்தாவே, உமக்கு சித்தமானால், நாங்கள் மறுபடியும் அடுத்த ஞாயிறன்று, அடுத்த ஓய்வு நாளன்று இங்கு மறுபடியும் சந்தித்து உம்மை ஆராதிக்க அவர்களுக்கு பெலனைத் தர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். சிலர் வராமல் போகலாம், சிலருக்கு நாட்டின் பல்வேறு பாகங்களில் வீடுகள் இருக்கக் கூடும். ஒருவேளை கடல் கடந்து அல்லது நாட்டுக்கு வெளியில் அவர்களுடன் கூட நீர் இருந்து அவர்களுக்குதவி செய்ய வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம். என்றாகிலும் ஒரு நாள் நாம் இயேசுவின் பாதங்களில் சந்திக்கலாம். பிதாவே, இதை அருளும். எங்களுக்கு இப்பொழுது உதவி செய்யும் நாங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, உம்மை விசுவாசித்து, எங்கள் இருதயங்களை தற்பொழுது ஒன்றாக பிணைக்கும் கயிறு, என்றாகிலும் ஒரு நாள் நித்திய கயிறாக இருந்து, நித்திய காலமாக நான்கு பக்கமும் சமமான சதுரமுள்ள அந்த நகரத்தில் வாழ்வோமாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். சரி. இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் துயரும்... (ஓருவரோடொருவர் இப்பொழுது கைகுலுக்குங்கள்)... பிள்ளையே அது மகிழ்ச்சியும்... (திரும்பி யாருடனாவது கைகுலுக்கி, “இன்று காலை உங்களுடன் கூட இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறுங்கள்) எங்கு சென்றாலும் அதை கொண்டு செல் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! (தேவன் உங்களை ஆசர்வதிப்பாராக) பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம், ஓ, என்ன இனிமை! பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் இப்பொழுது, இதைக் கேளுங்கள், இவ்விதம் பாடுங்கள்: இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்) சோதனைகள் உன்னை சூழ்ந்து கொள்ளும்போது (என்ன செய்வது?) அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்), ஓ, என்ன இனிமை பூலோகத்தின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம் விலையுயர்ந்த நாமம்! ஓ, என்ன இனிமை!